நாடற்ற இந்தியர்கள்: அதிகார வர்க்கம் காட்டிய இனவாதத்தின் விளைவாகும்

indiansஉங்கள் கருத்து : ‘இந்தோனிசியர்களும் வங்காள தேசிகளும் மூன்று மாதத்திற்குள் மை கார்டுகளைப் பெற முடியும். ஆனால் இந்தியர்கள் அல்ல. இருந்தும் மஇகா தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதற்கு உதவ விரும்புகிறது’

நாடற்ற மக்களுடைய முடிவில்லாத சொல்ல முடியாத துயரங்கள் [VIDEO 7:28 mins]

ஸ்விபெண்டர்: அந்த நாடற்ற மலேசியர்கள் அனுபவிக்கும் துயரங்களை நான் புரிந்து கொள்ள முடியும். கடந்த காலத்தில் நான் என் அடையாளக் கார்டுக்கு விண்ணப்பித்த போது என் தாயாரிடம் எல்லா ஆவணங்களும் முறையாக இருந்த போதும் எனக்கு சிவப்பு நிறக் கார்டைக் கொடுக்க முயன்றார்.

என்னுடைய எல்லா மூத்தவர்களுக்கு எல்லாம் நீல நிற அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒர் ஆண்டு மட்டுமே கல்வி கற்றுள்ள என் தாயார் சிவப்பு அடையாளக் கார்டு என்றால் என்ன என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்கு அறிந்திருந்தார். அவர் விடாமல் வாக்குவாதம் செய்தார். இறுதியில் எனக்கு நீல நிற அடையாளக் கார்டு கொடுக்கப்பட்டது. அது எனது பிறப்புரிமை.

காலஞ்சென்ற என் பெற்றோர்கள் இருவரும் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்த நாட்டுக் குடிமக்கள்.

என்னையும் என் தாயாரையும் ஏமாற்ற அந்த அதிகாரி முயற்சி செய்தார் என்று தான் நான் இன்று வரை நினைக்கிறேன். ஆனால் அந்த சம்பவம் என் வாழ்நாள் முழுவதும் அழியாத பதிவை ஏற்படுத்தி விட்டது.

சமமான குடியுரிமை, சமமான வாய்ப்புக்கள், சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமான உரிமைகள் ஆகியவை மீது வலுவான நம்பிக்கை வைத்துள்ளேன்.

அடையாளம் இல்லாதவன்_3ec6: எனக்கும் அதே பிரச்னை இருந்தது. காரணம் என் பிறப்புச் சான்றிதழில் என் தந்தையின் பெயர் தவறாக எழுதப்பட்டு விட்டதாகும். அதனைச் சரி செய்ய எனக்கு 11 மாதங்கள் பிடித்தன.

அது நடந்தது 1970ம் ஆண்டு. அதனைச் சரி செய்வதற்கு எனக்கு கல்வியறிவு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் என் சிவப்பு நிற அடையாளக் கார்டு காரணமாக ஆசிரியர் பயிற்சி எனக்கு மறுக்கப்பட்டது.

சாம்_296f: சிவப்பு நிற அடையாளக் கார்டுடன் 1970ல் நானும் சிரமப்பட்டுள்ளேன். காரணம் என் பெற்றோர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை என்னால் காட்ட முடியவில்லை. காரணம் அவர்கள் நான் பிறந்த பின்னர் பிரிந்து விட்டார்கள்.

அடையாளம் இல்லாதவன்#04243331: நாடற்ற அந்த மக்களுடைய துயரங்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.

புத்ராஜெயாவுக்கு செல்லப் போராடும் எல்ல அரசியல் கட்சிகளும் தங்கள் நிலையை அறிவிக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட இந்தியர்களுடைய போராட்டத்துக்கு அவை உண்மையில் உதவுவதை அது உறுதி செய்யும்.

நாடோடி: அரை நூற்றாண்டு முடிந்து விட்டது. நாடற்ற மக்கள் நம்மிடையே இருக்கும் போது நாம் எப்படி பெருமை கொள்ள முடியும். அம்னோ/பிஎன் நீங்கள் நாட்டுக்கு வெட்கக்கேடு.

வெளிச்சம்: இது முழுக்க முழுக்க இனவாதம். இவ்வாறு ஆவணங்கள் இல்லாத பலர் அனாதைகள் ஆவர். வசதி குறைந்தவர்களுக்கு உதவ வேண்டும் என சமயம் சொல்கிறது. அவர்களுக்கு குடியுரிமையை மறுப்பது சைத்தான் வேலையாகும்.

அடையாளம் இல்லாதவன் #46317055: இந்த நாட்டில் பிறந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

டி சுந்தரம்: இந்தோனிசியர்களும் வங்காள தேசிகளும் மூன்று மாதத்திற்குள் மை கார்டுகளைப் பெற முடியும். ஆனால் இந்தியர்கள் அல்ல. இருந்தும் மஇகா தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதற்கு உதவ விரும்புகிறது.

ராஜா1949: இந்த நிலைக்கு மஇகா-வே காரணம். 55 ஆண்டுகளாக அது என்ன செய்து கொண்டிருக்கின்றது ? அது இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சி தானே ?

TAGS: