டிஏபி தலைவர் ங்கே கூ ஹாமுக்கு நிலம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி விளக்கமளித்த கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், முதலில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அந்த 10,536 ஹெக்டார் தோட்ட நிலம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அதை ங்கே வாங்கினார் என்றும் கூறினார்.
அந்நிலம், 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாசிர் பாஞ்சாங் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் நிஜார் ஜமாலுடினை மந்திரி புசாராக்குவதற்குக் கைமாறாக ங்கேக்குக் கையூட்டாகக் கொடுக்கப்பட்டதென அம்னோ தலைவர்கள் குற்றம் சாட்டியதை அவர் மறுத்தார்.
அவ்வாறு “அவதூறு” கூறியிருப்பவர்கள்மிது வழக்கு தொடுப்பது பற்றி நிக் அசீஸ் ஆலோசித்து வருவதாக அவரின் பத்திரிகைச் செயலாளர் அஹ்மட் பட்லி ஷாரி வெளியிட்டிருக்கும் அறிக்கை கூறியது.