உங்கள் கருத்து: போலீஸ் படையில் கட்டொழுங்குச் சீர்குலைவு மோசமடைகிறது

‘பல ஆண்டுகளாக போலீஸ் படையில் நிலவுகின்ற கட்டொழுங்குச் சீர்குலைவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் அதிகரித்து விட்ட அத்துமீறல்களுக்கு அந்த பாலியல் வல்லுறவு சம்பவம் உதாரணமாகும்’

மூன்று போலீஸ்காரர்கள் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

உங்கள் அடிச்சுவட்டில்: இந்த வழக்கு விசாரணைக்குச் சென்றாலும் கூட பழக் கூடையில் ஒர் அழுகிப் போன பழம் என நான் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன். போலீஸ் நிலையத்தில் அத்தகைய அருவறுக்கத்தக்க கொடுமையான காரியத்தை செய்துள்ளதாக கூறப்படும் அதனைச் செய்வதற்கு அந்த சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படித் துணிச்சல் வந்தது ?

பாதிக்கப்பட்டவர் அந்தச் சம்பவம் குறித்து புகார் செய்யக் கூடும் என்ற அச்சமே அவர்களுக்கு இல்லையா ? அந்த விஷயம் வெளியில் தெரிந்து விடும் என்ற அச்சமும் அவர்களுக்கு இல்லையா ? அதனால் தாங்கள் எதிர்நோக்கக் கூடிய விளைவுகளைப் பற்றிக் கூட அவர்கள் அச்சப்படவில்லையா ?

அந்தத் துணிச்சல் அவர்களுக்கு சாதாரணமாக வரவில்லை என நான் எண்ணுகிறேன். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவும் நான் கருதவில்லை. அது திட்டமிடப்பட்ட காரியம் என நான் நினைக்கிறேன்.

பல ஆண்டுகளாக போலீஸ் படையில் நிலவுகின்ற கட்டொழுங்குச் சீர்குலைவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் அதிகரித்து விட்ட அத்துமீறல்களுக்கு அந்த பாலியல் வல்லுறவு சம்பவம் உதாரணம் என நான் சொல்கிறேன்.

போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பது முன்னைக் காட்டிலும் இப்போது அவசர அவசியமாகியுள்ளது. அது வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது போலீஸ் படை அல்ல.

ஜேம்ஸ்1067: நீதிமன்றத்தில் 30 ‘ஆதரவாளர்கள்’ இருந்தனர். அவர்கள் அதுவும் போலீஸ் சமூகத்தைச் சார்ந்தவர்கள். நமது போலீஸ் படைக்கு என்ன நேர்ந்தது.

பரிதாபத்துக்குரிய அந்த இந்தோனிசிய மாதுவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபடுத்தியதாக அந்த போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த மாது-வுக்கு அந்தச் சம்பவம் பயங்கரமாகும். ஆனால் இங்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ‘ஆதரவாளர்கள்’ காணப்படுகின்றனர். அவர்கள்ஆதரவற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமையைக் கொண்ட மக்கள் இல்லையா ?

என்ன நடக்கிறது: பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ‘ஆதரவாக’ நீதிமன்றத்தில் கூடியவர்களுக்கு வெட்கமே இல்லையா ?

மக்கள் பாதுகாப்பை நாடும் போலீஸ் நிலையத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுள்ளது மிகவும் கொடுமையானது.

பொது மக்களையும் எதிர்க்கட்சிகளையும் அச்சுறுத்துவதற்கு தங்களது தனிப்பட்ட குண்டர்களாக அதிகார வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொள்வதற்கு அரச மலேசியப் போலீஸ் படையினர் தங்களை அனுமதிக்கும் வரையில் அது போன்ற குற்றச் செயல்களில் போலீஸ்காரர்கள் ஈடுபடுவது நிற்கப் போவதில்லை.

எல்லாம் போதும் போதும். ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவரும் உள்துறை அமைச்சரும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு பதவி துறக்க வேண்டும்.

நியாய சிந்தனை உடைய அதிகாரிகள் தவறுகளைத் திருத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. சமயப் போதனைகளுக்கும் மனச் சாட்சிக்கும் ஏற்ப நடந்து கொள்ளுங்கள்.

வழிப் போக்கன்: இது போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட அந்த சம்பவம் பெரிய மலையின் நுனி என்றே நான் கருதுகிறேன்.

“உண்மையில் பல அந்நியர்கள் குறிப்பாக சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் அதிக காலத்துக்குத் தங்கியிருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் ரொக்கம் அல்லது செக்ஸ் வழி அந்த விவகாரத்தைத் தீர்க்க வேண்டும்.”

உயர் நிலை அதிகாரிகளுக்கு அது குறித்து தெரியாதா ?

அடையாளம் இல்லாதவன்_40c8: குற்றவாளிகள் எனக் கண்டு பிடிக்கப்பட்டால் சட்டத்தை நிலை நிறுத்துவதற்குப் பதில் அதனை மீறிய அந்த மூன்று போலீஸ்காரர்களும் இரு மடங்கு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

சாதாரண மக்கள் அந்தச் சட்டத்தை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்படுகின்றது. அந்த மூவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

யாப் சிஎஸ்: தடுத்து வைக்கப்படும் அறைகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என நான்நினைக்கிறேன். அவை ‘மீண்டும்’ வேலை செய்யவில்லையா ?

TAGS: