இன்று பினாங்கில் நடைபெற்ற டிஎபி கட்சியின் புதிய மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு தேர்வில் கட்சியின் ஆலோசகரான லிம் கிட் சியாங் 1,606 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.
அடுத்து, பினாங்கு மாநில முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான லின் குவான் எங் 1,576 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மூன்றாவது இடத்தில் டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் 1,411 வாக்குகளைப் பெற்றார். இது கர்பாலுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரமாகத் தெரிகிறது. 2008 ஆம் ஆண்டில் நடந்த கட்சியின் தேர்தலில் கர்பால் 9 ஆவது இடத்தைப் பிடித்தார்.
பல சர்ச்சைக்களுக்கு ஆளான சிலாங்கூர் மாநில சட்டமன்ற தலைவர் தெங் சாங் ஹிம் 10 ஆவது இடத்தைப் பிடித்தார்.
மத்திய செயற்குழுவிற்காக இத்தேர்தலில் மலாய்க்காரர் எவரும் வெற்றி பெறவில்லை. கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ள 20 பேரும் நாளை கட்சியின் தலைவர்களை தேர்வு செய்வதோடு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக மேலும் 10 பேரை நியமிப்பார்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்கள்:
1. லிம் கிட் சியாங் (1,607)
2. லிம் குவான் எங் (1,576)
3. கர்பால் சிங் (1,411)
4. சோங் சியங் ஜென் (1,211)
5. லோக் சியு பூக் (1,202)
6. வின்செண்ட் வு (1,202)
7. டான் கோக் வாய் (1,199)
8. கோபிந் சிங் டியோ (1,197)
9. டோனி புவா (1,162)
10. டெங் சாங் கிம் (1,152)
11. போங் கூய் லுன் (1,1137)
12. ங்கா கோர் மிங் (1,075)
13. சோங் எங் (1,006)
14. சௌ கோன் இயோ (986)
15. லியோ சின் டோங் (984)
16. எம்.குலசேகரன் (984)
17. பூ செங் ஹாவ் (958)
18. தெரசா கோக் (925)
19. தியோ நீ சிங் (903)
20. ங்கே கூ ஹாம் (824)