மலாக்கா கோத்தா லக்ஸ்மாணா சட்டமன்ற உறுப்பினர் பெட்டி சியூ-வும் தமது கணவருடன் உறவு வைத்துள்ளதாக பிஎன் கூறிக் கொள்கின்ற பெண்ணும் கூட்டாக நிருபர்களைச் சந்திக்க வேண்டும் என உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த விவகாரம் மீது இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்காததால் கூட்டு நிருபர்கள் சந்திப்பு அவசியம் என உத்துசான் மலேசியாவின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியாவில் வெளியாகியுள்ள Bisik-Bisik பகுதியில் ‘அவாங் செலாமாட்’ கூறியுள்ளார்.
சியூ-வின் கணவரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங்-கிற்கு அவரது அலுவலகத்தை சார்ந்த முன்னாள் ஊழொயர் ஒருவருக்கு ‘தொடர்பு’ இருப்பதாக பிஎன் ஆதரவு வலைப்பதிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உத்துசான் ஏற்கனவே அந்தப் பெண்ணின் பெயரையும் படத்தையும் வெளியிட்டுள்ளது.
“அந்த இரண்டு பெண்களுக்கும் அசௌகரியமாக இருந்தால் லிம் இடையில் அமர்ந்து கொள்ளலாம்,” என அந்த நாளேட்டின் மூத்த ஆசிரியர்களுக்கான புனை பெயர் எனக் கருதப்படும் அவாங் செலாமாட் கூறினார்.
லிம்-உடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண் இதுகாறும் குற்றச்சாட்டுக்களை மறுக்காததும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அந்தக் கட்டுரையில் அவாங் செலாமாட் குறிப்பிட்டுள்ளார்.