‘சுயேச்சை ஆய்வு நடத்தப்பட்டால் நஜிப் போட்டியிட முடியாது’

najibஉங்கள் கருத்து: “அந்த ஆய்வு நடவடிக்கையை வெளியில் உள்ள சுயேச்சை தணிக்கை நிறுவனம் ஒன்றிடம் ஒப்படையுங்கள். பிரதமர் உட்பட அனைவரும் தூய்மையானவர்கள் எனக் கூறப்பட்டால் நான் பிஎன் -னுக்கு வாக்களிப்பேன்”

தாயிப்பை ஆய்வு செய்ய பிரதமர் தயாரா ?

பார்வையாளன்: பாரபட்சம் காட்டாத திறமையான புலனாய்வு நிறுவனம் (மலேசியாவில் எதுவுமில்லை) ஒன்று, கடந்த கால, நடப்பு பிஎன் தலைவர்களை முழுமையாக ஆய்வு செய்தால் எல்லாப் பிரதமர்களும் டாக்டர் மகாதீர் முகமட் தொடக்கம் எல்லா பிஎன் தலைவர்களும் ஊழல் புரிந்துள்ளதும் மக்கள் பணத்தை திருடியதும் தெரிய வரும்.

அவர்கள் திருடிய மொத்த பண அளவு நூற்றுக்கணக்கான பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி விடும். அந்த அனைத்து பிஎன் திருடர்களும் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட்டு திருடப்பட்ட பணம் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே நீதி நிலை நிறுத்தப்படும்.

வரி செலுத்துவோன்: ஹாங்காங் ஊழல் தடுப்பு ஆணையம் பின்பற்றுகின்ற நடைமுறைகளின் கீழ் பிஎன் தலைவர்கள் ஆய்வு செய்யப்பட்டால் ஊழல் நடவடிக்கையிலிருந்தும் கருவூலத்திலிருந்து திருடியதிலிருந்தும் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

சினமடைந்த பறவை: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என்றும் அவர் ‘தூய்மையானவர்’ என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சொல்கிறது. அதனை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உறுதி செய்துள்ளார். அதே போன்று சபா முதலமைச்சர் மூசா அமானும் ‘தூய்மையானவரே’.

சுருக்கமாகச் சொன்னால் எல்லா அம்னோ/பிஎன் உறுப்பினர்களும் தொட முடியாதவர்கள். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அப்படி அல்ல.

டிம்ஸ் டைம்: மற்றவர்களை ஆய்வு செய்யும் முன்னர் பிரதமர் முதலில் ஆய்வு செய்யப்பட வேண்டும். தெரிவு செய்யப்பட்டவர்கள் மட்டும் ஆய்வு செய்யப்பட்டால் மக்கள் எப்படி பிஎன் நேர்மையை நம்புவார்கள் ?

உண்மையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டால் பிஎன் சார்பில் தேர்தலில் நிற்பதற்கு தூய்மையானவர்களாக யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.

அந்த ஆய்வு நடவடிக்கையை வெளியில் உள்ள சுயேச்சை தணிக்கை நிறுவனம் ஒன்றிடம் ஒப்படையுங்கள். பிரதமர் உட்பட அனைவரும் தூய்மையானவர்கள் எனக் கூறப்பட்டால் நான் பிஎன் -னுக்கு வாக்களிப்பேன்.

டாக்: தாயிப்பை ஆய்வு செய்யுமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைக் கேட்டுக் கொள்வது அந்த ஆணையத்தை முட்டாளாகத் தோற்றமளிக்கச் செய்து விடும். காரணம் சரவாக் முதலமைச்சர் ஊழல் புரியாதவர் என்ற அறிக்கையை அது வெளியிட வேண்டும்.

நேரடிப் பேச்சு: தாம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றால் தாயிப் ‘தொலைந்து போங்கள்’ என்று தான்நஜிப்பிடம் சொல்வார். காரணம் நஜிப்பிடமே பல ‘சுமைகள்’ உள்ளன.

அடையாளம் இல்லாதவன்#32444974: மறந்து விடுங்கள். பிரதமர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ், அரசாங்கம் என யாருமே தாயிப்பைத் தொட முடியவில்லை. சரவாக் முதலமைச்சர் சட்டத்துக்கு மேலானவர். ஆகவே உங்கள் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

மோஹிகான்: நஜிப் மாற்றி மாற்றி பேசும் தலைவர். அவர் இன்று ஒன்றைச் சொல்வார் ஆனால்இன்னொன்றைச் சொல்வார். அவரை எப்படி நம்புவது ?

பெண்டர்: “ஆய்வு நடவடிக்கை ‘தூய்மையான’ வேட்பாளர்களை வழங்கும் என்றாலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூட கருதப்படாலம் என வான் அகமட் கூறியுள்ளார்”

தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது நபர் விடுத்துள்ள அந்த அறிக்கை உண்மையில் எத்தகைய நாடகம் நடக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

அடையாளம் இல்லாதவன்#02382443: நாம் சில வேளைகளில் நம்மை அறியாமல் உளறி விடுகிறோம். நஜிப் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

TAGS: