பிரஞ்சு வழக்குரைஞர்களைப் பார்த்து அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது ?

“ஒர் அந்நியரை தொழில் நிபுணத்துவ வழக்குரைஞர் ஒருவரை ‘bodoh’ என அழைப்பது, அம்னோ தலைவர்களுடைய கீழ்த்தரமான போக்கைக் காட்டுகின்றது.”

சுவாராம்: வரவேற்கப்பட்டாலும் வரவேற்கப்படா விட்டாலும் பிரஞ்சு வழக்குரைஞர்கள் வருவர்

குழப்பம் இல்லாதவன்: மலேசியாவுக்குள் அந்த பிரஞ்சு வழக்குரைஞர்கள் நுழைவதை மறுப்பதின் மூலமும் அவர்களை அச்சுறுத்துவதின் மூலமும் வாய்மொழியாக அவர்களை வசை பாடுவதின் மூலமும் அரசாங்கம் ஏதோ கடுமையான விஷயம் ஒன்றை மறைக்கிறது என்ற எண்ணத்தை அளிப்பதை அரசாங்கத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ளவர்களுடைய குறைந்த அறிவாற்றலையும் தாழ்வான சிந்தனைகளையும் கண்டு நான் மீண்டும் வருத்தமடைந்துள்ளேன்.

சிஎச்ஒய்: நாடாளுமன்றத்தின் கௌரவம் குறைந்து விடுமா ? பல ஊழல் குற்றச்சாட்டுக்கள், அந்நியர் ஒருவர் இந்த நாட்டில் கொலையுண்டது ஆகிய விவகாரங்கள் போதுமான அளவுக்கு விசாரிக்கப்படாததால் அந்தக் கௌரவம் ஏற்கனவே படுதாளத்துக்குச் சென்று விட்டது.

அடையாளம் இல்லாதவன்#75854042: மலேசியர்கள் உறுதியாக இருக்க வேண்டும். உண்மையோ பொய்யோ அந்த இரண்டு சுவாராம் வழக்குரைஞர்களும் ஸ்கார்ப்பின் வழக்கு நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

அதனால் நாடாளுமன்றத்தின் கௌரவம் உயரும். அந்த விவகாரத்தில் பொது நலன் சம்பந்தப்பட்டுள்ளதால் அது குறித்து எம்பி-க்களுக்கு விளக்கப்பட வேண்டும்.

ஊழலில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ள பிரஞ்சு நிறுவனம் ஒன்றுக்கு எதிராக பாரிஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மீது தகவல் கொடுப்பதற்கு அந்தப் பிரஞ்சு வழக்குரைஞர்களிடம் செய்திகள் உள்ளன.

பில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள அந்த விவகாரத்துக்கு மலேசியத் தரப்பில் யார் உதவி செய்தார்கள், யார் நன்மை அடைந்தார்கள் ? அது மக்கள் பணம். அந்த விவகாரம் மீதும் அதன் முன்னேற்றம் மீதும் ஏன் நாடாளுமன்றம் அக்கறை காட்டவில்லை ? தகவல்கள் அம்பலமானால் தலைகள் உருளும் என்ற அச்சமா ?

ஒராங் ஜாவ்: சுவாராம் இயக்குநர் சிந்தியா கேப்ரியல் அவர்களே, உங்களுடைய ஆங்கில மொழி ஆற்றல் குறித்து நான் வருத்தமடைகிறேன்.

“அவர்களிடம் மறைப்பதற்கு ஏதோ இருக்கின்றது என்பது தெளிவாகி வருகின்றது” என நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்ன ? சரியான வாசகம் இப்படித்தான் இருக்க வேண்டும், “அவர்கள் ஏதோ ஒன்றை மறைக்கின்றனர் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.”

 

 

TAGS: