“இப்பெருநாளை இலட்சியத் திருநாளாகக் கொண்டாடுவோம்”

-சேவியர் ஜெயக்குமார், டிசம்பர் 24.12.2012

இந்நாட்டு மக்கள் அனைவருக்கும்  இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத்xavier தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்பண்டிகையின் சிறப்பே இருப்போர் இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவதுடன்   அன்பைஅனைவரிடமும் பரிமாறிக் கொள்வதில்தான் உள்ளது.

நாட்டு மக்களிடையே ஒற்றுமையும், புரிந்துணர்வும் வளர அனைத்து வழிகளிலும், எல்லாப் பண்டிகைகளின் போதும் திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்தி வருகிறோம். அதனைத் தொடர்ந்து நடத்தி நாட்டின் ஒற்றுமைக்கு உழைப்போம், உயர்வடைவோம்.

நமது நாட்டின் 55 ஆண்டு கால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட  சூழ்நிலையில் 2013 ம் ஆண்டை வரவேற்கின்றனர். அதற்கு ஏற்ப மாற்றத்தின்  அனுகூலம்  எல்லா மலேசியர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

கிறிஸ்மஸ் தினமான இன்று அனைத்து கிறிஸ்த்துவ குடும்பங்களும் மகிழ்ச்சியான,  இனிய திருநாளாக இன்றும் இனி என்றும் அமைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.

இந்த இனிய வேளையில் நமக்குக் கிடைக்கும் சௌபாக்கியங்கள் உலகெங்கும் வாழும் மக்கள் அனைவருக்கும் கிட்டவேண்டும். அதே போல் நாட்டின் வளமும் செழிப்பும் எல்லா மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய  எல்லாச் சமயத்தினரும் ஒன்று பட்டு பாடுபடுவதை நாமும் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். அனைத்து சமயப் பெரியோர்களும், ஏசு நாதர் உட்பட, மக்களின் நல்வாழ்வுக்காகவே அர்ப்பணிப்பும் தியாகமும் செய்துள்ளனர்.

அதுபோல் நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்நாட்டில் சிறப்பாக வாழ நம் அனைவருக்கும் இடமுண்டு. நாட்டில் வளமுண்டு, வழியும் உண்டு. சமத்துவமான தேசத்தில் அனைவரும் எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் பெற வேண்டும். ஆனால் அது மறுக்க பட்டுள்ளது. நமது பிள்ளைகளும் அவர்களின் தலைமுறைகளும் அதனை மீண்டும் அடையச் சரியான அடித்தளமிட இப்போதுள்ள வாய்ப்பினை தவறவிட்டால் எதிர்காலச் சந்ததியினர் நம்மை நிந்திப்பர் என்பதனை மனதில் நிறுத்தி, இப்பெருநாளை  இலட்சியத் திருநாளாகக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் பாக்காத்தான்  சார்பிலும், சிலாங்கூர் மாநில அரசின்  சார்பிலும் எனது இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

TAGS: