“இடம் பெயர்வுக் கட்டணம்” பெரிதும் குறைந்துள்ளது, நிலைமை மோசமாக இருக்க வேண்டும்

“கட்சி மாறுவதற்கு குவீ-க்கு 150,000 ரிங்கிட் மட்டும் தானா? இதற்கு முன்பு “இடம் பெயர்வுக் கட்டணம்” மில்லியன் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டது. உண்மையில் அம்னோ நிலைமை மோசமாக இருக்க வேண்டும்.”

 

 

 

கட்சி மறுவதற்கு 150,000 ரிங்கிட் தர முன் வந்ததாக டிஏபி சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார்

பெர்ட் தான்: போலீஸ் விசாரிப்பதற்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. போலீஸ் புகார் மட்டும் பொய்யாக இருக்கட்டும். போலீசார் உடனே நடவடிக்கையில் இறங்கி புகார்தாரரைக் கைது செய்து விடுவர்.

போலீஸ் புகார் கொடுக்கப்பட்டதும் போலீசார் நடவடிக்கையில் இறங்குவதற்கு நாம் காத்திருக்க வேண்டும். நடவடிக்கை இல்லை என்றால் குற்றச்சாட்டு உண்மையென நிரூபணமாகி விடும்.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள எதிர்த்தரப்பு உறுப்பினர்களை கவர பணம், நிலம் ஆகியவற்றைக் கொடுப்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் புதிதல்ல. இது போன்று பல முறை- பேராக்கில், பினாங்கில், கோலாலம்பூரில் நிகழ்ந்துள்ளன.

இதில் மிகவும் வெறுப்பளிக்கும் அம்சம் என்னவெனில் அந்தக் கட்சித் தாவல்கள் அனைத்தையும் நஜிப் நேரடியாக தாமே அறிவிப்பதாகும். தவறான வழிகளில் அடைந்த வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு அவர் வெட்கப்படவே இல்லை.

என்ன விலை கொடுத்தாவது பிரதமர் பதவியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு விரக்தி அடைந்த நிலையில் அவர் எடுக்கும்  தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மலேசியாவை அஸ்தமனமாக செய்து விடும்.

வீரா: மாண்பு மிகு குவீ தியோங் ஹியாங் அவர்களே (பெந்தாயான் சட்ட மன்ற உறுப்பினர்), உங்கள் கட்சி உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த போதும் நீங்கள் கட்சி மாறாமல் கௌரவமாக நடந்து கொண்டீர்கள்.

வாழ்க்கையில் நேர்மையும் கௌரவமுமே மிக முக்கியமானவை அவை பிஎன் – னிடம் இல்லை. அந்தப் பண்புகளுக்கு எடுத்துக் காட்டாக நீங்கள் திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

மெங்சியாங்: அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்திருப்பார், அதனால் அவர் தவளையாக மாறுவதற்குத் தயாராக இருப்பார் என அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். மசீச பிஎன்-னுக்காக அந்தத் தீய வேலையைச் செய்து கொண்டிருக்கிறதா? இருந்தாலும் இருக்கலாம்.

கடைசி நேரம்: பண வெகுமதி கூடவோ குறையவோ அதன் நோக்கத்தைப் பார்ப்போம்:

பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை “தாவச் செய்வதற்கு”
நஜிப் வெகுமதி அளிப்பது அறிந்த விஷயமாகும். 2009ல் பேராக்கை அவர் கைப்பற்றியது அந்த வழியில்தான். சிலாங்கூரில் அவ்வாறு செய்ய முயன்றார்.  துரதிர்ஷ்டவசமாக ஒர் இளைஞனுடைய மரணத்தில் அது முடிந்தது. ஆனால் நஜிப் இன்னும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்.

எதிர்வரும் தேர்தலில் ஜோகூரை பக்காத்தான் கைப்பற்றக் கூடும் என அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் அங்குள்ள பக்காத்தான் “மக்கள் பேராளர்களை” தவளைகளாக மாறுவதற்கு ஊக்கமூட்டுகிறார்.

நஜிப், நமது பொருளாதாரத்தைக் கொள்ளையடிப்பதற்காக நாங்கள் உங்களுக்கு வரி செலுத்தவில்லை. உங்களுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனியுங்கள். உங்கள் அரசியல் வாழக்கைக்கு முடிவு கட்ட உங்களிடம் “பூருட்டஸ்” வேலையைக் காட்ட துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் உங்கள் முதுகுப் பக்கம் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

சரவாக்கியன்_3ff9: ஏன் இவ்வளவு முட்டாளாக இருக்கின்றீர்கள்? அந்த முழு விவகாரமும் உண்மையென காட்டுவதற்கு டிஏபி ஒரு பொறியை தயார் செய்திருக்க வேண்டும். முதலில் அந்தப் பணத்தையும் நிலப் பட்டாவையும் பிஎன் மாற்றி விடட்டும். அடுத்து அதனை அம்பலப்படுத்துங்கள். அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

அந்த வீடியோ அண்மையில் பிஎன் வெளியிட்ட செக்ஸ் வீடியோக்களை விட சூடாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

அடையாளம் இல்லாதவன்123: டிஏபி தலைவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது ஏதும் அறியாதவர்களாக இருக்க வேண்டும். எந்த உருப்படியான ஆதாரமும் இல்லாமல் வெறும் தொலை பேசி அழைப்பை மட்டும் வைத்துக் கொண்டு உங்களை மக்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களா?

நான் மலாய்க்காரன்: கட்சி நிதிகளை தவறாகப் பயன்படுத்தியதின் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கட்சியின் நல்லெண்ணத்தை மீண்டும் பெறுவதற்காக எதனை வேண்டுமானாலும் செய்வார். கட்சிக்குள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படுவது, 150,000 ரிங்கிட்டைக் காட்டிலும் எவ்வளவோ மேலானது.

ஜெரோனிமோ: கட்சி மாறுவதற்கு குவீ-க்கு 150,000 ரிங்கிட் மட்டும் தானா? இதற்கு முன்பு “இடம்  பெயர்வுக் கட்டணம்” மில்லியன் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டது. உண்மையில் அம்னோ நிலைமை மோசமாக இருக்க வேண்டும். அந்த ஜெலாபாங் மாதுக்கு மில்லியன்கள் கிடைத்ததாக எனக்கு கூறப்பட்டது. அவர் புதிய கறுப்பு நிற மெர்சிடிஸ் இ அல்லது எஸ் ரக கார்களை அவர் ஓட்டுவதை நான் நேரடியாக பார்த்துள்ளேன்.

TAGS: