‘சட்டத்தின் காவலன் என அழைக்கப்படும் ஒர் அமைப்பு இப்போது சட்டத்தின் காவலனாக இப்போது இல்லை. அது பல்வேறு சமயங்களின் காவலனாகத் திகழ்கின்றது’
கடிதம் தொடர்பாகப் போலீசார் கருத்தரங்கு கூட்டு ஏற்பாட்டாளரை விசாரித்தனர்
சீ ஹோ சியூ: சமயத்தில் கட்டாயம் இல்லை என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் சொன்ன கருத்தரங்கின் கூட்டு ஏற்பாட்டாளரை பேட்டி கண்ட புலனாய்வு அதிகாரியான நஸ்ரி ஹருண் “மலாய்க்காரர்கள் முஸ்லிம்கள் என்பதால் நாங்கள் இங்கு சமயத்தைப் பாதுகாக்க வந்துள்ளோம்,” எனக் கூறினார்.
எனக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டதா அல்லது போலீசார் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களை மாற்றிக் கொண்டனரா ? சமயத்தைப் பாதுகாப்பது அவர்கள் கடமை அல்ல. இந்த நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நிறுத்துவதே அவர்கள் பொறுப்பாகும்.
குற்றச் செயல் விகிதங்கள் அதிகரித்துள்ள இந்த கால கட்டத்தில் திருடர்களையும் கொள்ளையர்களையும் பிடிக்க களத்தில் இறங்க வேண்டுமே தவிர அந்தக் கருத்தரங்கில் என்ன பேசப்பட்டது என்பதை விசாரித்துக் கொண்டிருக்கக் கூடாது.
அபாசிர்: பகுதி எழுத்தறிவு உள்ளவர்கள் போலீஸ் படையில் நிறைய இருப்பதாகத் தெரிகிறது. அத்தகையவர்கள் இது போன்ற வழக்குகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
“அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மலாய் பங்கேற்பாளர்கள் பற்றி நாங்கள் அறிய விரும்புகிறோம். காரணம் மலாய்க்காரர்கள் முஸ்லிம்கள் ஆவர்,” என்பது போன்ற அறிக்கைகளை வேறு யாரால் வெளியிட முடியும் ?
ஜென்2: நாட்ஸ்ரி உண்மையில் புண்படவில்லை. அவருடைய மனம் புண்பட வேண்டும் என அவரது எஜமானர் அவரிடம் சொல்லியிருக்க வேண்டும். அதற்குப் பின்னர் தாம் புண்பட்டுள்ளதை நாட்ஸ்ரி உணர்ந்திருக்க வேண்டும்.
அரசாங்கச் சேவையை அந்த அளவுக்கு பிஎன் மூளைச் சலவை செய்துள்ளது. எஜமானர்கள் சொல்லும் வரை தாங்கள் காயப்படுத்தப்பட்டதை அரசாங்க ஊழியர்கள் உணருவதே இல்லை.
எஸ்ஏ டோம்ஸ்: அரச மலேசிய போலீஸ் படை இன ஆட்டத்தை ஆடுகிறது. மலாய் அதிகாரிகள் இஸ்லாத்தைப் பாதுகாப்பார்கள். இந்திய அதிகாரிகள் இந்து சமயத்தைப் பாதுகாப்பார்கள். சீன அதிகாரிகள் பௌத்த சமயத்தைப் பாதுகாப்பார்கள். போலீஸ் படையை நடத்துவது முட்டாள்களா என்ன ?
ஆகவே சட்டத்தின் காவலன் என அழைக்கப்படும் ஒர் அமைப்பு இப்போது சட்டத்தின் காவலனாக இப்போது இல்லை. அது பல்வேறு சமயங்களின் காவலனாகத் திகழ்கின்றது
ஈப்போகிரைட்: புகாரை விசாரிப்பது தான் ஏஎஸ்பி நாட்ஸ்ரி ஹருணுடைய வேலை. சமய அல்லது தார்மீக அமலாக்க அதிகாரியாக அவர் செயல்படக் கூடாது. நாட்ஸ்ரியின் முதலாளி வரி செலுத்தும் மக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொடுக்கப்படும் சம்பளத்துக்கு அவர் வேலை செய்ய வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக அவர் இயங்கக் கூடாது.
கேகன்: பிஎன் அதிகாரத்தில் இருக்கும் வரை சமயக் கருத்தரங்குகள் ஏதும் நடத்தப்படக் கூடாது என நான் யோசனை கூறுகிறேன். இந்த ஆட்சி அரசியல் நோக்கத்துக்காக சமயத்தை திசை திருப்புகின்றது. ஆகவே அது மெல்லுவதற்குத் தீவனத்தைக் கொடுக்கக் கூடாது.
லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தார். இந்த ஆட்சிக்கு அணுக்கமாக உள்ளவர்கள் அவரை சிக்க வைத்திருக்கலாம். பிஎன் அதிகாரத்தில் இருக்கும் வரை அத்தகைய சமயக் கருத்தரங்குகள் கால விரயமாகும்.