சுவா: பிஎன்னிடம் குறைபாடு இருக்கலாம்; ஆனால், அது எல்லாரையும் அரவணைத்துச் செல்கிறது

1chuaபிஎன்னிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால், எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கைகள் அதனிடம் உண்டு. மற்ற கட்சிகளைப் போல் அது பாலியல் பாகுபாடு காண்பிப்பதில்லை என்று மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறினார்.

கிளந்தானில் யுனிசெக்ஸ் முடி அலங்கார நிலையங்கள் விசயத்தில் பாஸ்-தலைமையிலான அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் இதற்கு ஓர் எடுக்காட்டு என்றாரவர்.

“உதவாக்கரை கொள்கைகளைக் கொண்டு மக்களைப் பிரித்து வைப்போரை நாம் ஒதுக்க வேண்டும், நிராகரிக்க வேண்டும்.

“பிஎன்னிடம் பல குறைகள் இருந்தாலும் எல்லாரையும் அரவணைத்துக் கொள்கிறது, சேவை செய்கிறது”, என்றாரவர்.

“அதிதீவிரவாத தரப்புகளைச் சமாதானப்படுத்துவதற்காக மக்களின் வாழ்க்கைமுறையை வலுக்கட்டாயமாக மாற்றக்கூடாது”.

மக்களைப் பாதுகாக்கக்கூடியவர் நஜிப்தான் என்பதால் மக்கள் நஜிப் மீதுதான் மீண்டும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார் சுவா.

“நஜிப்பின் தலைமைத்துவம் தொடர்வதற்கு ஆதரவளித்து வெறுப்பு அரசியலையும், ஒதுக்கி வைத்தலையும் பிளவுபடுத்தலையும் தீவிரவாதத்தையும் வெறித்தனத்தையும் வெற்றிகொள்வோம்”.

மலேசியர்கள் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துக்காக பிஎன் வெற்றிபெற “ஆசி” கூற வேண்டும் என்று சுவா  தம் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டார்.

“நம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க அடுத்த சில மாதங்களில் நாம் மேற்கொள்ளப்போகும் பயணம் மிக முக்கியமானதாக இருக்கும்”, என்றாரவர்.

TAGS: