உங்கள் கருத்து: அம்னோ, மே 13 பல்லவியைப் பாடத் தொடங்கிவிட்டது

“மலாய்க்காரர்-அல்லாதவனான எனக்கு 513(மே 13) மீண்டும் வருமோ என்ற அச்சம் கிடையாது. பிஎன் தொடர்ந்து நாட்டை ஆளும் நிலை வருமோ என்ற கவலைதான் எனக்கு”.

ஷரிசாட்: மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் இல்லையேல் அரசியல் அதிகாரம் இழப்பர்

விஜார்ஜ்மை: அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் அவர்களே. மலாய்க்காரர்கள் தங்கள் நலன்காக்கும் கட்சியோ, தலைவர்களோ எதிர்தரப்பில் இல்லை என்று நினைத்தார்கள் அதன் விளைவாக மே 13 ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

ஆனால், நடப்பு நிலைமை முற்றிலும் மாறுபட்டது. பக்காத்தான் ரக்யாட்டில் அம்னோவில் இருப்பதைவிட ஆற்றல்வாய்ந்த மலாய்த் தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால், தங்கள் நிலை மிரட்டலுக்குள்ளாகும் என்ற அச்சமோ அதைக் காப்பாற்ற மே 13 போன்றதொரு கலவரத்தை நடத்தும் எண்ணமோ மலாய்க்காரர்களுக்கு இல்லை..

மஷிரோ: 54 ஆண்டுகள் அம்னோ ஆட்சிக்குப் பின்னரும் இரண்டும்கெட்டான் நிலையில் இருப்பது ஏன் என்று மலாய்க்காரர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் இருக்கும் நிலை ஏன் வந்தது?

மலாய்க்காரர்களின் நலன்காக்க வேண்டிய அம்னோ தலைவர்கள் அந்தப் பொறுப்பைக் கைவிட்டு பணத்தைக் கொள்ளையிட்டுத் தங்களைப் பணக்காரர்களாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தினார்கள்.

அம்னோ தலைவர்களில் பெரும் பணம்காசு இல்லாதவர் எவரேனும் உண்டா? எனவே, மலாய்க்காரர்கள், வேறுவகை மலாய்க்காரர்களை- தகுதியானவர்களை, நேர்மையானவர்களை, கடுமையாக உழைப்பவர்களை, மலாய்க்காரர் நலனை மேம்படுத்த நினைப்போரை அதற்காக தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களை- தேர்வு செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.

அடடா: நாட்டின் அரசியல் அதிகாரத்தை அம்னோவுக்குப் பட்டயம் போட்டுக் கொடுத்தது யார்? அரசாங்க அதிகாரத்கைக் கைப்பற்றும் ஆற்றல் மலாய்க்காரர்-அல்லாதாருக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

அம்னோ, தோற்றுப்போனால் அதற்குப் பெரும்பாலான மலாய்க்காரர்கள் பிகேஆரையும் பாஸையும் ஆதரிப்பதுதான் காரணமாகும்.

ஃபஸ்:  இனக் கலவரம் நடக்கும். எப்போது என்றால் அம்னோ தோற்றால் அம்னோபுத்ராக்கள் அதைத் தூண்டிவிடுவார்கள்.

குழப்பம் வந்தால் அவசரகால நிலை வரும். அதன்வழி தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் நினைப்பாக இருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. சாதாரண குடிமக்களான நாங்கள் தொல்லை கொடுப்பவர்களைப் பிடிப்போம்.

ஸ்வைபெண்டர்:  அதே பழைய பல்லவிதான். அதில் மலாய்க்காரர்-அல்லாதாருக்கு எதிராக வன்செயல் மூளலாம் என்ற மிரட்டலும் உள்ளடங்கி இருக்கிறது.

மலேசியர்கள் தூய்மையான, ஒழுங்கான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை விரும்புகிறார்கள். அம்னோவின் அத்துமீறல்களைக் கண்டு அவர்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்.

கெஜென்: பக்காத்தானில் மலாய்க்காரர்கள் இல்லையா? மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழப்பர் என்கிறீர்களே, அம்னோவும் மசீச, மஇகா, கெராக்கான் ஆகிவற்றுடனும் மற்ற கட்சிகளுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டுதானே இருக்கிறது?

பல்லினவாதி: பக்காத்தான் வென்றால் அங்கும் மலாய் பிரதிநிதிகள்தாம் பெரும்பான்மை வகிப்பார்கள். பிரதமர், துணப் பிரதமர் போன்றோர் மலாய்க்காரர்களாகத்தான் இருப்பார்கள். பிறகு எப்படி மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர்?

உண்மை என்னவென்றால், மலாய்க்காரர்கள் தொடர்ந்து பிஎன்னையே அதிகாரக் கட்டிலில் அமர வைத்தால் ஷரிசாட்டும்  அவரின் அம்னோ, மசீச. மஇகா சகாக்களும் நாட்டில் தொடர்ந்து சுருட்ட வேண்டியதையெல்லாம் சுருட்டிக் கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

உண்மை: மலாய்க்காரர்-அல்லாதவனான எனக்கு 513(மே 13) மீண்டும் வருமோ என்ற அச்சம் கிடையாது. பிஎன் தொடர்ந்து நாட்டை ஆளும் நிலை வருமோ என்ற கவலைதான் எனக்கு. 513-உடன் ஒப்பிடும்போது இதனால் ஏற்படும் இழப்புத்தான் அதிகமாக இருக்கும்.

நானே நான்: மே 13 என்றெல்லாம் மிரட்டிக் கொண்டிருக்காமல் அம்னோ ஏன் நாட்டை நல்லவிதமாக ஆள்வதில் கவனம் செலுத்தக்கூடாது?

குய்கோன்: மலாய்க்காரர்கள் அம்னோவுக்கு வாக்களிக்க விரும்பாவிட்டால் மலாய்க்காரர்கள் பெரும்பான்மை வகிக்கும் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கலாம்.

இனக் கலவரம் எதுவும் நடந்தால் அம்னோதான் அதற்குக் காரணமாக இருக்கும். ஷரிசாட் பேச்சுக்காக அவர்மீது விசாரணை நடத்த வேண்டும். போலீசுக்கு அந்தத் துணிச்சல் உண்டா?

TAGS: