பினாங்கில் ஜனவரி மாதம் ஊராட்சி மன்றத் தேர்தல்களா ?

2012ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றத் தேர்தல் ( பினாங்குத் தீவு, பிராவின்ஸ் வெல்லெஸ்லி) சட்டத்தை மாநில அரசாங்கம் வரும் ஜனவரி மாதம் அமலாக்கும்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அந்த விஷயம் மீது தகவல் கொடுக்கப்பட்டு தேதி நிர்ணயம்  செய்யப்படும் என ஊராட்சி மன்றம், போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் சாப் கோன் இயாவ் கூறினார்.

“அடுத்து தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்துமா இல்லையா என்ற பதிலுக்காக நாங்கள் காத்திருப்போம்,” என அவர் பினாங்கு விலங்குகள் சரணாலய அற நிதி கேளிக்கைச் சந்தையை எஸ்பிளனேடில் தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுக்குமானால் அந்த விவகாரம் முடிவு செய்யப்படுவதற்காக நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.

ஊராட்சி மன்றத் தேர்தல்கள் இந்தோனிசியாவுடனான எதிர்ப்புக் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக தஞ்சோங் எம்பி-யுமான சாவ் சொன்னார்.

சிவில் சமூக அமைப்புக்கள் பிரச்சாரம் செய்த பின்னர் அந்தச் சட்டம் இவ்வாண்டு அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் மாநில அரசாங்கத்துக்கு அச்சுக் கூடப் பிரதி கிடைத்தது.

ஆனால் அந்த நடவடிக்கையை கூட்டரசு அரசாங்கம் வரவேற்கவில்லை.

ஊராட்சி மன்ற அமைச்சர் சோர் சீ ஹியூங், பினாங்குச் சட்டம் ‘செல்லாது’ எனக் கூறிக் கொண்டு  முற்றாக நிராகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

TAGS: