அந்த ‘மலிவான நிலத்தின்’ நடப்பு மதிப்பு 300 மில்லியன் ரிங்கிட் என்கிறார் இங் ஸ்வீ லிம்

பிஎன் -னுக்கு மலிவாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தை மதிப்பை 20 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 300 மில்லியன் ரிங்கிட்டாக செக்கிஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம் உயர்த்தியுள்ளார்.

அவர் முதலில் மொத்தம் 33.5 ஏக்கார் பரப்புள்ள நிலம் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலையில் மொத்தம் 1.4 மில்லியன் ரிங்கிட்டுக்கு பிஎன் உறுப்புக் கட்சிகளுக்கு 1999க்கும் 2008க்கும் இடையில் விற்கப்பட்டதாக கூறிக் கொண்டார்.

“இங்கு திருத்தம் செய்வதற்கு என்னை அனுமதியுங்கள். அந்த Sapu Tanah (நில அபகரிப்பு) 1Malaysia ஊழல் மதிப்பு 20 மில்லியன் ரிங்கிட் எனச் சொல்லியிருந்தேன்.”

“ஆனால் நான் அதனை ஆய்வு செய்த பின்னர் அவற்றின் சந்தை மதிப்பு ஒரு சதுர அடிக்கு 300 ரிங்கிட் முதல் 400 ரிங்கிட் வரை இருக்க வேண்டும் என கருதுகிறேன். அதன் விலை குறைந்த பட்சம் சதுர அடிக்கு 200 ரிங்கிட்டாக இருந்தலும் கூட அதன் மதிப்பு 300 மில்லியன் ரிங்கிட் ஆகும்,” என அவர் மாநிலச் சட்டமன்றத்தில் கூறினார்.

இதனிடையே அந்த விவகாரம் கவனிக்கப்படும் என மந்திரி புசார் காலித் இப்ராஹிம் இங்-கிற்கு பதில் அளித்துள்ளார்.

“நாம் முதலில் நில உரிமை பிரச்னையை ஆய்வு செய்வோம். அடுத்து என்ன செய்யலாம் என்பதை விவரமாக எடுத்துரைக்கும் அறிக்கையை வெளியிடுவோம்,” என அவர் விவாதத்தின் போது இடையில் கூறினார்.

TAGS: