கூட்டணியில் இருக்கும் போது கட்சிக் கொள்கைகள் பின்னுக்குப் போக வேண்டும்

 “ஹுடுட் விவகாரம் நிரந்தரமாகத் தீர்க்கப்படாத வரையில் பக்காத்தான் தனது வீட்டை சீராக வைத்திருக்க முடியாது எனத் தோன்றுகிறது. புத்ராஜெயாவை கைப்பற்றுவது அவ்வளவுதான்.”

 

 

 

ஹுடுட் சட்டத்தை கிளந்தான் அமலாக்குவது மீது பக்காத்தான் இணக்கம் காணத் தவறியது

நியாயமானவன்: தனிப்பட்ட முறையில் யாருக்கும் அவமானம் ஏற்படாமல் நடப்பு நிலையை தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு சிறந்த தீர்வாக அது தோன்றுகிறது. ஆனால் அது எவ்வளவு காலத்துக்கு? 13வது பொதுத் தேர்தல் முடியும் வரையிலா?

பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில் ஹுடுட் மீது காணப்படும் சித்தாந்த வேறுபாடு வெள்ளிடை மலை. அந்த விவகாரம் மீண்டும் கொழுந்து விட்டு எரிவதற்கு சிறிய பொறி போதும்.

ஹுடுட் விவகாரம் நிரந்தரமாகத் தீர்க்கப்படாத வரையில் பக்காத்தான் தனது வீட்டை சீராக வைத்திருக்க முடியாது எனத் தோன்றுகிறது. புத்ராஜெயாவை கைப்பற்றுவது அவ்வளவுதான்.

இப்போது மக்களுக்கு உள்ள தேர்வு இதுதான். ஒன்று தெரிந்த பேய். இன்னொன்று தெரியாத பேய். தேர்வுகள் அவ்வளவாக இல்லை. சரி தானே?

ரூபன் சான்: என்னைப் போன்ற முஸ்லிம் அல்லாதவர்கள் ஹுடுட் சட்டம் பற்றிக் கவலைப்படவில்லை. அச்சம் சட்டத்தைப் பற்றியதல்ல. அதன் அமலாக்கமே அச்சத்தைத் தருகிறது.

அண்மைய சிரம்பான் சம்பவத்தை அல்லது உள்துறை அமைச்சு வழியாக பிஎன் அரசாங்கம் தொடரும் அல் கித்தாப் பிரச்னையைப் பாருங்கள். அந்த விஷயங்களில் பாஸ் கட்சி பிஎன் அரசை விட நாகரீகமான நிலையைக் கடைப்பிடித்துள்ளது.

ஊழலான மேலும் ஊழலான கட்சிக்கு “அடி பணியும்” பயனில்லாத கட்சிகளைக் காட்டிலும் பிரச்னைகளை விவாதித்து இணக்கம் இல்லை  என ஒப்புக் கொண்டு தங்கள் நிலையை வழுவாது பின்பற்றும் அந்த இரு கட்சிகளுக்கும்  வாக்களிப்பதையே நான் விரும்புகிறேன்.  

நல்ல சகுனம்: திருடியதாகத் தீர்ப்பளிக்கப்படும் ஒருவருடைய கைகளை துண்டிப்பதற்கு ஹுடுட் வகை செய்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?

அவ்வாறு தண்டிக்கப்பட்ட நபர், சொந்தமாக உழைத்து வருமானம் தேட முடியாது. அப்போது சமுதாயமே அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆகவே இன்னொருவருக்கும் உணவு தேட வேண்டிய சுமை சமூகத்தின் மீது விழுகிறது. அதனால் எந்தத் தப்பும் செய்யாமல் நாம் அனைவரும் தண்டிக்கப்படுகிறோம்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர், சமூக சேவை வழியாக சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துமாறு பணிக்கப்பட்டால் நீதி நிச்சயம் கிடைக்கும். ஹுடுட் நல்லது என எத்தனை முஸ்லிம்கள் எண்ணுகின்றனர்.

முகமட் யூசோப்: ஹுடுட் சட்டம் நாம் இன்னும் ஆய்வு செய்து கற்றுக் கொள்வது நல்லது என நான் நினைக்கிறேன். மற்றவர்கள் சொல்வதை வைத்து நாம் கருத்து சொல்லக் கூடாது.

இஸ்லாம் மக்களை எளிதாக தண்டிப்பதில்லை. இஸ்லாம் மிகவும் அற்புதமான சமயம். அதனை நான் இப்போதுதான் கண்டு பிடித்தேன். ஹுடுட் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும். முஸ்லிம் அல்லாதவருக்கு அல்ல. இவை என் சிந்தனைகள்.

நியாயமானவன்: முகமட் யூசோப், வேறு ஒரு சமயத்தை சார்ந்த சக மலேசியன் என்னும் முறையில் இஸ்லாம் அற்புதமான சமயம் என்பதை நான் உங்களுடன் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் முஸ்லிம்களின் குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களுடைய நடவடிக்கைகளை பொறுத்தத் தானே முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த முடிவுக்கும் வர முடியும்?

நமது பல இன நாட்டுக்கு வருவோம். காலஞ்சென்றவருடைய குடும்பத்துக்கு நள்ளிரவு நேரத்தில் சம்மனை வழங்குமாறு போலீசாரைப் பணித்ததின் மூலம் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய விவகாரத் துறை எதனை சாதிக்க விரும்புகிறது?

பெரும்பாலான மலேசியர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள். அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நான் நிச்சயம் நம்புகிறேன்.  

டேவிட் தாஸ்: நாம் முன்னேற்றகரமான சமுதாயம். “கண்ணுக்கு கண்” என்பது போன்ற தண்டனைகள் இன்றைய கால கட்டத்துக்குப் பொருந்தாது.

அந்நிய முதலீடுகள், சுற்றுலா போன்றவை மீது உடனடியான தாக்கம் இருக்கும். நம் மக்கள் புலம் பெயருவது அதிகரிக்கும்.

ஹுடுட்: பக்காத்தானில் சமரசம் தேவை.

TAGS: