அம்னோ பேராளர்களே, உங்கள் முதலைக் கண்ணீரை நிறுத்திக் கொள்ளுங்கள்

“கட்சி அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பாடப்படும் பாடலே அதுவாகும். கூடின பட்சம் இனவாதத்தை பயன்படுத்தி மலேசியர்களுடைய அனுதாபத்தைப் பெறுவதற்கு அவர்கள் முயலுகின்றனர்.”

மலாய்க்காரர்களுடைய தலைவிதி பற்றிய கவிதை வாசிக்கப்பட்ட போது பேராளர்கள் கண்ணீர் விட்டனர்

உங்கள் அடிச்சுவட்டில்: அம்னோ பேரவை தொடங்குவதற்கு முன்பு உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம் எனக் கூறிய  கட்சி அதுதான்.

அவர்கள் அல்லும் பகலும் பிதற்றிக் கொண்டிருப்பது இதுதான் – மே 13 மீண்டும் நிகழும் என மற்ற இனங்களை மருட்டுகின்றனர். தங்கள் சொந்த நாட்டில் ஒதுக்கப்படுவோம் என கண்ணீர் சிந்துகின்றனர். தாங்கள் நிற்கின்ற நிலம் மற்றவருக்குச் சொந்தமானது எனப் புலம்புகின்றனர். தங்கள் நிலமும் செல்வமும் மற்றவர்களிடம் பறி போய்விட்டதாக கூச்சல் போடுகின்றனர்…. இன்னும் பலப்பல.  ஆதரவைப் பெறுவதற்கு அந்த ஊழல் மலிந்த கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யும்.

விவேகமுள்ள மலாய்க்காரர்கள் மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்னைகளை விளக்க வேண்டும். ஊழலும் நொடித்துப் போன சிந்தனைகளையும் கொண்ட தலைவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் நமக்குத் தேவை.

சின்ன அரக்கன்: அம்னோ உறுப்பினர்கள் இவ்வாறு நாடகமாடுவதை அனுமதித்த அந்தக் கட்சித் தலைமைத்துவம் வெட்கப்பட வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் மலாய்க்காரர்கள் மகத்தான் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் மலாய் சமூகத்தில்  வளப்பம் ஏற்றத்தாழ்வாக விநியாகம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த சமூகம் பதுகாப்பற்ற உணர்வை பெற்றுள்ளது. ஒதுக்கப்பட்டதாக கருதுகிறது. அவர்களுடைய நிலைக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கும் இடையில் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தங்கள் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு தாங்கள் ஒதுக்கப்படுவதாக மலாய்க்காரர்கள் எண்ணினால் அவர்களுடைய துயரங்களுக்கு அம்னோவே பொறுப்பேற்க வேண்டும். அம்னோ பின்பற்றிய பண அரசியல், அரசாங்கத் திட்டங்களை வழங்குவதில் வெளிப்படைப் போக்கு இல்லாமை, பெரிய அளவிலான ஊழல்கள் ஆகியவை காரணமாக மலாய் சமூகத்தில் மட்டுமின்றி மற்ற இனங்களிலும் வளப்பம் ஏற்றத் தாழ்வாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

உணர்ச்சிகரமான பேச்சுக்களும் கண்ணீர் விடுவதும் மலாய்க்காரர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்கப் போவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள எல்லா நிர்வாக முறைகேடுகள், அதிகார அத்துமீறல்கள் குறித்து அவர்கள் அம்னோ தலைமைத்துவத்திடம் துணிச்சலாக கேள்வி எழுப்ப வேண்டும்.

நம்பிக்கை 7: மக்களை எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியும் என நீங்கள் நினைத்தால் இது தான்நடக்கும். மலேசியா எனக்காக நீ அழ வேண்டாம்.

Apapunboleh: அம்னோ பேராளர்களே உங்கள் முதலைக் கண்ணீரை நிறுத்திக் கொள்ளுங்கள். பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நீங்கள் உண்மையிலேயே கண்ணீர் விட வேண்டியிருக்கும்.

விஜார்ஜ்மை: அது உண்மையில் நல்ல பிரியாவிடை பாடல் ஆகும். அம்னோபுத்ராக்கள் அதிகாரத்திலிருந்துவீழ்த்தப்படுவதற்கு முன்னர் அவர்களுடைய கடைசி நடவடிக்கை இதுவாகும்.

மலாய்க்காரர்களைப் பொறுத்த வரையில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. பக்காத்தான் ராக்யாட் அவர்களுக்கு நல்ல தலைவர்கள் இருக்கின்றனர்.

மிலோசெவிச்: அரசமைப்பு மலாய்க்காரர்கள், ஒராங் அஸ்லிக்கள், காலம் காலமாக இருந்து வரும்மலாய்க்காரர்கள் ஆகியோரிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக் கொண்டு விட்டனர். இப்போது செல்வத்தைக் கொள்ளையிடுவதில் இறங்கியுள்ளனர். அவர்கள் கெட்டிக்காரர்கள் ஆனால் அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளும் தங்கள் நடவடிக்கையை மறைப்பதற்கு அவர்கள் மலாய்க்காரர்களுடைய உரிமைகளுக்கான போராட்டம் என்ற போர்வையில் மறைந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

அவர்களுடைய முகங்களைப் பாருங்கள். அவர்கள் உண்மையில் எவ்வளவு தூரம் மலாய்க்காரர்கள் என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். மலேசியாவில் உள்ள பல சீனர்கள், இந்தியர்கள் அந்த இனவாதிகளைக்  காட்டிலும் வெகு காலத்துக்கு முன்பிருந்தே இங்கு வாழ்கின்றனர். அந்த இனவாதிகள் எதிர்நோக்கும் பெரிய மருட்டல் சீனர்களோ, இந்தியர்களோ அல்ல. மலாய்க்காரர்கள் விழித்துக் கொண்டு விட்டது தான் அம்னோ நொறுங்குவதற்குக் காரணம்.

அதனால் அம்னோவை அச்சம் சூழ்ந்துள்ளது. திருடப்பட்ட பாடல்கள் அதன் நோக்கத்துக்கு உதவப் போவதில்லை.

அனாக் ஜேபி: கட்சி அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பாடப்படும் பாடலே அதுவாகும். கூடின பட்சம்இனவாதத்தை பயன்படுத்தி மலேசியர்களுடைய அனுதாபத்தைப் பெறுவதற்கு அவர்கள் முயலுகின்றனர்.

55 ஆண்டு காலச் சுதந்திரத்துக்குப் பின்னர் மலாய்க்காரர்களுடைய நிலை இது தான். அம்னோ விலகிக் கொண்டு மற்றவர்களை நிர்வாகம் செய்ய அனுமதிப்பதே நல்லது. அதனால் நம் அனவைருக்குமே நன்மை  கிட்டும்.

 

TAGS: