உத்துசான் ஆசிரியர்: எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்கு விஷயங்களைத் திரிப்பது சரியே

வாசகர்களுக்கு ‘விரும்பப்படும் தோற்றத்தை’ வழங்குவதற்கு விஷயங்களைத்  திரித்து செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உத்துசான் மலேசியாவின் துணைத் தலைமை ஆசிரியர் முகமட் ஜைனி ஹசான் கூறினார்.

விஷயங்களைத் திரித்துக் கூறுவது எதிர்க்கட்சிகள் மீது “நாகரீகமாக தாக்குதல்” (serangan berhemah)  தொடுப்பதற்கான வழிகளில் ஒன்று என முகமட் ஜைனி சொன்னார்.

தேசிய அரசியல் அரங்கில் பிஎன் அரசாங்கம் “வழக்கு விசாரணைக்கு” உட்பட்டிருக்கும் நிலைக்கு “எதிர்க்கட்சிகள் பொது மக்களுடைய எண்ணங்களை உருவகப்படுத்தியுள்ளதாக” அவர் கூறிக் கொண்டார்.

நாங்கள் எங்கள் எழுத்துக்களில் விஷயங்களை வெளியிடுகிறோம். விஷயங்களைத் திரிக்கிறோம். மேலும் ஒன்று -அப்பட்டமான பொய்கள் அது தான் எங்கள் பாணி.”

மனோதத்துவப் போர் அடிப்படையில் “அப்பட்டமான பொய்களை’ பின்பற்றக் கூடாது. பொய்களை எழுதக் கூடாது.”

“ஆனால் விஷயங்களைத் திரிக்கலாம். ஒரு விஷயம் நமக்குச் சாதகமாக இருக்கும் பொருட்டு எப்படி வேண்டுமானாலும் நாம் அதனைத் திரிக்கலாம்.”

கோலாலம்பூர் தி ரிஜன்சி ஹோட்டலில் பிடிஎன் என்ற Biro Tata Negara ஏற்பாடு செய்த சமூக ஊடகம் மீதான கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார்.

“சமூக ஊடகம்: பிரச்னைகளை சமாளிப்பது, மக்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவது” என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரே மலேசியா நிகழ்வு அந்தக் கருத்தரங்கு ஆகும்.

பிஎன் வெற்றிக்கு ஊடகங்கள் முக்கியமானவை

அண்மைய காலமாக சமூக ஊடங்களில் நடத்தப்படும் மனோதத்துவப் போர் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக இருப்பதாக ஜைனி குறிப்பிட்டார்.

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவில் ‘Cuit’ பகுதியில் ஜைனி பிரபலமானவர்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பணம், தேர்தல் எந்திரம் ஆகிய அம்சங்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய ஊடகங்கள் முக்கியமான பங்காற்றுவதை அவர் ஒப்புக் கொண்டார்.

“மலேசியச் சூழலில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஊடகங்கள் தலையாய பங்கை ஆற்றுகின்றன,” என்றார் ஜைனி.

 

TAGS: