அந்த ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்ய பிரதமர் வாக்குறுதி அளித்துள்ள போது ஏன் இந்த இட மாற்றம் ?

“அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் வெற்றி பெற்றால் அந்த கொண்டோ திட்டத்தை நிறுத்துவதாக நஜிப் வாக்குறுதி அளித்தார். அடுத்து பிஎன் நிர்வாகம் செலாயாங் நகராட்சி மன்றத் தலைவரை இடமாற்றம் செய்கின்றது”

கொண்டோ சரச்சை- செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் இட மாற்றம் செய்யப்பட்டார்

திரு கேஜே ஜான்: சிலாங்கூர் மாநிலம் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு ஒர் உறுதியான நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்ராஜெயாவிலிருந்து இனிமேல் எந்த அதிகாரியையும் அனுமதிக்க வேண்டாம். அதற்குப் பதில் நல்ல, ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களை நியமிக்கவும்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மனித வளமும் அறிவாற்றலும் நிறைந்திருப்பதால் சிலாங்கூர் மட்டுமே அதனைச் செய்ய முடியும்.

அடையாளம் இல்லாதவன்_3e86: அடுத்த தேர்தலில் சிலாங்கூரில் பிஎன் வெற்றி பெற்றால் அந்த ஆடம்பர அடுக்கு மாடி (கொண்டோ) திட்டத்தை ரத்துச் செய்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதி அளித்துள்ளார்.

ஆனால் அடுத்து பிஎன் நிர்வாகம் செலாயாங் நகராட்சி மன்றத் தலைவரை இடமாற்றம் செய்கின்றது.

டாக்டர் தான் கீ குவோங்: செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் ஜைனல் அபிடின் ஆலாலா-வை அவர் உலு லங்காட் மாவட்ட அதிகாரியாக இருந்த நாள் தொடக்கம் எனக்குத் தெரியும். அவர் நன்றாக வேலை செய்யக் கூடிய முதுநிலை அதிகாரி ஆவார். அவர் தொழில் ரீதியாக தமது பணிகளை ஆற்றி வந்தார்.

டத்தோ உங்கள் பணியைத் தொடருங்கள். நல்ல பண்புகளை இந்த முட்டாள் பிஎன் அரசாங்கம் பாராட்டுவதே இல்லை.

பெர்ட் தான்: இந்த அரசதந்திர நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் காற்பந்தைப் போல அவர்களுடைய தலைவர்களினால் கூட்டரசு அரசாங்க எஜமானர்களுடைய விருப்பு வெறுப்புக்களுக்கு இணங்க பந்தாடப்படுவது மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

ஹம்தி நாஸ்: அரசாங்கச் சேவையில் அரசியல் தலையீட்டை இது காட்டுகின்றது. அரசாங்கத் தலைமைச் செயலாளரே எல்லாப் பிரச்னைக்கும் காரணம்.

கொள்கை வகுப்பாளர்களுக்கும் அவற்றை அமலாக்குகின்றவர்களுக்கும் இடையில் உள்ள அதிகாரப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத அம்னோ விசுவாசிகள் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர்.

அரசாங்கச் சேவைக்கு முழு சுதந்திரம் இல்லாத வரையில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தப் பிரச்னை தொடரும்.

ஒடின்: கௌரவமான, கடினமாக உழைக்கக் கூடிய, விவேகமான மலாய்க்காரர்களை அம்னோ விரும்பவில்லை என்பது இதன் வழி தெளிவாகிறது. ஊழல் மலிந்த, சோம்பேறியான, சேவகம் செய்யக் கூடிய, கோமாளியான மலாய்க்காரர்களை அது நாடுகிறது.

நான் ஏழை: இது எல்லா அரசாங்க ஊழியர்களுக்கும் பெருத்த அவமானம். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அவர்களை இது போன்று நடத்தக் கூடாது. அரசியல் ரீதியில் பழி வாங்கக் கூடாது.

ஒஎம்ஜி: அரசாங்கச் சேவையில் அரசியல் தலையீடு கண்டிக்கப்பட வேண்டும்.

ஜெரார்ட் லூர்துசாமி: நஜிப் உங்களுக்கு வழங்கும் அரசியல் பொருளாதார உருமாற்றம் இது தான். அம்னோ /பிஎன் மக்கள் விருப்பத்தையும் ஜனநாயகத்தையும் ஒரு போதும் மதிக்கப் போவதில்லை.

அவை நாட்டில் இரண்டு கட்சி முறையை அனுமதிக்கப் போவதில்லை. ஆட்சியாளர்கள், நீதித் துறை, அரசாங்கச் சேவை, போலீஸ், ஆயுதப் படைகள், தேர்தல் ஆணையம் ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற முக்கிய அமைப்புக்கள் ஆகியவற்றை தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டு அதிகாரத்தில் என்றென்றும் நிலைத்திருக்கவே அவை விரும்புகின்றன.

ரோலிங் தண்டர்: அரசியல் சுனாமி வீசுவதற்கு முன்னர் 2007ம் ஆண்டு உணர்வுகளை மதிக்காத பிஎன் மாநில அரசாங்கம் பத்துமலைக் கோயிலுக்கு அருகில் அந்த 29 மாடி கொண்டோ திட்டத்தை அங்கீகரித்தது.

இப்போது இந்தியர்கள் பிஎன் -னுக்கு வாக்களித்தால் அந்தத் திட்டத்தை ரத்துச் செய்வதாக எஸ் சாமிவேலு, ஜி பழனிவேல் போன்ற மஇகா கைப்பாவைகள் ஆதரவுடன் நஜிப் வாக்குறுதி அளித்துள்ளார்.

பிஎன் செய்த தவறுக்கு இந்திய சமூகத்தை பிணையாக வைப்பதைப் போன்று உள்ளது அந்த வாக்குறுதி. இது போன்ற தந்திரமான கற்பனையான “பரிவர்த்தனைகள்” இனிமேலும் வேலை செய்யாது. இந்தியர்களை இனிமேல் ஏமாற்ற முடியாது. அவர்கள் அதே தவறை இந்தியர்கள் மீண்டும் செய்தால் அவர்கள் நிலை என்றென்றும் அதோ கதி தான்.

இனவாத எதிர்ப்பாளன்: இன்று ஜைனல் அபிடின் செலாயாங்-கிலிருந்து புத்ராஜெயாவுக்கு  மாற்றப்பட்டார். நாளை நஜிப் புத்ராஜெயாவிலிருந்து எதிர்க்கட்சி இருக்கைக்கு மாற்றப்படுவார்.

TAGS: