““13வது பொதுத் தேர்தலை உங்கள் விருப்பம் போல எப்படி வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். தேர்தல் தினத்தன்று என்ன நிகழ்கின்றது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.”
பேராசிரியர்: பிஎன் 120 இடங்களை வெல்லும். உறுதி இல்லாத தொகுதிகள் 24
ஜெரார்ட் லூர்துசாமி: இது தான் பிஎன் -னுக்கு ஆரூடம் சொல்லக் கூடிய சிறந்த நிலையாகும்- 120 இடங்கள் மட்டுமே. எஞ்சியுள்ள 102 இடங்களையும் பக்காத்தான் பிடிக்கும்.
அடுத்த சில நாட்களில் சபா, சரவாக்கை சேர்ந்த 10 எம்பி-க்கள் பக்காத்தானுக்கு மாறுவர் அல்லது பக்காத்தான் ஆதரவு சுயேச்சைகள் எனப் பிரகடனம் செய்து கொள்வர். அந்த சூழலில் பிஎன் சீர்குலையும்.
பேராக்கில் ஸாம்ரி அப்துல் காதிர் விவகாரத்தில் கூட்டரசு நீதிமன்றம் செய்த முடிவு காரணமாக யாங் டி பெர்துவான் அகோங் நஜிப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மக்களவையைக் கலைத்து புதிய தேர்தலுக்கு வழி விடும் கேள்விக்குரிய நடவடிக்கையை எடுக்காமல் இருந்தால் தவிர மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு அவசியம் இல்லாமல் நஜிப் ரசாக்கை நீக்கி விட்டு பிரதமராக பொறுப்பேற்குமாறு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை கேட்டுக் கொள்வைத் தவிர வேறு வழி இல்லை.
ஆனால் யாங் டி பெர்துவான் அகோங் அந்த நடவடிக்கையை எடுக்கும் சாத்தியமில்லை. ஏனெனில் மாற்று அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதோடு புதிய பொதுத் தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையை வழங்குமானால் மாமன்னர் அரசியல் சிக்கலில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தில் கட்சி தாவுவது பிரிக்க முடியாத அங்கம் என கூட்டரசு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதால் பிஎன் -னால் எதுவும் செய்ய முடியாது. கூச்சல் மட்டுமே போட முடியும்.
கேகன்: ஹலோ பேராசிரியர் சம்சுல் அம்ரின் பஹாருதின் அவர்களே, பிஎன் -னுக்குக் கிடைக்கும் 120 இடங்கள் கிடைக்கும் என்ற உங்கள் மதிப்பீட்டில் பிஎன், தேர்தல் ஆணையம் நடத்தும் மோசடியையும் கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா ?
அஞ்சல் வாக்காளர்கள், ஆவி வாக்காளர்கள், படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் என்ற மோசடிகள் ஏதுமில்லாமல் நியாயமாக பிஎன் எத்தனை இடங்களை வெல்ல முடியும் என எங்களுக்குச் சொல்லுங்கள்.
செப்பாங்: பேராசிரியர் சம்சுல் எண்ணிக்கையை மட்டும் சொல்லாமல் எப்படி அந்த 120 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்க வேண்டும்.
உண்மையில் பிஎன் -னுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை விட எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பதே முக்கியம் .
வெற்றி பெறுவதற்கு அம்னோவும் பிஎன் -னும் பயன்படுத்தக் கூடிய பொது வளங்கள்ம் அஞ்சல் வாக்காளர்கள், ஆவி வாக்காளர்கள், மலேசிய வாக்காளர்களாகி இருக்கும் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள், அரசாங்க நிர்வாக எந்திரம் ஆகியவற்றையும் நீங்கள் தொட வேண்டும்.
ஐ பைட்: செப்டம்பர் ஆய்வு காலத்துக்கு ஒவ்வாதது. பழசாகி விட்டது.
இரண்டு புதிய நிகழ்வுகள் பிஎன் -னை பெரிதும் பாதித்து விட்டன. சபா அம்னோவுக்காக கொண்டு வரப்பட்ட அரசியல் நன்கொடை எனக் கூறப்பட்டுள்ள 40 மில்லியன் ரிங்கிட், ஹம்மர் ரக நான்கு சக்கர வாகனவிவகாரத்தில் நீதித் துறையில் தலையீடு எனச் சந்தேகிக்கப்படும் விஷயம் ஆகியவையே அவை.
அடுத்த அரசாங்கத்தை பிஎன் எப்படி அமைக்க முடியும் ?
டாக்: உங்களுக்காகச் சொல்கிறேன், அமெரிக்க அதிபர் தேர்தல் மிட் ரோம்னிக்கும் பாராக் ஒபாமாவுக்கும்இடையில் கடுமையான போட்டியாக இருந்தது. ஆனால் ஒபாமா தெளிவான பெரும்பான்மையுடன் வாகை சூடினார்.
சுருக்கமாகச் சொன்னால் 13வது பொதுத் தேர்தலை உங்கள் விருப்பம் போல எப்படி வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். அதில் ஒன்றுமே இல்லை. தேர்தல் தினத்தன்று என்ன நிகழ்கின்றது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
பென் காசி: அந்தப் பேராசிரியரின் முடிவு எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தாம் ஆய்வை நடத்தியவழிமுறையை அவர் தெரிவிக்கவே இல்லை. ஏனெனில் உண்மையான சமூக அறிவியலாளர்கள் தமது முடிவை நிராகரிப்பர் என்பதால் அதனை அவர் வெளியிடவே இல்லை.
அவர் சில நூதனமான வழிகளில் ஆய்வு செய்திருக்க வேண்டும். தமது அரசியல் எஜமானரான பிஎன் -னை திருப்திப்படுத்துவதே அவரது நோக்கம் என்பது மட்டும் நிச்சயம்.
அவருக்கு இவ்வளவு நம்பிக்கை இருந்தால் 13வது பொதுத் தேர்தலை இப்போதே நடத்துமாறு பிஎன் -னுக்கு ஆலோசனை கூறலாமே ?