“இரண்டாவது வாய்ப்பைக் கேட்பதற்கு முன்னர் நீங்கள் முதலில் மக்களிடமிருந்து திருடிய நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.”
சிலாங்கூர் பிஎன்: மலிவான நில விவகாரத்தை டிஏபி அரசியல் ரீதியில் திசை திருப்புகின்றது
லிம் சொங் லியாங்: கையும் களவமாக பிடிபட்ட பின்னர் ஒரு குற்றவாளி எத்தனை வழிகளில் கதை சொல்லமுடியும் ?
அந்த விவகாரம் மிகத் தெளிவானது. அந்த அம்னோ ஜமீன்தார்களும் பிஎன் சேவகர்களும் அரசாங்க நிலத்தைத் திருடி வந்துள்ளனர். இப்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
அம்னோ/பிஎன் உடைய கடந்த காலத் தவறுகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து நாம் முன்னோக்கிப் பார்க்க வேண்டும் எனச் சிலாங்கூர் பின் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் கூறுகிறார்.
அவற்றின் குற்றங்களை நாம் மறந்து விட வேண்டும் என அவர் சொல்ல வருகிறாரா ?
மாற்றம்: அந்த நில அபகரிப்புக் குற்றச்சாட்டுக்கள் எவ்வளவு கடுமையானவை என்பது உங்களுக்குத் தெரியுமா ? உங்கள் கூட்டணி சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றும் முயற்சியை எந்த அளவுக்குப் பாதிக்கும் அது பாதிக்கும் தெரியுமா ?
மலிவாக மதிப்பிடப்பட்ட விலையில் நிலம் மாற்றி விடப்பட்ட போது நிகழ்ந்த நம்பிக்கை மோசடி பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதனால் அரசாங்கத்துக்கு மில்லியன் கணக்கான ரிங்கிட் வருமான இழப்பு ஏற்பட்டது.
திருடியது திருடியது தான். அது எப்போது நிகழ்ந்தது-அது 2008க்கு முன்னர் நிகழந்தாலும்- என்பது முக்கியமல்ல. தவறு செய்தவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப்படுவதே முக்கியம். அந்த நிலத்துக்கு முறையான தொகை கொடுக்கப்பட வேண்டும் அல்லது அது சிலாங்கூர் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
நியாயம்: முகமட் ஜின், பிஎன் அதிகார அத்துமீறல் தொடர்பில் டிஏபி அரசியல் ரீதியில் திசை திருப்புவதாக நீங்கள் சொல்கின்றீர்கள். அது உண்மையில் உங்கள் அறிவுக் குறைவை உணர்த்துகின்றது.
முன்னோக்கிப் பார்ப்பதால் ஏற்கனவே பிஎன் செய்த தவறுகளிலிருந்து அதனைக் கழட்டி விட முடியாது. நீங்கள் அந்த விஷயத்தை பூசி மெழுகுவது அதனை உறுதி செய்கின்றது.
குழப்பம் அடைந்தவன்: 2008க்கு முன்னர் நிகழ்ந்த எல்லாத் தவறுகளிலிருந்து பிஎன் -னுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் விரும்புகிறாரா ?
ஒரு குற்றத்தைச் செய்தவர்கள் மீது வழக்குப் போடுவதற்குக் கால வரம்பு ஏதும் உள்ளதா ?
வெறும் பேச்சு: ஊழல் மலிந்த பல பிஎன் அரசியல்வாதிகளைக் கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ள மலிவான நிலவிவகாரத்தை வாக்காளர்கள் மறக்க வேண்டும் என முகமட் ஜின் எதிர்பார்க்கிறாரா ?
2008 மார்ச் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் சிலாங்கூரைக் கைப்பற்றா விட்டால் அந்த அதிகார அத்துமீறல்களும் ஊழல்களும் தொடர்ந்து மறைக்கப்பட்டிருக்கும்.
உண்மையில் அந்த அம்னோ/பிஎன் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ‘விருப்பமுள்ள விற்பனையாளர்-விருப்பமுள்ள வாங்குகின்றவர்’ புகழ் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் கிர் தோயோவைப் போன்று ஜெயிலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
அந்த முன்னாள் அம்னோ ரயில்வே வாயில் காவலர் கோலக் கிள்ளானில் ஒரு துண்டு மலிவு நிலத்தில் தமது அரண்மனையை கட்டியிருப்பதை மறந்து விட வேண்டாம்.
ஜேகே7462000: பிஎன் மலிவாக நிலத்தைப் பெற்றது பழைய விஷயமா ? உண்மையா ? எனக்கு ஏன் ஏற்கனவே அது தெரியாமல் போனது ?
உண்மை: அந்தக் கோமாளிகள் என்ன தண்டனையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முன்னைய நிர்வாகத்தைச் சேர்ந்த யாராவது நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனரா ?
கூட்டரசு அரசாங்கத்தில் அவர்கள் இன்னும் அதிகாரத்தில் இருப்பதால் யார் மீது குற்றம் சாட்டப்படவில்லை எனத் தோன்றுகிறது.
விஜார்ஜ்மை: முகமட் ஜின், 13வது தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் நிலத்தை மாநில அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்து விடுங்கள்.
சட்டத்தின் கீழ் மக்கள் செல்வத்தைக் கொள்ளையடித்ததற்கான தண்டனையை நீதிமன்றங்களே வழங்க வேண்டும். வாக்குப் பெட்டிகள் வழி அல்ல.
மாட் சாலே: எதற்காக ‘இன்னொரு வாய்ப்பு’ ? சிலாங்கூர் மிக நல்ல விதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.மாற்றத்துக்கான நேரம்: நீங்கள் உண்மையானவராக இருந்தால் இரண்டாவது வாய்ப்பைக் கேட்பதற்கு முன்னர் நீங்கள் முதலில் மக்களிடமிருந்து திருடிய நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒரே பாம்பினால் இரண்டாவது முறை கடிபடுவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல. அது நிகழ்ந்தால் அதற்கான பழி மக்களையே சாரும்.
அடையாளம் இல்லாதவன்_39d1: 2008ல் உங்களை கொள்ளையடித்த திருடனைப் பிடித்தால் நீங்கள் விட்டு விடுவீர்களா ?