மலேசிய இனம் (Bangsa Malaysia) ஒரே நாளில் உருவாகி விடாது

dap‘திரிக்கப்பட்ட நியாயம்- பிஎன் பெரும்பாலும் ஒரே இனத்தை அடித்தளமாகக் கொண்ட கட்சிகளின் கலவையாகும். அது மலேசிய உணர்வுக்குப் பொருத்தமானது. ஆனால் எல்லா இனங்களுக்கும் திறக்கப்பட்டுள்ள பக்காத்தான் கட்சிகள் அப்படி அல்ல’

கோ சூ கூன்: மலாய்க்காரர்கள் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்குத் தேர்வு செய்யப்படாதது மலேசிய உணர்வுக்கு முரணானது

டபிள்யூசோய்: இந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கு மேலாக இன அடிப்படைக் கட்சிகள் ஆண்டு வருகின்றன. பல இன அரசியல் கட்சி ஒன்று ஒரே நாளில் அந்த வடிவமைப்பை மாற்ற முடியும் என எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்.

எதிர்காலத் தலைமுறையினர் போட்டி ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்ந்து மதிக்கப்பட வேண்டுமானால் இளம் மலேசியர்கள் குறிப்பாக இன வேறுபாடின்றி மலேசிய இனம் குறித்து வலியுறுத்த வேண்டும்.

வளப்பத்தை ஒதுக்கீடு செய்வதால் எந்த இனமும் முன்னேற முடியாது. ஏனெனில் அது போட்டி ஆற்றலை வளர்க்கவில்லை. புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடிந்து விட்டது. அரசாங்க ஒதுக்கீடுகளில் பெரும்பகுதி மலாய்க்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த சமூகம் முழுமையாக எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது ?

கடந்த 50 ஆண்டுகளில் சீனத் தொடக்கப் பள்ளிகள் ஒரங்கட்டப்பட்டன, ஒதுக்கப்பட்டன, வேண்டுமென்றே மிரட்டப்பட்டன. ஆனால் சீனத் தொடக்கப் பள்ளிகள் உயிர் பிழைத்ததுடன் நன்றாகவும் செயல்படுகின்றன.

வேலை ஏதும் செய்யாமல் ஊட்டி வளர்ப்பதாலும் எளிதாக பணம் கிடைப்பதாலும் திறமையை நீங்கள் எப்படி உயர்த்த முடியும் ?

அடையாளம் இல்லாதவன் _40f4: அம்னோ உச்ச மன்றத்தில் எத்தனை இந்தியர்களும் சீனர்களும் இருக்கின்றனர் ? மசீச, மஇகா, கெரக்கான் மத்திய நிர்வாகக் குழுக்களில் எத்தனை மலாய்க்காரர்கள் உள்ளனர் ? யாருமே இல்லை. அவர்கள் நியமனம் கூட செய்யப்படவில்லை. ஏனெனில் அவற்றின் தலைமைத்துவம் ஒரே இன ஆதிக்கத்தில் உள்ளது.

எம்டபிள்யூ: வழக்கம் போல திரிக்கப்பட்ட நியாயம்- பிஎன் பெரும்பாலும் ஒரே இனத்தை அடித்தளமாகக் கொண்ட கட்சிகளின் கலவையாகும். அது மலேசிய உணர்வுக்குப் பொருத்தமானது. ஆனால் எல்லா இனங்களுக்கும் திறக்கப்பட்டுள்ள பக்காத்தான் கட்சிகள் அப்படி அல்ல. ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவற்றின் தலைமைத்துவத்தில் ஒர் இனம் ஆதிக்கம் செலுத்துகின்றது.

பல இனம்: டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய்க்காரர்கள் தேர்வு செய்யப்படாததால் அம்னோ, கெரக்கானைக் காட்டிலும் டிஏபி-யின் மலேசிய உணர்வு குறைந்தது அல்ல.

உண்மையில் அம்னோ கெரக்கானைக் காட்டிலும் டிஏபி மலேசியத் தன்மையை அதிகமாகக் கொண்டுள்ளது.

அம்னோ இன அடித்தளக் கட்சி.   அந்தக் கட்சிக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை. அதன் தலைவர் ஒரே மலேசியாவை போதிக்கும் வேளையில் அந்தக் கட்சி முழுக்க முழுக்க மலாய்க்காரர்களுடையதாகும். கெரக்கான் அது பற்றிப் பேசுவதற்கு தகுதி இருந்தால் பேசலாம்.

டிஏபி, மலாய் தலைவர்களைக் கவர இன்னும் நிறையச் செய்ய வேண்டும்.

அனோன்: கெரக்கான் தலைவர் உண்மை நிலையைத் தான் சொல்கிறார். டிஏபி 99.9 விழுக்காடு சீனர் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். ‘பல இனத்தன்மையை’ கொண்டுள்ளதாக அது கூறிக் கொள்வது மேலோட்டமான திரையாகும். அது கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது.

கர்பால் சிங் போன பின்னர் அவர்கள் அவருடைய இரண்டு புதல்வர்களையும் துரத்தி விடுவர். பின்னர் டிஏபி 100 விழுக்காடு சீனர் கட்சியாக இருக்கும்.

பெர்ட் தான்: கோ சூ கூன் அவர்களே, மற்றவர்களைப் பற்றி கருத்துச் சொல்ல வாயைத் திறந்து முட்டாளாவதற்கு முன்னர் உங்கள் கொல்லைப் புறத்தைத் திரும்பிப் பார்த்தீர்களா ?

உங்கள் பல இன கெரக்கான் கட்சியின் 2008-2011க்கான நிர்வாகிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாக மொத்தம் 37 உறுப்பினர்கள் உள்ளனர்.  10 பார்வையாளர்களும் உள்ளனர்.

டிஏபி போன்ற பல இனக் கட்சியில் ஒரு மலாய்க்காரர் கூட மத்திய நிர்வாகக் குழுவுக்கு தேர்வு செய்யப்படாதது வெட்கக்கேடு என நீங்கள் சொல்கின்றீர்கள். உங்கள் கட்சி நிலை பற்றி இப்போது பேசுவோம்.

உங்கள் மத்தியக் குழுவில் அஸாருதீன் அகமட் என்பவர் மட்டுமே உள்ளார். அவரும் உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின்னர் மத்தியக் குழுவுக்கு நியமிக்கப்பட்டவர்.

டிஏபி-யில் உள்ள மொத்தம் 30 மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களில் நியமிக்கப்பட்ட இரண்டு மலாய் உறுப்பினர்களாவது உள்ளனர். ஆகவே நீங்கள் பேசுகின்ற மலேசிய உணர்வு எங்கே போனது ? அது உங்களுக்குப் பொருந்தாதா ?

கேபிஎன்ஜி: கோ சூ கூன் அவர்களே, நடிக்க வேண்டாம். நீங்களே அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டவர்.  அதனால் இரண்டு மலாய்க்காரர்கள் டிஏபி மத்தியக் குழுவுக்கு நியமிக்கப்பட்டது பற்றி நீங்கள் பேசக் கூடாது.

 

TAGS: