“12வது பொதுத் தேர்தலில் சந்தித்த எதிர்பாராத தோல்விகளுக்குப் பின்னர் அம்னோ மறு தோற்றம் பெற்று வாக்காளர்கள் எண்ணுவது தவறு என நிரூபிக்கும் என நான் எதிர்பார்த்தேன். அதற்கு மாறாக தான் எந்தத் தவறும் செய்யவில்லை என அது சொல்லிக் கொண்டே இருக்கிறது.”
அம்னோ போர் முரசு கொட்டுவது நல்ல எதிர்காலத்தைக் காட்டவில்லை
டெல்ஸ்டாய் !: 12வது பொதுத் தேர்தலில் சந்தித்த எதிர்பாராத தோல்விகளுக்குப் பின்னர் அம்னோ சவால்களை ஏற்று மறு தோற்றம் பெற்று வாக்காளர்கள் எண்ணுவது தவறு என நிரூபிக்கும் என நான் எதிர்பார்த்தேன்.
அதற்குப் பதில் அம்னோவும் அதன் தோழமைக் கட்சிகளும் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. புதை மணலில் சிக்கிக் கொண்ட மனிதனைப் போல அது ஆழமாகச் சிக்கிக் கொண்டு மூழ்கிக் கொண்டிருக்கிறது.
அண்மைய அம்னோ, மசீச ஆண்டுப் பொதுக் கூட்டங்களில் நடத்தப்பட்ட கூத்துக்கள் அவை விரக்தி அடைந்துள்ளதைக் காட்டுகின்றன. அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காக எதிர்க்கட்சிகளைச் சாடுவதிலும் தனிநபர்கள் மீது வெறுப்பைக் கக்குவதிலும் தலை விதிக்காக அழுவதிலும் அவை இறங்கியுள்ளன.
அந்தக் கூத்துக்கள் அனைத்தும் ‘அல்ட்ராமேன்’ திரைப்படங்களையே எனக்கு நினைவுபடுத்துகின்றது. அந்தக் கதைகளில் தோல்வி அடைந்த அரக்கன் மடிவதற்கு முன்னர் இறுதியாக அழுவார்.
கலா: தளபதி எஸ் தயாபரன் சொல்வது எல்லாம் உண்மை. அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி காணும்வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் ஆளும் கட்சி தனது நிலையைத் தற்காக்க போராடுகின்றது.
அம்னோ தலைவர்கள் முரண்பாடாக பேசுவதற்கு எதனையும் நேரடியாகப் பேசும் தார்மீகக் கொள்கையே அவர்களிடம் கிடையாது.
இறுதியில் எல்லா வகையான ஆட்சிகளையும் அவை கம்யூனிசமாக இருந்தாலும் அல்லது இனவாதமாக இருந்தாலும் ‘தாராளப் போக்குடைய ஜனநாயகம் வெற்றி கண்டு விடும் என வரலாறு உணர்த்துவது நல்ல செய்தியாகும்.
APA INI?: அதிகமாகப் பாசாங்கு செய்யும் கைரி ஜமாலுதின் தொடக்கம் எல்லா அம்னோ ஆதரவாளர்களும் அவசியம் இதனைப் படிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக கைரி உட்பட பலருக்கு அது புரியாது. ஆக்ஸ்போர்ட் கல்வி கற்ற கைரி அவர்களே வின்செண்ட் சர்ச்சில் உங்களைப் பார்த்து கேலி செய்வது உங்களுக்குத் தெரியவில்லையா ?
நாங்கள் இன்னொரு பொதுத் தேர்தல் பற்றியும் ஜனநாயக நடைமுறைகள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம். உங்கள் பொதுக் கூட்டத்தை சீருடை அணிந்த உங்கள் ஆட்கள் மட்டுமே உங்களது சொந்த ” தாக்குதல் துருப்புக்கள்” அல்லது இறைவன் தேர்வு செய்தவர்கள் ! ஹிட்லர் வாழ்க !
பெரிய நண்டு: என்ன போர் ? ஜனநாயகத்தில் தேர்தல் நடைமுறை வழக்கமானது. ஆனால் இந்த முறைதாங்கள் மோசமாக தோற்று விடுவோம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
அவர்கள் தோல்வி காண்பது நிச்சயம் என நான் நம்புகிறேன். தேர்தலில் வெற்றி காண்பது என நிச்சயம் எனத் தெரிந்தால் கூடிய விரைவில் தேர்தலை நடத்த வேண்டியது தானே ?
மக்களே, மாட்டு ஊழல், ஸ்கார்ப்பின், எல்ஆர்டி அம்பாங் ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ABU (Anything but Umno) அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
ஜேம்ஸ் டீன்: உண்மையில் அருமையான கட்டுரை. அம்னோவுக்கும் நாஸிக்களுக்கும் இடையில் உள்ளஒற்றுமை. அது எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். அதனால் பாஸ் புதிய மாற்று வழியைத் தருகிறது.
மே: தோக்கியோ அம்னோ மன்றப் பேராளர் அரிப் யாசிர் சுல்காப்லி அந்தக் கவிதையைப் பாடிய போது பேராளர்கள் கண்ணீர் விட்ட செய்தியை வாசித்த போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
மலாய்க்காரர்களுடைய நிலமும் செல்வமும் தொடர்ந்து பெரும்பாலும் மலாய்க்காரர் அல்லாதாரால் பறிக்கப்படுவது பற்றியதே அந்தக் கவிதையாகும்.
புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் மலாய்க்காரர்கள் தாங்கள் இழந்த நிலத்தையும் செல்வத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடக் கடவுளே ! மலாய்க்காரர் அல்லாதார் என்பதை விட ஊழல் நடைமுறைகள் வழி தங்களது தலைவர்களே அந்த நிலத்தையும் செல்வத்தையும் பறிக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா ?
எல்லா உண்மையான மலாய்க்காரர்களும் அதனை அறிய வேண்டும்.
நம்பிக்கை 7: ஜனநாயகத்தில் ஒருவர் தோல்வியை ஏற்கவும் தயாராக இருக்க வேண்டும். இல்லை என்றால் சில ஆப்பிரிக்க, அரபு நாடுகளைப் போன்று வழவழா குடியரசு தான்.