“நஜிப் தூய்மையான வெளிப்படையான அரசாங்கத்தைப் போதிக்கிறார். ஆனால் அவருக்கு எதிராகவும் அவரது மனைவிக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. அவற்றுக்கு இன்னும் பதிலும் கிடைக்கவில்லை. ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை.”
நஜிப் தம்மையே ஆய்வு செய்து கொள்ள வேண்டும் தீபக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும்
ஒரே வாக்கு: பிஎன் வேட்பாளர்கள் தார்மீக ரீதியிலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்ற தமது வேண்டுகோளை நியாயப்படுத்த வணிகர் தீபக் ஜெய்கிஷன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் மீது பிரதமர் பேச வேண்டும்.
தாய்லெக்: நஜிப் கபட வேடதாரி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நஜிப் தூய்மையான வெளிப்படையான அரசாங்கத்தைப் போதிக்கிறார். ஆனால் அவருக்கு எதிராகவும் அவரது மனைவிக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. அவற்றுக்கு இன்னும் பதிலும் கிடைக்கவில்லை. ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே வாக்காளர்களை எதுவும் தெரியாத சின்னப் பிள்ளைகள் என நினைக்க வேண்டாம்.
அடையாளம் இல்லாதவன் #43051382: தங்களுடைய ‘தேவதை’ நிலையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆய்வு செய்வது என்ற பேச்சு எல்லாம் வெறும் பித்தலாட்டம், உண்மையான தெளிவான ஆவணங்கள் இல்லாமல் அந்த ஆணையம் எப்படி ஆய்வு செய்யப் போகின்றது ?.
ஒரு திருடன் தான் கொள்ளையடித்ததைச் சொல்வான் என எதிர்பார்க்க வேண்டாம்.
நம்பாதவன்: பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ அவர்களே, பிரதமருக்கு நீங்கள் விடுத்துள்ள வேண்டுகோள் சரியான நேரத்தில் விடுக்கப்பட்டதாகும். ஆனால் அவர் நிச்சயம் புலனாய்வுக்கு ஒப்புக் கொள்ள மாட்டார். அவ்வாறு செய்வது அவர் தமது அழுக்கு மூட்டையை அவிழ்ப்பது அல்லது சொந்த புதைகுழியைத் தோண்டிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
மலேசியர்களுக்கு நீதியான நியாயமான நல்வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால் (கிடைக்கும் என நம்புவோம்) மாற்றத்துக்கு வாக்களிப்பது தான் ஒரே வழி.
வழிப்போக்கன்: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தில் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில்நஜிப்பும் அவரது மனைவி ரோஸ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளதாக தீபக் குற்றம் சாட்டியிருப்பதால் மௌனத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு மாறாக அந்த மௌனம் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கருதப்படலாம்.
ஜார்: இந்தப் பிரதமர் பேசுவது ஒன்று சொல்வது ஒன்று. (cakap tak serupa bikin) அவர் மற்றவர்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனச் சொல்வதற்கு முன்னர் தீபக் குற்றச்சாட்டுக்கலுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
இது நண்டு தன் பிள்ளைகளுக்கு நேராக நடக்க கற்றுக் கொடுக்க முயலுகிறது என்ற மலாய் பழமொழியை நினைவுபடுத்துகின்றது.
லூயிஸ்: கோபிந்த், நஜிப் தலைக்கு மேல் தொங்கும் கத்தியைப் போல அந்தப் பிரச்னையை பிடித்துக் கொண்டே இருங்கள். பிரதமர் மிகவும் தந்திரக்காரர்.
அவர் அந்தப் பிரச்னையை எல்லோரும் மறந்து விடுவர் என்றும் அதனால் அது இயல்பாகவே மடிந்து விடும் என்றும் அவர் நம்புகிறார். எவ்வளவு முட்டாள்தனம். அந்தக் குற்றச்சாட்டுக்கள் மீது பிரச்னை ஏதுமில்லை என பிஎன் தலைவர்கள் மட்டுமே தங்கள் தலைகளை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டிருக்கின்றனர்.