இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வருவதால் பிரச்னைகள் தீராது

teachers“விரைவில் எல்லோரும் எஸ் தயாபரன் அல்லது டெரன்ஸ் நெட்டோ போன்று எழுதப் போகின்றார்கள். வழக்குரைஞர் அவர்களே எல்லாம் சரி சரி சரி அப்படி என்றால் என்ன ?”

இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களை வரவழைக்க மலேசியா விரும்புகிறது

கேஎஸ்என்: இது சரியான முடிவு. அதில் சிறப்புக் கணிதம், அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியர்களையும் கொண்டு வருவதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 1950களிலும் 1960களிலும் 1970களிலும் அந்தப் பாடங்களை நமக்குப் போதித்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பது நமக்கு நினைவிருக்கிறது.

அவர்கள் மகத்தான பணிகளைச் செய்தனர். அந்தப் பாடங்களுக்கான பாடத்திட்டத்தையும் மேம்படுத்துங்கள். அதே நேரத்தில் பொருத்தமற்ற ஆசிரியர்களைச் சேர்ப்பதை நிறுத்துங்கள்.

காந்தி: கேஎஸ்என் நீங்கள் சொல்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை ஆகும். ஆங்கில மொழித் தரம் மேலும் மோசமடைவதை அது தடுக்கும்.

இந்தியா, ஆங்கில மொழி பேசும் நாடுகளுக்குக் கூட ஆங்கில மொழியை ஏற்றுமதி செய்கின்றன. அந்த நாட்டின் தனியார் பள்ளிகள் உருவாக்கும் மாணவர்களுடைய ஆங்கில மொழி ஆற்றல் மகத்தானது.

இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில மொழி ஆசிரியர்கள் சிறந்தவர்கள் என்பது நிச்சயம். அவர்களுடைய இலக்கணம் குறையற்றது. அந்த நாட்டைச் சேர்ந்த விக்ரம் சேத், அருந்ததி ராய் போன்றவர்கள் பல அனைத்துலக விருதுகளைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கூட பல இந்தியர்கள் ஆங்கில மொழி ஆற்றல் காரணமாக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வருவதால் மலேசியாவுக்கு கோளாறு ஏதும் ஏற்படாது. ஆனால் அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்பட மாட்டாது என நான் அஞ்சுகிறேன்.

பாரத் மேனன்: கணித, அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதால் ஆங்கில மொழியில் பேசும் ஆற்றலும் எழுதும் ஆற்றலும் உயரப் போவதில்லை.

ஆங்கிலத்தை போதனா மொழியாகக் கொண்ட தேசியப் பள்ளிக்கூடங்களை மீண்டும் அறிமுகம் செய்வது தான்

ஒரே வழி. மலாய், சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை நாம் வைத்திருக்கும் போது ஆங்கில மொழிப் பள்ளிகளை ஏன் மீண்டும் தொடங்கக் கூடாது ? என்றாலும் நடப்பு நிர்வாகத்தின் சிந்தனைகளைப் பார்க்கும் போது நாம் அந்த விஷயத்தில் அதிகம் நம்பிக்கை வைக்க முடியாது.

ஆகவே மலேசியாவின் ஆங்கில மொழித் தரம் என்றும் தாழ்வாக இருக்கப் போகிறது. பழைய தலைமுறை மறைந்ததும் அது இன்னும் மோசமடையும்.

வசதி உடையவர்கள் மட்டுமே நல்ல ஆங்கில மொழிக் கல்வியைப் பெறுவதற்கு தனியார்/அனைத்துலகப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியும்.

ரா2012: ஆங்கிலத்தை போதிக்க வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டு வருவதால் நமது நாட்டின் ஆங்கில மொழித் தரம் மோசமாக இருக்கும் பிரச்னையை தீர்த்து விடாது.

நடப்பு ஆங்கில மொழித் தரத்தை நன்கு அறிந்து கொள்ள தனியார் துறை ஒத்துழைப்புடன் அரசாங்கம் விரிவான ஆய்வை முதலில் மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கூடங்களில் மட்டுமின்றி அரசாங்க நிர்வாகத்திலும் தனியார் துறையிலும் ஆங்கிலத் தரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த ஆய்வு பரிந்துரைக்க வேண்டும். தேவையானால் ஆசிரியர்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அமெரிக்காவையோ இந்தியாவையோ நாடுவது பிரச்னைக்குத் தீர்வு அல்ல. நாம் முதலில் உள்நாட்டைப் பார்க்க வேண்டும்.

இறைவன் அல்ல: இந்திய விரிவுரையாளர்களுடைய ஆங்கில மொழி பேச்சை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் என்பது என் புதல்வி உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கு நன்கு தெரியும்.

சிங்கப்பூரிலிருந்து ஆசிரியர்களை அல்லது ஆரோக்கியமாக உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஏன் சேர்க்கக் கூடாது ?

உங்கள் அடிச்சுவட்டில்: விரைவில் எல்லோரும் எஸ் தயாபரன் அல்லது டெரன்ஸ் நெட்டோ போன்று எழுதப் போகின்றார்கள். வழக்குரைஞர் அவர்களே எல்லாம் சரி சரி சரி அப்படி என்றால் என்ன ?

 

TAGS: