உங்கள் கருத்து: ‘ஊழல் நிறைந்த அம்னோ குட்டையில் தூய்மையான மீன்கள் எதுவும் கிடையாது. திருடர்களிடையே மோதல் தொடங்கி விட்டது’
நஸ்ரி ஒர் அரசியல் சுமையாகலாம் என்கிறது ஜேஎம்எம்
குழப்பம் இல்லாதவன்: சட்டத்துறைக்குப் பொறுப்பான நஸ்ரி அப்துல் அஜிஸ் மட்டும் அரசியல் சுமை அல்ல. பிஎன் ஆட்சி முழுமையுமே நாட்டின் எதிர்காலத்துக்கு சுமையாக இருக்கின்றது.
கடந்த காலத் தவறுகள், சம்பவங்கள், சூழ்நிலைகள் ஆகியவை அன்றாடம் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன. அவை பிஎன் ஆட்சியின் சவப்பெட்டியில் ஆணிகளை அடித்துக் கொண்டிருக்கின்றன.
ஈப்போகிரைட்: ஊழல் நிறைந்த அம்னோ குட்டையில் தூய்மையான மீன்கள் என எதுவும் கிடையாது. Jaringan Melayu Malaysia (JMM) அமைப்பின் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா கற்றுக்குட்டியைப் போலப் பேசுகிறார். அல்லது அம்னோ வர்க்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொள்ளும் மறைமுகமான நோக்கத்துடன் அவர் தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்கிறாரா ? திருடர்களிடையே மோதல் தொடங்கி விட்டது.
Ex-wfw: அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் சரவாக், சபா முதலமைச்சர்கள், நெகிரி செம்பிலான் மந்திரி புசார், பல அமைச்சர்கள் அல்லாமல் எப்படி நஸ்ரி மட்டும் சுமையாக முடியும் ?
ஏன் நஸ்ரி மட்டும் போக வேண்டும் ? இப்போது அவர்கள் தேசியப் பாதுகாப்பு கௌரவம் பற்றிப் பேசுகின்றனர். என்ன கௌரவம் ?
பூட்ஸி: நான் அதனை அரசியல் சுமை எனச் சொல்ல மாட்டேன். உலகின் பார்வையில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து விட்ட முழு குழுவின் அரசியல் தற்கொலையே அதுவாகும்.
பெர்ட் தான்: நஸ்ரி நினைத்ததைப் பேசுவதால் அவருக்கு அம்னோவிலும் வெளியிலும் எதிரிகள் இருக்கின்றனர். அம்னோ சார்பு ஜேஎம்எம் தொடங்கிய சர்ச்சையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சேர்ந்தாரோ அப்போதே நஸ்ரியின் அரசியல் வாழ்க்கை விரைவாகவோ பின்னரோ முடிவுக்கு வந்து விடும்.
தமக்கு தோதாக இருக்கும் வரை மகாதீர் எதனையும் எளிதாக மறந்து விடுவார். ஆனால் அவமானத்தை மட்டும் மறக்க மாட்டார். நஸ்ரி ஒரு முறை பெயரைச் சொல்லியே அவரை வெளிப்படையாகவே அவமானப்படுத்தியுள்ளார்.
முகமட் மஸ்லான் காமிஸ்: மகாதீர் சொல்வது போல நஸ்ரி நீண்ட காலத்துக்கு முன்பே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். அவர் ஒரு சுமை என்பது உண்மையே. எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவரையும் அவரது குடும்பத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்_40c3: ஜேஎம்எம் இவ்வாறு சொல்கிறது: “நாங்கள் நாடு, நாடாளுமன்றம் ஆகியவற்றின் பாதுகாப்பு, இறையாண்மை குறித்தே அதிகமாக வலியுறுத்துகிறோம்.”
பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புணர்வு என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றனரா ? அவர்கள் அதனை விவாதங்களில் அலட்சியம் செய்கின்றனர்.
அபாஸிர்: ஊழல் விவகாரங்களை கவனிக்கும் அமைச்சர் தூய்மையான தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும். பெரிதும் மதிக்கப்பட வேண்டும்.
நஸ்ரிக்கு தூய்மையான தோற்றமோ மரியாதையோ இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆகவே அது குறித்து அம்னோ என்ன செய்யப் போகிறது ? வெற்றி பெறும் வேட்பாளர் என அவரை தேர்தலில் நிறுத்தப் போகிறதா ?
அஸாம்கோ: பிகேஆர் ராபிஸி இஸ்மாயில் ‘அம்பலப்படுத்தும்’ விஷயங்கள் அரசியல் அச்சுறுத்தல் ( blackmail )என ஜேஎம்எம் சொல்வது அபத்தமானது.
உயர் நிலையில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் சம்பவங்களை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், போலீஸ் போன்றவை தவறி விட்டதால் நீங்கள் அரசாங்கத்தையே சாட வேண்டும்.
ஊழல் நடைமுறைகள் அதுவும் உயர் மட்டத்தில் நிகழ்கின்றவற்றை தடுக்கா விட்டல் நாடே வீழ்ச்சி காணும். அதனால் மக்களுக்கு பெரும் துயரம் ஏற்படும்.
அடையாளம் இல்லாதவன்_3ec6: பிஎன் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பது அம்னோ ஆதரவு அரசு சாராஅமைப்புக்களுக்குத் தெரிந்து விட்டது. மூழ்கும் கப்பலிலிருந்து எலிகள் ஒடுவதைப் போல அவை வெளியேற துடிக்கின்றன.
Apa Ini?: அஸ்வாண்டின் அவர்களே ! விவேகமான நடவடிக்கை. யார் அதற்கு பின்னணியில் இருக்கின்றனர் ?ஆனால் நீங்கள் வெட்டுமர வணிகரான மைக்கல் சியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீங்கள் ஏன் கூச்சல் போடக் கூடாது ? அவரும் ஊழல் புரிந்துள்ளார் தானே ?