உங்கள் கருத்து: தீபக் சொல்லிய குற்றச்சாட்டுக்களை போலீஸ் விசாரிக்குமா ?

deepak“திட்டங்களைப் பெறுவதற்காக நஜிப்புக்கும் அவரது குடும்பத்துக்கும் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டதற்காகவும் தீபக் மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

தீபக்-கிற்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது

பார்டிமாவ்ஸ்2020: டிஏபி தலைவர் கர்பால் சிங் மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்ட சித்தாந்தத்தை நிலை நிறுத்த முயலுகிறார் என்பது நிச்சயம். ஆனால் அவர் ‘மனிதர்களைக் கொண்ட அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுகிறார். சட்டங்களை பின்பற்றும் அரசாங்கத்தை அல்ல”.

அதனால்தான் பிஎன் அரசியல்வாதிகள் எவ்வளவு பெரிய பெரிய நிதி ஊழல்களையும் கொஞ்சம் கூட வருத்தப்படாமலும் சட்டத்துக்கு அஞ்சாமலும் செய்ய முடிகிறது. அந்த விதி விலக்கு இப்போது கொலையைச் செய்கின்றவர்களுக்கும் கடத்தல் செய்கின்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது மேலும் வருத்தமளிக்கிறது.

ஜிஜிஜிஜி: இந்த நாட்டில் நோக்கம் ஏதுமில்லாமல் கூட நீங்கள் கொலைக்காக குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்படலாம். ஆகவே தீபக் ஜெய்கிஷன் அடுத்து பலியாகலாம்.

குற்றத்தை நிரூபிப்பதற்கு அவசியமில்லாமல் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு சொல்லப்படலாம். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது: முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கான ஆதாரமே இல்லை. என்றாலும் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தண்டிக்கப்பட்டார்.

2zzzxxx: அந்தப் புகார் போலீஸ் விசாரணைக்கு வழி கோலுமா ? அம்னோ அரசாங்கமாக இருக்கும் வரையில் அது நடக்கப் போவதில்லை. எல்லாம் முடியும் ( Bolehland ) இந்த நாட்டில் போலீஸ் படை அம்னோவுக்கு வாலை ஆட்டும் நாய் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

ஜெரோனிமா: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு இப்போது மேயப் போன மாடுகள் ஒய்வு எடுக்க கொட்டகைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

ஆம், தீபக் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததற்காகக் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும். அதே வேளையில் அது நஜிப்புக்கு கஷ்ட காலமும் ஆகும். ஏனெனில் ஏற்கனவே சொல்லப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான விஷயங்கள் நீதிமன்றத்தில் வெளியாகும்.

அதே வேளையில் அம்னோ குறிப்பாக நஜிப் அந்த விவகாரம் மீது தொடர்ந்து மௌனமாக இருந்தால் தீபக் அடுத்து வரும் நாட்களில் இன்னும் அதிகமான விஷயங்களை வெளியிடக் கூடும். அதுவும் நஜிப்புக்கு நல்லதாகத் தெரியவில்லை.

நல்ல வேளை நான் அவருடைய இடத்தில் இல்லை. ‘டைட்டானிக்’ கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கிய வேளையில் முதிய ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காட்சியைக் காணலாம்  என நான் நம்புகிறேன்.

நஜிப்புக்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் அது நிகழக் கூடும் என நான் எண்ணுகிறேன்.

லவர் பாய்: கர்பால் அவர்களே, தீபக் சொன்ன தகவல்கள் குற்றம் புரியப்பட்டதற்கு போதுமான ஆதாரத்தைத் தரவில்லை என நான் கருதுகிறேன்.

பி பாலசுப்ரமணியத்தின் சத்தியம் பிரமாணம் தொடர்பான தில்லுமுல்லு, அந்த தனிப்பட்ட துப்பறிவாளருக்கு நஜிப் சகோதரர் பணம் கொடுத்தது  ஆகிய தகவல்களை மட்டுமே தீபக் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஜோ பெர்ணாண்டஸ்: திட்டங்களைப் பெறுவதற்காக நஜிப்புக்கும் அவரது குடும்பத்துக்கும் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டதற்காகவும் தீபக் மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜீன் பெரரா: தீபக் இன்னும் அதிகமான விஷயங்களை வெளியிடும் வரை கர்பால் காத்திருந்திருக்க வேண்டும். இப்போது தீபக் வாயை மூடிக் கொள்ளப் போகிறார். தவறான யோசனை.

 

TAGS: