கேபிஎப் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை செல்லாது என நீதிமன்றம் அறிவிப்பு

Koperasi Permodalan Feldaகேபிஎப் எனப்படும் Koperasi Permodalan Felda கூட்டுறவுக் கழகத்தின் டிசம்பர் 27-ம் தேதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  31-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை ரத்துச் செய்வதற்கு அந்தக் கூட்டுறவுக் கழகமும் அதன் வாரிய உறுப்பினர் ஒருவரும் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி அபாங் இஸ்காண்டார் அபாங் ஹஷிம் அதே விவகாரம் மீது மலேசியக் கூட்டுறவு ஆணையம் செய்த முடிவை கேபிஎப் எதிர்த்து வழக்காடுவதற்கும் அனுமதி அளித்தார்.

அந்த விவரங்களை பாஸ் கட்சி ஏடான ஹாராக்கா டெய்லி வெளியிட்டுள்ளது.

ஜுன் 20ம் தேதி நடந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தை மலேசியக் கூட்டுறவு ஆணையம் ரத்துச் செய்து உட்பூசலைத் தீர்ப்பதற்கு இன்னொரு ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நடத்துமாறு தனது டிசம்பர் 4ம் தேதி கடிதத்தில் கேபிஎப்-பிற்கு ஆணையிட்டது.

குடியேற்றக்காரர்கள் உரிமைகளுக்குப் போராடும் பாஸ் தொடர்புடைய அனாக் என்னும் அரசு சாரா அமைப்பு பெல்டா தலைவர் ஈசா சாமாட், கேபிஎப் தலைவராகவும் பெல்டா தலைமை நிர்வாகி பைசோல் அகமட் கேபிஎப் செயலாளராகவும் நியமிக்கப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.

கடும் எதிர்ப்பு இருந்த போதிலும் FGV என்னும் Felda Global Ventures Holdings Bhd பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு அனுமதி அளித்தது. FGV ஜுன் மாதம் பங்குப் பட்டியலில் இடம் பெற்றது.

பெல்டா ஹோல்டிங்ஸில் கேபிஎப்-க்கு உள்ள 51 விழுக்காடு பங்கிற்கு ஈடாக FGV-யில் சிறிய பங்கு கொடுக்கப்படுவதை குடியேற்றக்காரர்கள் எதிர்த்தனர்.

FGV இறுதியில் கேபிஎப் இல்லாமல் பங்குப் பட்டியலில் சேர்ந்தது. FGV ஆதாயத்தை 112,000 குடியேற்றக்காரர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்ய சிறப்பு அமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்பட்டது.

FGV பெல்டாவுக்கு முழுமையாகச் சொந்தமானதாகும். பெல்டா பிரதமர் துறையின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.

 

TAGS: