“ஹிண்டராப், பக்காத்தானுடன் ஒத்துழைக்க மாட்டோம் என மருட்டுவதற்குப் பதில் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் -னை வீழ்த்துவதற்கு அதனுடன் புது உறவை ஏற்படுத்திக் கொள்ள முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”
ஹிண்ட்ராப், பிஎன்-னை வீழ்த்துவதற்கு பக்காத்தானுடன் புது உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறது
குவிக்னோபாண்ட்: ஹிண்ட்ராப் சொல்வதின் அடிப்படை இதுதான்: பக்காத்தான் மட்டும் தனித்து நின்று பிஎன்-னை வீழ்த்த முடியாது. அதே வேளையில் ஹிண்ட்ராப் மட்டும் தனித்து நின்று பிஎன்-னை சாய்க்க முடியாது.
இதனை வேறு வகையாகச் சொன்னால் பக்காத்தானும் ஹிண்ட்ராப்பும் சம நிலையில் உள்ள பங்காளிகள் என ஹிண்ட்ராப் எண்ணுகிறது. அது உண்மை நிலையா? அப்படி என்றால் அத்தகைய ஆணவப் போக்கு பக்காத்தானுடன் உருப்படியான கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு உதவாது. மாட் இந்ரா விவகாரம் மீது பிரிட்டனிலிருந்து ஆதாரத்தை மாட் சாபுவுக்கு வழங்கியதின் மூலம் பக்காத்தானுக்கு ஹிண்ட்ராப் சமாதானத் தூது விட்ட பின்னர் அந்தப் போக்கு நன்மையைத் தரப் போவதில்லை.
உண்மை நிலைக்குப் புறம்பான கோரிக்கைகளை விடுப்பதை ஹிண்ட்ராப் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பக்காத்தான் ஒர் அங்குலம் கொடுத்தால் ஹிண்ட்ராப் ஒர் அடி கேட்கலாமா? பின்னர் அது எங்கு போய் முடியும்?
போட்டியிடுவதற்கு அதிகமான இடங்களை ஹிண்ட்ராப் பெறுவதாகவே வைத்துக் கொள்வோம். இந்தியர் வாக்குகளுக்காக நஜிப் ரசாக் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் தாண்டி அது இந்தியர் வாக்குகளைப் பக்காத்தானுக்கு பெற்றுத் தர முடியுமா? ஹிண்ட்ராப் தொடர்ந்து இன அரசியலைப் பயன்படுத்தி வந்தால் அது பக்காத்தானுடைய இலட்சியங்களுக்குத் துணை புரியுமா?
புத்ராஜெயாவைப் பக்காத்தான் கைப்பற்றுவது முக்கியம். ஆனால் பக்காத்தான் தனது கோட்பாடுகளைக் கைவிடக் கூடாது.
ஸ்விபெண்டர்: 308 (மார்ச் 8, 2008) தேர்தல் முடிவுகளுக்கு அளவுக்கு அதிகமாக ஹிண்ட்ராப் பெருமையடித்துக் கொள்கிறது.
308க்குப் பின்னர் அது பேராசையுடன் நடந்து கொண்டது. பிஎன் ஆட்சியில் கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்தியர்கள் அனுபவித்த அநீதிகளையும் தவறுகளையும் சரி செய்வதற்கு அது அதிகமாகக் கோரியது. பக்காத்தானுடனான உறவுகளில் பொறுமை இழந்தது.
நடப்பு அரசாங்கம் பக்காத்தான் அல்ல என்பதை அது மறந்து விட்டது. ஆகவே இந்திய சமூகத்தின் பிரச்னைகளை பக்காத்தான் எப்படி உடனடியாகத் தீர்க்க முடியும்?
ஹிண்டராப், பக்காத்தானுடன் ஒத்துழைக்க மாட்டோம் என மருட்டுவதற்குப் பதில் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் -னை வீழ்த்துவதற்கு அதனுடன் புது உறவை ஏற்படுத்திக் கொள்ள முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பேஸ்: தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் புது உறவு தேவை எனச் சொல்வதற்குக் கூடுதலான கடப்பாடு அவசியமாகும். அதில் உண்மையாகவும் இருக்க வேண்டும்.
முன்-நிபந்தனைகளும் கடந்த கால வாதங்களும் ஒதுக்கி வைக்கப்பட்டு உண்மை நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் திறந்த மனதுடன் செல்வது நல்லது.
கடந்த கால வாக்களிப்பு பதிவுகளைப் பயன்படுத்தி ஹிண்ட்ராப் ஆய்வுகளை செய்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் வாக்களிப்புப் பதிவுகள் எப்படி இருக்கும் என யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது. கூட்டரசு அதிகாரம் இருந்தால் மட்டுமே எல்லாத் தவறுகளையும் சரி செய்வதற்கு பக்காத்தான் மலேசியர்களுக்கு உதவ முடியும்.
அந்த சவாலை ஏற்றுக் கொண்ட துணிச்சல்காரர்களுக்கு வாழ்த்துக்கள். எல்லோரும் வெற்றி பெற முடியாது ஆனால் பெரும்பாலான மலேசியர்கள் வாகை சூடுவர்.
தெமங்கோங்: நான் ஹிண்ட்ராப்பின் வாக்கு ஆய்வுகளை படித்தேன். அவை மிக விவரமாக உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியாக அது அலசியுள்ளது. உண்மை நிலைக்கு ஏற்பவும் உறுதியானதாகவும் அந்த ஆய்வுகள் தெரிகின்றன. ஹிண்ட்ராப் அங்கீகாரம் இல்லாவிட்டால் பேராக் நிச்சயம் 100 விழுக்காடு பிஎன் -னுக்குக் கிடைத்து விடும்.
சிலாங்கூரில் இந்தியர் வாக்குகள் 20 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை திசை மாறினால் பக்காத்தான் நான்கு முதல் 17 இடங்களை இழந்து விடும். அப்படியே சிலாங்கூரில் பக்காத்தான் வெற்றி பெற்றாலும் அது பெரும்பாலும் இரண்டு இடங்கள் பெரும்பான்மையில் தான் இருக்கும். கெடாவில் அது பிஎன்/பக்காத்தனுக்கு 50-50 ஆக இருக்கும்.
பக்காத்தானுக்கு பகுத்தறிவு இருந்தால் அது உடனே ஹிண்ட்ராப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஹிண்ட்ராப் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் பக்காத்தான் கதை முடிந்தது. கிளந்தானிலும் பினாங்கிலும் பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவை ஒதுக்கப்பட்டு விடும்.
அடுத்த நடவடிக்கை எடுப்பது இப்போது பக்காத்தானைச் சார்ந்துள்ளது. அதற்கு என்ன வேண்டும்?
ஒரே மண்டோர்: ஹிண்ட்ராப் ஒரு முறை பக்காத்தான் இந்தியத் தலைவர்களை “மண்டோர்கள்” என வருணித்தது. இப்போது ஹிண்ட்ராப் அந்த மண்டோர்களுடன் உறவாட விரும்புகிறது.
கேஎஸ்என்: மலேசிய அரசியலில் என்றுமில்லாத தாக்கத்தை ஏற்படுத்திய பின்னர் ஹிண்ட்ராப், தனது நோக்கத்திலிருந்து விலகி விட்டது. சிறிதளவு ஆணவமும் தலைக்கேறியது.
இந்த நாட்டில் எந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் சட்டமன்றத் தொகுதியிலும் இந்தியர்கள் பெரும்பான்மையாக இல்லை. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய கட்சியுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்வதே நல்லது. இந்தியர்களுடைய மனக்குறைகள் உண்மையானவை. அதற்கு அம்னோவும் மஇகா-வுமே காரணம்.
இன வேறுபாடின்றி வறுமையையும் பின்தங்கிய நிலையையும் போக்க பக்காத்தான் பாடுபட்டால் இந்தியர்கள் நன்மை அடைவர்.
அடையாளம் இல்லாதவன்: ஹிண்ட்ராப் போன்ற இனவாத,ஆணவம் பிடித்த கட்சியுடன் ஒத்துழைக்கக் கூடாது. ஹிண்ட்ராப் உடன் இருந்தால் பக்காத்தான் வாக்குகளை இழக்க நேரிடும்.
ரோஹான்: பிகேஆர், இது உனக்குக் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு. அதனை பிடித்துக் கொள்ளுங்கள். அம்னோவை விரட்டுவதே நமது முக்கிய நோக்கம். ஹிண்ட்ராப் அதனைச் செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். ஹிண்ட்ராப்புடன் பிகேஆர் வரும் தேர்தலில் இன்னொரு சுனாமியைக் கொண்டு வர முடியும்.
கலா: ஹிண்ட்ராப் தனது வாதத்தை நியாயப்படுத்த சில ஆய்வுகளை நடத்தியுள்ளது. அது நல்ல ஆய்வு என நான் எண்ணுகிறேன். அதனை ஒதுக்க முடியாது.
ஹிண்ட்ராப் பின்பற்றும் பாணி பக்காத்தானுக்கு ஒத்துப் போகுமா என்பதே இப்போதைய கேள்வி ஆகும்.
ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் தற்பெருமை உண்டு. என்றாலும் ஹிண்ட்ராப் உண்மையாக இருந்தால் அதனுடன் திரைக்கு பின்னால் பக்காத்தான் ஒத்துழைக்க வேண்டும்.
இதனைக் கருத்தில் கொள்ளுங்கள்: பக்காத்தான் சிலந்திப் பூச்சி, ஹிண்ட்ராப் சிலந்தி வலை. ஒன்று இல்லாமல் மற்றொன்று வாழ முடியாது.