ஒராங் அஸ்லி பிள்ளைகள் மீது ஆசிரியர்கள் சமயத்தைத் திணிக்கக் கூடாது

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதிப்பதற்கு ஆசிரியர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு சில ஆசிரியர்கள் துரோகம் செய்து விட்டதே இதற்குக் காரணம் என நான் நம்புகிறேன்

துவா ஒதாததால் ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டனர்

திமோதி: ஒராங் அஸ்லி மக்களையும் சபா, சரவாக்கில் உள்ள சுதேசிகளையும் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் கொண்டுள்ள ரகசியத் திட்டம் ஊரறிந்தது. 

சில ஆவணங்கள் காட்டப்படும் வரையில் பலருக்குத் தாங்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளது கூடத் தெரியாது. களத்தில் இறங்கி அவர்களுடன் பேசிப் பாருங்கள். உண்மை தெரியும். அது பெரிய மலையின் முகடு தான்.

தேசியப் பள்ளிக்கூடங்கள் எனக் கூறப்படுகின்றவற்றிலும் இதே நிலை தான். நான் அதனை நேரில் பார்த்துள்ளேன். என் பிள்ளைகள் திறந்த திடலில் நின்று கொண்டு உஸ்தாஜ் துவா ஒதுவதை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பிள்ளைகள் அந்த இளம் வயதில் அவர்களுடைய சமயம் குறித்து உஸ்தாஜ் கேள்வி எழுப்புவதையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

அது என்ன தேசியப் பள்ளியா அல்லது சமயப் பள்ளியா ?

சபாக்காரன்: ஒராங் அஸ்லி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதிப்பதற்கு ஆசிரியர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு சில ஆசிரியர்கள் துரோகம் செய்து விட்டதே இதற்குக் காரணம் என நான் நம்புகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு என் அண்டை வீட்டுக்காரருடைய புதல்வி, முஸ்லிம் அல்லாத பூமிபுத்ராவுக்கு தீவகற்ப மலேசியாவில் உள்ள மாரா இளநிலை அறிவியல் கல்லூரியில் இடம் கொடுக்கப்பட்டது.

நோன்பு மாதத்தின் போது பகல் நேரத்தில் அவருக்கும் கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த சில முஸ்லிம் அல்லாத பூமிபுத்ராக்களுக்கும் பள்ளிக் கூடம் பகல் நேரத்தில் உணவு வழங்க வேண்டியிருந்தது.

நோன்பு மாதத்தில் சமையலறை ஊழியர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருக்கும் பொருட்டு அவர்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் என வெகு விரைவில் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

என் அண்டை வீட்டுக்காரர் தமது புதல்வியை அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து அகற்றி விட்டார்.

தவறான நோக்கங்களைக் கொண்ட சில ஆசிரியர்களினால் அந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

Lawan Tetap Lawan: அது மட்டும் வேறு விதமாக இருந்தால் போலீஸ் துணையுடன் தெரு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கும். அந்த ஆசிரியர் நீக்கப்பட வேண்டும் என எம்பி-க்கள் கோரிக்கை விடுத்திருப்பார்கள்.

லம்போர்கினி: ஒராங் அஸ்லி மக்கள் நீண்ட காலமாகவே மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் இந்த நாட்டின் உண்மையான சுதேசி மக்கள். உண்மையான பூமிபுத்ராக்கள்.   என்றாலும் அவர்கள் நமது குடி மக்களில் மிகவும் தாழ்வான நிலையில் அவர்கள் நடத்தப்படுகின்றனர்.

அறியாமையால் அவர்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன. அவர்கள் நிலங்கள் திருடப்பட்டுள்ளன. தாங்கள் தேர்வு செய்த ஒரு மதத்திற்கு மாறுமாறு அவர்கள் இப்போது கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

ஒராங் அஸ்லிக்களை மருட்டுகின்றவர்களுக்கும் அவர்களுடைய அறியாமையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றவர்களுக்கும் ஒன்று சொல்கிறேன். இறைவனுக்கு அஞ்சி அதனை நிறுத்திக் கொள்ளுங்கள்.

நாம் அவர்கள் கல்வி கற்கவும் ஆரோக்கியமாக வாழவும் மரியாதைக்குரிய குடிமக்களாகத் திகழவும் உண்மையில் உதவ வேண்டும்.

அந்த உண்மையான பூமிபுத்ராக்களுக்கு நமது உண்மையான உதவியும் கருணையும் ஆதரவும் தேவை. நமது பேராசையும் தீய எண்ணங்களும் கொடூர நடவடிக்கைகளும் வேண்டாம்.

ஒன்றுமறியாத ஒராங் அஸ்லி பிள்ளைகளை அறைந்த சம்பந்தப்பட்ட ஆசிரியரும் அவரைப் போன்ற மற்றவர்களும் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

2zzzxxx: அவர்கள் முஸ்லிம் பிள்ளைகளாக இருந்து முஸ்லிம் அல்லாத பிரார்த்தனையை சொல்லாததற்காக அறையப்பட்டிருந்தால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

இன்னேரம் ஜாத்தி தலைவர் ஹசான் அலியும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியும் அம்னோவில் உள்ள அனைவரும் சாலைகளில் இறங்கி அந்த ஆசிரியர் தூக்கில் போடப்பட வேண்டும் என கூச்சல் போட்டிருப்பார்கள்.

ஜெரோனிமோ: மலாய் ஆசிரியர்கள் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதை சீனக் கல்வியாளர்கல் ஏன் எதிர்க்கின்றனர் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

பெரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகின்றது. பிரதமர் செயிண்ட் ஜான் பள்ளியில் படித்த போது லா சாலே சகோதரர்கள் அவர் சாப்பிடுவதற்கு முன்னர் கிரேஸ் சொல்ல வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார்களா ?  நிச்சயமாக இருக்காது.
——————————————————————————–

TAGS: