உங்கள் கருத்து: “இப்ராகிம் அலிமீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவர்கள் தொடர்ந்து கனவு காண வேண்டியதுதான். அவரை யாரும் தொட முடியாது”.
மே 13-ஐ நினைவுபடுத்தும் இப்ராகிம் அலி வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்
சின்னஜாம்பவான்: மலாய்க்காரர்-அல்லாத பிஎன் தலைவர்கள் எதற்காக இப்ராகிம் அலிமீது பாய்கிறார்கள்? அதனால் ஆகப்போவது என்ன? அவர்கள் அம்னோமீதுதான் ஆத்திரப்பட வேண்டும். பெர்காசா சொல்வதையும் செய்வதையும் அம்னோ முழுமையாக ஆதரிக்கிறது என்பதை அறியாதவர்களா, அவர்கள்?
மலேசியர்களின் இணக்கநிலைக்குக் கேடு செய்யும் வகையில் அறிக்கைகள் விடும் பெர்காசாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அம்னோவைக் கேட்டுக்கொள்ளும் துணிச்சல் பிஎன்னில் உள்ள மலாய்க்காரர்-அல்லாத தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.
மசீசவும் கெராக்கானும் மஇகாவும் என்னதான் ஆத்திரப்பட்டு அறிக்கைகள் விடுத்தாலும் இப்ராகிம் அலியும் பெர்காசாவும் அவற்றை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள்.
இந்நாட்டில் உள்ள சீனர்களைப் பற்றியோ இந்தியர்களைப் பற்றியோ மற்ற மலாய்க்காரர்-அல்லாதார் பற்றியோ தான் என்ன சொன்னாலும் அம்னோ கண்டுகொள்ளாது என்பதை பெர்காசா நன்கு அறியும்.
ஆனோனோனோ: ஆமாம் ஐயா, இந்நாட்டில் சீனர்களின் காட்டில்தான் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறது. அதனால்தான் ஒரு மில்லியன் சீனர்கள் நல்ல எதிர்காலத்தைத் தேடி புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.
எத்தனையோ, வயதான சீனத் தம்பதிகள் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடு சென்றுவிட்டதால் தனித்து வாழுகிறார்கள்.
வயதான காலத்தில் பிள்ளைகளும் உற்றார் உறவினரும் சுற்றி இருக்க வேண்டும் என்றுதானே எவரும் விரும்புவர்.
முஷிரோ: பொருளாதாரத்தில் 40விழுக்காடு சீனர்கள் வசம் என்றால் அது நியாயமான விகிதாசாரம்தானே. நஜிப் 1மலேசியா பற்றிப் பேசி வரும்போது இப்ராகிம் அலி ஏன் இப்படிப் பேசுகிறார்?
ஜேம்ஸ்1067: மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பற்றிப் பேசுவார் என்று பார்த்தால்,அப்பாவி மக்கள் பலி ஆவார்கள் என்று மிரட்டுகிறார்.
ஹங்பாப்: “அது நடப்பதை நாங்களும் விரும்பவில்லை”-இப்ராகிம் அலி.
இதன் விளக்கம்: அது நடப்பதை நாங்களும் விரும்பவில்லைதான். ஆனால், நாங்கள் விரும்புவதை, எப்போது விரும்புகிறோமோ அப்போது, எப்படி நினைக்கிறோமோ அப்படி நீங்கள் செய்யாதிருந்தால் அது நடக்கக்கூடும். அதைத் தடுக்க நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்.
“அதை நினைவில் வைத்து எங்களைச் சாந்தப்படுத்தி மகிழ்ச்சி படுத்துங்கள். இல்லையேல், பயங்கர விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்”.
இது அரசியல் மிரட்டல். பணிவன்புடன் செய்யப்படும் மிரட்டல். ஆனால் மிரட்டல் என்பதில் ஐயமில்லை.
லோங் ஜாபார்: இப்ராகிம் அலிமீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவர்கள் தொடர்ந்து கனவு காண வேண்டியதுதான். அவரை யாரும் தொட முடியாது.
பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்கிறது பெர்காசா
லம்பொர்ஜினி: ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்கிறார் இப்ராகிம் அலி.
பல்லின மலேசியாவில் இப்படிப் பேசுவது ஆபத்தானது,நிச்சயமாக 1மலேசியா உணர்வுக்கு எதிரானது.
அமைதியும் இணக்கமும் ஓற்றுமையும் நிறைந்த ஒரு மகத்தான நாட்டை உருவாக்க மிதவாதமும் பரஸ்பர மரியாதையும் தேவை. வல்லான் வகுத்ததே வாய்க்கால், ஒரு இனம் மற்ற இனங்களைவிட மேலானது என்ற பேச்செல்லாம் அதற்கு உதவாது.
லிம்: இப்ராகிமின் பிரச்னை என்னவென்றால், அம்னோகூட அவரை விரும்புவதில்லை. அதனால் அவர் ஒரு சுயேச்சையாக ஆனால் பிஎன்-ஆதரவாளராகத்தான் தொடர்ந்து இருப்பார். எவ்வளவு காலத்துக்கு என்பதுதான் கேள்வி. ஏனென்றால், 13வது பொதுத் தேர்தலுக்குப் பின் அவர் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்.
விஜார்ஜ்மை: இப்ராகிம் அலி பாசிர் மாஸ் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வதே உறுதியில்லை. பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பானமை வேண்டுமாம். நல்ல வேடிக்கை.
பெர்காசா அம்னோவின் இன்னொரு முகம். இல்லை என்றால் இவரை உள்ளே தூக்கிப் போடுவதற்காகவாவது ஐஎஸ்ஏ-க்கு மீண்டும் உயிர் கொடுத்திருப்பார்கள்.
தான் செய்ய வேண்டிய அசிங்கமான வேலைகளை இப்ராகிம் அலி செய்வதை எண்ணி அரசாங்கம் இரகசியமாக புன்னகைக்கும்.