உங்கள் கருத்து : நஜிப் அவர்களே, பேசுவது சுலபம்; நடவடிக்கையே முக்கியம்

MCF“இனிமேல் செயல்படுவது கிறிஸ்துவத் தலைவர்களைப் பொறுத்தது. வத்திகனுக்கும் உலகிற்கும் தெரியப்படுத்துங்கள். சட்டம் ஏதும் மீறப்பட்டிருந்தால் வழக்குப் போடுங்கள்.”

பிரதமருக்கு ஒரு கிறிஸ்துமஸ் கார்டு

அடையாளம் இல்லாதவன்$&@?: முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்தவுடன் ஜயிஸ் என்ற இஸ்லாமிய விவகாரத் துறையும் ஜாக்கிம் என்ற மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையும் தாக்குதல் பாணியில் சோதனை நடத்தி தங்களை முட்டாளாக்கிக் கொண்டன.

வயது குறைந்த முஸ்லிம் அல்லாதவர் பெற்றோர்களுடைய ஒப்புதல் இல்லாமல் மதமாற்றம் செய்யப்படுவதை  கிறிஸ்துவர்களும் இந்துக்களும் ஆதாரத்துடன் காட்டிய போது பிஎன் அரசாங்கம் காது கேளாதவரைப் போலவும் ஊமையைப் போலவும் நடந்து கொள்கிறது.

நல்ல சிந்தனை கொண்ட மக்களே நமது பிரதமருடைய பார்வையில் இருக்கும் ஜயிஸும் ஜாக்கிமும் நஜிப் சொல்வதைப் பின்பற்றுகின்றன என நீங்கள் எண்ணுகின்றீர்களா ?

பால் வாரென்: முஸ்லிம் சமூகம் எப்படி ரகசியமான, கொல்லைப்புற மதமாற்றங்களை எப்படி ஏற்றுக் கொள்கின்றது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

அவர்களுக்கு வெறுப்பு ஏற்படவில்லையா ? தாங்கள் மலிவாகப் போய் விட்டதை உணரவில்லையா ? அதனால் தங்கள் சமயம் கீழறுப்புச் செய்யப்பட்டு தரம் குறைவதை அவர்கள் அறியவில்லையா ?

முஸ்லிம்கள் என்ற எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு எண்ணிக்கை கூடுவதால் அந்த நடவடிக்கை ஏற்புடையது என மௌனமாக இருக்கும் பெரும்பான்மையினர் கருதுவதாகத் தெரிகிறது. அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

முஸ்லிம்களுடன் குறிப்பாக இளம் வயதினருடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு மட்டுமே நான் சொல்ல முடியும்.

லாய் தாக் மிங்: பாப் தியோ நீங்கள் சொல்வது சரியே. இந்த நாட்டை ‘திருடுவதற்கு’ முயலும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய உத்துசான் மலேசியா மீது நஜிப் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

கிறிஸ்துவர்களைப் பாதிக்கும் விஷயங்களோடு மட்டும் அது நின்று விடக் கூடாது. இந்த நாட்டில் உள்ள பல நாடற்ற மக்கள் பிரச்னை பற்றியும் நமது நல்ல பிரதமரிடம் கேட்க வேண்டும்.

அவரது அமைச்சரவைக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் விவகாரங்கள் பற்றி என்ன சொல்வது ? அவை குறித்து அவர் என்ன செய்தார் ?

உங்களுக்கு எதிரில் பல தெளிவான ஊழல் வழக்குகள் இருக்கும் போது தேர்தல் வேட்பாளர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் எனச் சொல்வது உங்கள் இரட்டை வேடத்தையே காட்டுகின்றது. உண்மையில் இது வெட்கத்தை அளிக்கிறது. அவர் எப்படித் தீவிரமாக இருக்க முடியும் ?

அமல்காம்: அதனால் நாம் பிரதமரை நம்பவும் முடியவில்லை, அவரது வார்த்தைகளை பொருட்டாகக் கொள்ளவும் முடியவில்லை. மே 13 குறித்து அம்னோ உறுப்பினர்கள் மிரட்டிய போதிலும் அரசாங்கத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு.

மலேசியர்களே, நீங்கள் 55 ஆண்டுகளாக அம்னோ அச்சுறுத்தலைக் கண்டு விட்டீர்கள். உண்மையான ஜனநாயகம் தழைக்க தெரியாத ஒருவருக்கு வாய்ப்புக் கொடுங்கள். உலகம் 21.12.12ஐக் கூட தாண்டி வந்து விட்டது.

முஷிரோ: சமயத்தில் கட்டாயம் கூடாது என இஸ்லாம் தெளிவாகக் கூறியுள்ளது. அதனை முன்னையபிரதமர்களான டாக்டர் மகாதீர் முகமட்டும் அப்துல்லா அகமட் படாவியும் கூட உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்தச் செய்தி முக்கிய நாளேடுகளில் வெளியாகவில்லை.

என்றாலும் அம்னோவிலும் அரசாங்கத்திலும் உள்ள தீவிரவாதிகள் அதிகாரத்தைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம் அல்லாதவர்களுடைய குரல் வளைகளில் மதமாற்றத்தைத் திணிக்கின்றனர்.

முஸ்லிம்கள் தங்கள் போதனைகள் மூலமும் தங்களது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்காட்டாகத் திகழ்வதின் மூலமும் முஸ்லிம் அல்லாதாரை நம்ப வைக்க முயல வேண்டும்.

ஸ்டீவ் ஒ: இனிமேல் செயல்படுவது கிறிஸ்துவத் தலைவர்களைப் பொறுத்தது. வத்திகனுக்கும் உலகிற்கும் தெரியப்படுத்துங்கள். சட்டம் ஏதும் மீறப்பட்டிருந்தால் வழக்குப் போடுங்கள்.

நன்கு எழுதப்பட்ட திறந்த மடலுக்காக பாப் தியோவுக்கு நன்றி. நீங்கள் அதனை விரிவாக பரப்ப வேண்டும்.

 

TAGS: