ஒரு மோதிரம் நம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது

“சுங்கத்துறை பாரம் தவறு என நஸ்ரி சொல்லவில்லை என்பதால் அதில் காணப்பட்டுள்ள விவரங்கள் சரியானவை என்றே கருத வேண்டும்.”

24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை சுங்கத் துறை உறுதி செய்கிறது

லூயிஸ்: மலேசியர்கள் இப்போது இருண்ட காலத்தில் வாழவில்லை. இணையம் காரணமாக அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது. ஆனால் நமது அமைச்சர்கள் இன்னும் கற்காலத்திலேயே வாழ்கின்றனர். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது மலேசியர்களுக்குத் தெரியாது என அந்த அமைச்சர்கள் எண்ணுகின்றனர்.

அந்த 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, ஆனால் அதனை யாரும் வாங்கவில்லை என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அவ்வாறு சொல்வதின் வழி இந்த உலகின் கண் முன்னால் இல்லாவிட்டாலும் இந்த நாட்டில் கேலிப் பொருளாகி விட்டார்.

வாங்குவர் யாரும் இல்லாமல் விலை உயர்ந்த அந்த மோதிரம் பாதி உலகை வலம் வந்ததா?

உண்மையில் அது நியாயத்துக்குப் புறம்பாக உள்ளது. நஸ்ரி சொல்லும் கதை பொருத்தமற்றது எனச் சொல்வதற்கு ஒருவருக்கு விஞ்ஞானியின் மூளை தேவை இல்லை. இவ்வளவு தொலைவுக்கு எந்த முட்டாளாவது விலை உயர்ந்த அந்த மோதிரத்தை அனுப்புவானா?

ஜோசபின்: ஆகவே அத்தகைய மோதிரம் உண்மையில் இருக்கிறது. சுங்கத் துறை பாரம் தவறு என நஸ்ரி சொல்லவில்லை என்பதால் அதில் காணப்பட்டுள்ள விவரங்கள் சரியானவை என்றே கருத வேண்டும்.

தலைமகள் என அழைத்துக் கொள்ளும் அவர் அந்த மோதிரத்தை எப்படி பார்வையிட்டிருக்க முடியும்? தயவு செய்து அமைச்சர் அதில் அவருடைய பங்கு என்ன என்பதனை விளக்குவாரா?

யார் அந்த ஜெரெமி பே சின் தீ? அந்த மோதிரத்திற்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லையா?

யாரும் சுங்க வரி செலுத்தாததால் அந்த மோதிரம் பாதுகாப்பான கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது, அங்கிருந்து வெளியேறவில்லை என்பதை அமைச்சர் உறுதி செய்வாரா?

ஒரே எம்: “நான் சொல்ல விரும்புவது ஒன்றுமில்லை (அந்த மோதிரம் வாங்கப்பட்டது தொடர்பில்). காரணம் அது போன்ற பிரச்னைகளைக் கவனிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை.

“அவர் (அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திய வலைப்பதிவாளர்) தாம் விரும்பியதைச் சொல்லட்டும். இது ஒன்றும் வேடிக்கை அல்ல. இது அவதூறு ஆகும். நான் எதனை அனுபவிக்கவில்லை? நான் எல்லாவற்றையும் அனுபவித்துள்ளேன்,” என ரோஸ்மா ஜுலை 28ம் தேதி கூறினார்.

டத்தின், நீங்கள் 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் உட்பட எல்லாவற்றையும் நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள். .

நஸ்ரி அவர்களே, அந்த மோதிரம் இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சொல்கின்றீர்கள், ஆனால் அது யாருக்காக? அந்தப் பத்திரத்தில் பெற்றுக் கொள்பவருக்கான பகுதியில் ரோஸ்மா பெயர் ஏன் காணப்படுகிறது?

பெர்ட் தான்: 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் தொடர்பான எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலனாய்வு, வழக்கம் போல் ஆமை வேகத்தில் நகருகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை பிடிப்பதில் மட்டுமே எம்ஏசிசி முனைப்பாக செயல்படும். எடுத்துக்காட்டுக்கு, சிலாங்கூர் மந்திரி புசாரின் கார், மாடுகள். கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட்-டுக்கு கொடுக்கப்பட்ட 10 கிலோ கேக் ஆகியவற்றைக் கூறலாம்.

தான் தெங் வா: இப்போது மூன்று தரப்புக்கள்- நஸ்ரி, எம்ஏசிசி, சுங்கத் துறை- மூன்று விதமாகச் சொல்கின்றன. யாரைத்தான் நம்புவதோ?

லிம் சொங் கியோங்: வாங்கப்பட்டதோ இல்லையோ தமக்கு வாங்கும் நோக்கம் இல்லாத ஒரு மோதிரத்தை அவர் ஏன் பார்க்க வேண்டும்? அந்த மோதிரத்தை வாங்கும் சக்தி- கேள்விக்குரிய சக்தி-  அவருக்கு இருப்பதையே அது காட்டுகிறது.

இண்டோன் பிளாண்டர்: வாங்குவோர் யாரும் இல்லாத நிலையில் அந்த 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் அனுப்பபட்டதா? அதனை இறக்குமதி செய்கின்றவர் சரியான முட்டாளாக இருக்க வேண்டும். ஏனெனில் திருட்டு அல்லது கொள்ளைக்கு எதிராக காப்புறுதி செய்யப்பட்ட தொகை உண்மையில் பயங்கரக் கனவாகத்தான் இருக்க முடியும்.

எது எப்படியிருந்தாலும் ஒரு பொருள் விற்கப்படாவிட்டால் அதற்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்பது அரச மலேசிய சுங்கத் துறையின் புதிய நடைமுறையா?

உங்கள் அடிச்சுவட்டில்: இங்கு மிகவும் சிக்கனமான மனிதர்; அவர் குழந்தைப் பருவம் முதல் ஒவ்வொரு காசாக சேர்த்து, சேமித்து வைத்துள்ளார். அதனால் அந்த மோதிரத்தை அவரால் வாங்க முடிகிறது.  நீங்கள் பொறாமைப்படக் கூடாது. நான் சொல்வது சரி தானே?