உங்கள் கருத்து: டாக்டர் மகாதீர் அவர்களே, நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வித்திடுவது ஊழல் ஆகும்

“நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வழி வகுப்பது ஜனநாயக உரிமைகளும் பேச்சுச் சுதந்திரமும் அல்ல. மாறாக ஊழலும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் சுதந்திரமுமே நிலைத்தன்மை குறைவதற்கு வழி வகுக்கின்றன.”

ஜனநாயக உரிமைகள் நிலைத்தன்மை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன

ஜேஎம்சி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு.

‘நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வழி வகுப்பது ஜனநாயக உரிமைகளும் பேச்சுச் சுதந்திரமும் அல்ல. மாறாக ஊழலும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் சுதந்திரமுமே நிலைத்தன்மை குறைவதற்கு வழி வகுக்கின்றன.

நிலைத்தன்மையுடன் இருக்க ஊழலில் ஈடுபடும் அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம். ஏனெனில் அது துன்பங்களுக்கு வழி கோலும்.

ஜெரார்ட் லூர்துசாமி: மகாதீர் இருக்கும் வரை அமைதி, நிலைத்தன்மை, வளப்பம் ஆகியவை இருக்காது. நமது ஜனநாயகம் பலவீனமடைவததற்கும் ஊழல் பெருகுவதற்கும், அதிகார அத்துமீறல்களுக்கும் நண்பர்களுக்கு உதவும் போக்கிற்கும் அரசாங்க அமைப்புக்கள் வலிமை குறைவதற்கும், நீதித் துறை, அரசாங்கச் சேவை, ஊடகங்கள் ஆகியவை நலிவடைவதற்கும் பொருளாதாரக் கசிவுகள், விரயங்கள், ஆடம்பரங்கள் ஆகியவற்றுக்கும் அந்த மனிதரே காரணம்.

அளவுக்கு அதிகமாக அகங்காரத்தையும் பெரிய தாழ்வு மனப்பான்மையயும் கொண்டவர் அவர். ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றை வெறுத்தார்.

கோணல் புத்தி கொண்ட அவர் தம்மை எதிர்க்கும் யாரையும் பற்றி கேள்வி எழுப்பவோ, குறை கூறவோ, கண்டிக்கவோ தவறியதில்லை. அரசாங்கக் கட்டுப்பாட்டையும் நிர்வாக அத்துமீறல்களையும் அவர் ஆதரித்தார்.

ஜனநாயம் என்ற போர்வையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரத்தை பின்பற்றினார். அவர் மரியாதையை எதிர்பார்த்தார். அந்நிய நாடுகளுடனான உறவுகளில் அவர் இரட்டை வேடம் போட்டார்.

பேச்சு வன்மையைக் கொண்டவர் என்பதைத் தவிர அவரைப் பற்றிய கௌரவமான விஷயம் எதுவும் கிடையாது. நிகழ் காலத்துக்கும் பொருத்தமானவர் எனத் தம்மைக் காட்டிக் கொள்ள விரும்பும் ஒரு கடந்த காலச் சின்னமே அவர்.

முதியவர்: மகாதீர் சொல்லும் சொற்களைக் கவனியுங்கள் மகாதீர் ஜனநாயகம் வேண்டாம் என்கிறார். நமக்கு அமைதி நிலைத்தன்மை மட்டுமின்றி பொறுப்பு, வெளிப்படையான போக்கு, ஊழல் இல்லாத நாடு ஆகியவற்றையும் நாங்கள் நாடுகிறோம்.

மலேசிய இனம்: டாக்டர் அவர்களே நீங்களும் நானும் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு நீங்களும் உட்பட எல்லா அரசியல்வாதிகளின் குறிப்பாக நமக்குத் தெரிந்த பிசாசுகளுடைய ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்துவது பற்றிப் பேசலாமா ?

உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு முழுச் சுதந்திரமும் அதே நேரத்தில் எங்கள் உரிமைகள்  கட்டுப்படுத்தப்படுவதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஹாங் பாபியுப்: ஜனநாயக விதிகளின் கீழ் அரசாங்கத்தின் ஆற்றல் குறித்து மக்கள் திருப்தி அடையாவிட்டால்அரசாங்கத்தை மாற்ற முடியும்.

ஆனால் மகாதீர் முறையின் கீழ் மக்களுடைய விசுவாசம் குறித்து திருப்தி இல்லா விட்டால் அரசாங்கம் அவர்களை நீக்க முடியும், மாற்றவும் முடியும். நல்ல வேளை நமக்கு அந்த விஷயம் நமக்கு இப்போது தெரிந்து விட்டது.

மஹாஷித்தா: அந்த 22 ஆண்டு கால சர்வாதிகாரி தமது புதல்வர் ஆட்சியைப் பிடிப்பதற்காக தமது சர்வாதிகார ஆட்சியை இன்னும் தொடர விரும்புகிறார். ஆகவே மகாதீர் இருக்கும் வரையில் அம்னோ ஒரு போதும் மாறாது என மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதாரும் சொல்வதில் எந்த வியப்பும் இல்லை.

நாடு ஏற்கனவே பல துண்டுகளாக உடைந்து விட்டது. அதே பிசாசு எல்லாவற்றையும் சரி செய்யும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. பக்காத்தான் ராக்யாட் மட்டுமே நமது நம்பிக்கை.

Anonyxyz: பிஎன் சிறிய பெரும்பான்மையில் வெற்றி பெறும் என்பதே மகாதீர் சொல்வதிலிருந்து நாம் உணர முடிகிறது. ஆவி வாக்காளர்கள், மை கார்டுகள் கொடுக்கப்பட்ட சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள், போலீஸ், இராணுவ வாக்குகளில் செய்யப்படும் தில்லுமுல்லு ஆகியவை வழி பிஎன் வெற்றி பெறும் என வேவுத் துறை வட்டாரங்கள் அவருக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.

தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு பெர்சே- அமைப்பே காரணம் என பழி சுமத்தும் மகாதீர், அது அதற்குத் தான் லாயக்கு எனச் சொல்கிறார். சிங்க நடனங்கள், குறிப்பாக தேவாலயங்கள் பற்றி கூறுவதின் வழி அவர் இனவாத உணர்வுகளைத் தூண்டுகிறார்.

தேர்தலில் பிஎன் தோல்வி கண்டால் அது பெரிய அதிசயமாகத் தான் இருக்கும். மலேசியா ஏற்கனவே ஒர் அதிசயம். அது பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘தனியார் நிறுவனம்’ ஒன்றுக்குச் சொந்தமான நவீனமான ஜனநாயக நாடு. பொதுச் செல்வத்தை விருப்பம் போல் கொள்ளையடிக்கும் உரிமையும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TAGS: