உங்கள் கருத்து: “நான் தவறு செய்துள்ளது எனக்குத் தெரியும் ஆனால் என்னை நிறுத்துவதற்கு உங்களிடம் அதிகாரம் இருக்கிறது நீங்கள் அதனைப் பயன்படுத்தவில்லை அல்லது அது குறித்துத் தெரியாமல் இருந்திருக்கின்றீர்கள். அது உங்கள் குற்றம்.”
பத்துமலை ‘கொண்டோ’ விவகாரம் மீது மசீச சிலாங்கூர் மந்திரி புசார் மீது பழி போடுகின்றது
அடையாளம் இல்லாதவன்_40f4: கல்லுடைப்பாக பயன்படுத்தப்பட்ட நிலத்தை வர்த்தக/குடியிருப்பு பயனீட்டுக்கு மாற்றுவதற்கான அங்கீகாரத்தை பிஎன் 2003ம் ஆண்டிலேயே வழங்கி விட்டது.
2007ம் ஆண்டு அந்த ‘கொண்டோவை’ கட்டுவதற்கான திட்டத்துக்கு பிஎன் அனுமதி கொடுத்தது. 2008ல் பிஎன் கட்டுமான வரைபடத்தை ஏற்றுக் கொண்டது. அந்த மன்றத்துக்கு கட்டணமாகவும் மற்ற மேம்பாட்டுச் செலவுகளுக்கும் மேம்பாட்டாளர் சில மில்லியன் ரிங்கிட்டுக்களை செலவு செய்திருக்க வேண்டும்.
இப்போது பிஎன்/அம்னோ/மசீச/மஇகா/பிபிபி/கெரக்கான் ஆகியவை இழப்பீடு கொடுக்க முடியும் என்றால் அந்தத் திட்டத்தை சிலாங்கூர் மந்திரி புசார் நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.
சீ ஹோ சியூ: சிலாங்கூர் மசீச தலைவர் டொனால்ட் லிம் ஒன்று ஏதுமறியாதவராக இருக்க வேண்டும் அல்லதுவேண்டுமென்றே மக்களை தவறாக வழி நடத்த முயற்சி செய்திருக்க வேண்டும்.
அந்தத் திட்டத்தை நிறுத்தினால் சொத்து மேம்பாட்டாளருக்கு பெருந்தொகையை இழப்பீடாக கொடுக்க வேண்டியிருக்கும் என்பது நமக்கு கம்போங் புவா பாலா விவகாரத்திலிருந்து நன்கு தெரியும்.
பல இனம்: மசீச இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் என நான் எண்ணவே இல்லை. மசீச இவ்வாறு சொல்கிறது: “நான் தவறு செய்துள்ளது எனக்குத் தெரியும் ஆனால் என்னை நிறுத்துவதற்கு உங்களிடம் அதிகாரம் இருக்கிறது நீங்கள் அதனைப் பயன்படுத்தவில்லை அல்லது அது குறித்துத் தெரியாமல் இருந்திருக்கின்றீர்கள். அது உங்கள் குற்றம்.”
கறுப்பு மம்பா: இன்னொரு முட்டாள் மசீச அமைச்சர் மீண்டும் வாயைத் திறந்துள்ளார். பத்துமலை கொண்டோ-வுக்கு இப்போது யார் பொறுப்பு-சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமா ?
அந்த மசீச அமைச்சர் DLAP அனுமதியை ரத்துச் செய்தால் போதும். அந்தத் திட்டம் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தால் முற்றாக நின்று விடும். அடுத்து இழப்பீடு கோரி மேம்பாட்டாளர் கூட்டரசு அரசாங்கம் மீது வழக்குப் போடுவார். அவ்வளவு தான்.
ஆனால் பக்காத்தான் அரசாங்கம் மீது மேம்பாட்டாளர் வழக்குப் போட வேண்டும் என்பதற்காக மேம்பாட்டு ஆணையை சிலாங்கூர் அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என பிஎன் விரும்புகின்றது.
உண்மை: ஒர் அமைச்சர் இத்தகைய முட்டாள்தனமான அறிக்கையை விடுத்துள்ளது நல்ல நகைச்சுவையாக உள்ளது. முந்திய அம்னோ/பிஎன் அரசாங்கம் எடுத்த ஒவ்வொரு முடிவையும் பக்காத்தான் இப்போது மாற்ற வேண்டுமா ? எவ்வளவு முட்டாள்தனம் /
நியாயமானவன்: டொனால்ட் லிம் அவர்களே “நீங்கள் சாப்பிட்டால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்” ( “You makan, you bayar”). அது தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை.
ஆனால் இப்போது நீங்கள் புதிய கொள்கையை உருவாக்க விரும்புகின்றீர்கள். பிஎன் ‘makan’ (சாப்பிடுவது), பக்காத்தான் ‘bayar’ (பணம் கொடுப்பது) தான் அது. அந்த பிஎன் துணை அமைச்சருடைய சிந்தனையே கோணலாக உள்ளது. மலேசியா வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதில் ஐயமே இல்லை.
ஆனால் காலித் கௌரவமானவர், பொறுப்புள்ள நிர்வாகி. அதற்கான பழியைப் பொறுப்பானவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் அதே வேலையில் மேம்பாட்டாளர் சட்ட விரோத வழிகளில் அனுமதியைப் பெற்றுள்ளாரா என்பதைக் கண்டு பிடித்து இழப்பீடு ஏதுமில்லாமல் அனுமதியை ரத்துச் செய்யவும் அவர் முயன்று வருகிறார்.
பிடிஎன்: அந்தத் திட்டம் மீது காலித் நடவடிக்கை எடுப்பதற்காக பிஎன் காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்துமாநில அரசு மீது மில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குப் போடப்படும்.
மாற்றம்: பத்துமலை ‘கொண்டோ’ விவகாரத்தில் தன்னை முட்டாளாக்கிக் கொண்ட மஇகா இப்போது அமைதியாகி விட்டது. அந்தப் பணியை இப்போது மசீச மேற்கொண்டு, மஇகா-வைக் காட்டிலும் அதிகமான முட்டாளாகிக் கொண்டிருக்கிறது.