உங்கள் கருத்து: டாக்டர் மகாதீர் ஆட்சிக்கு வரும் வரை மலேசியா இறையருள் பெற்ற நாடாகத் தான் திகழ்ந்தது

maha“மகாதீர் முகமட் என்ற பெயரில் ஒரு சாபக்கேடு நமக்கு வரும் வரையில்  மலேசியா உண்மையில் இறையருள் பெற்ற நாடாகத் தான் திகழ்ந்தது”

மலேசியா இறையருள் பெற்ற நாடு என்கிறார் டாக்டர் மகாதீர்

ஸ்டார்ர்: நாட்டின் ஆற்றலை மதிப்பீடு செய்ய முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பயன்படுத்தும் ஒப்பீடுகள் எப்போதும் நன்றாக இருந்தது இல்லை. அதில் எதிர்காலம் பற்றிய சிந்தனையே இல்லை. அது நிச்சயம் சுய விளம்பரம் தான்.

நமது அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாரம்பரியம், மக்கள், இறையாண்மை ஆகியவற்றில் பொதுவான பண்புகளைக் கொண்ட சிங்கப்பூருடன் ஒப்பிட்டு நாம் ‘இழந்த வாய்ப்புக்களை’ பார்ப்பதே நாட்டை மதிப்பீடு செய்வதற்கு நல்ல வழியாகும்.

முட்டாள்களே அத்தகையை ஒப்பீட்டை நிராகரிப்பார்கள். உகாண்டா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுவது புண்பட்ட மனதுக்கு மேலும் காயத்தை ஏற்படுத்துவதற்கு ஒப்பாகும். மோசமான நாடுகளுடன் நம்மை ஒப்பிட்டு பார்ப்பதால் நமக்கு என்ன பெருமை ?

பெர்ட் தான்: “மலேசியா இறையருள் பெற்ற நாடு” என மகாதீர் சொல்கிறார். அது நிச்சயம் உங்களுக்குப் பொருந்தும். ஏனெனில் உங்கள் புதல்வர்கள் செல்வந்தர்கள்.

பல இனம்: மலேசியா இறையருள் பெற்ற நாடு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. காரணம் இங்கு இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வதில்லை. இயற்கை வளங்கள் நிறைவாக உள்ளன. மண் வளமும் உண்டு.

டாக்டர் மகாதீர் நமக்கு அதனைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் மகாதீர் நமக்குச் சொல்ல மறந்தது- மனிதன் உருவாக்கிய பேரிடர்களில் உலகில் முதலிடம் வகிப்பது நாம் என்பதாகும்.

அம்னோவும் அதன் பிஎன் கும்பலும் மலேசியாவை ஆட்சி புரியத் தொடங்கும் வரையில் மலேசியா இறையருள் பெற்ற நாடாகத் தான் திகழ்ந்தது.

மலேசியர்கள் முட்டாள்கள் அல்ல: அவரது கண்ணோட்டத்தில் மலேசியா இறையருள் பெற்ற நாடு தான். கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர் கொள்ளையுடன் அது அவரை உலகில் இரண்டாவது பெரிய பணக்காரராக்கியுள்ளது.

அவரது பிள்ளைகள் இந்த நாட்டுப் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நம்மைப் போன்ற மற்ற அனைவருக்கும் மகாதீர் காரணமாக இந்த நாடு சபிக்கப்பட்ட தேசமாகி விடும்.

தாய்லெக்: டாக்டர் மகாதீர் சொல்வது முற்றிலும் உண்மை. மலேசியா இறையருள் பெற்ற நாடு தான். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக ஆளும் வர்க்கத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக அதனை சூறையாடுகின்றனர், கொள்ளையடிக்கின்றனர்.

அவை இல்லை என்றால் மலேசியா வலிமை வாய்ந்த ஆசிய நாடாக இன்னேரம் சிங்கப்பூர், தைவானுக்கு இணையாக திகழ்ந்திருக்கும்.

ஜேம்ஸ் டீன்: மகாதீர் முகமட் என்ற பெயரில் ஒரு சாபக்கேடு நமக்கு வரும் வரையில்  மலேசியா உண்மையில் இறையருள் பெற்ற நாடாகத் தான் திகழ்ந்தது. அந்த சாபக்கேடு இல்லை என்றால் மலேசியா இப்போது ஆசியாவில் ஜப்பானுக்கு இணையாகத் திகழும்.

2ம் தலைமுறை இந்தியன்: பெட்ரோனாஸ் கொடுக்கும் எண்ணெய் வருமானம் இல்லாவிட்டால் இவ்வளவு முறைகேடுகளுக்குப் பின்னர் நாடு இன்னேரம் எப்படிப் போயிருக்கும் என்பதை தயவு செய்து நீங்கள் விளக்க வேண்டும்.

நாட்டு வருமானத்தில் 50 விழுக்காடு எண்ணெயைச் சார்ந்துள்ளதை நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அதற்கு உங்கள் திறமையோ ஆற்றலோ காரணம் அல்ல.

 

TAGS: