உங்கள் அறிக்கைகளுக்கு மிக்க நன்றி ஆயர் அவர்களே

najib“ஆயர் அவர்களே, தேர்தலுக்கு முன்னதாக கிறிஸ்துவ வாக்குகளைப் பெறுவதற்கு முன்னைய இரண்டு பிரதமர்களும் பேசிய, இப்போது நஜிப்பும் பேசுகின்ற ‘வழக்கமான சொற்களை’ அம்பலப்படுத்திய உங்களை நான் பாராட்டுகின்றேன்.”

பிரதமருடைய கிறிஸ்துமஸ் தின கருத்துக்கள் மீது ஆயர் பால் தான் வருத்தம்

ஸ்டார்ர்: ஆயர் பால் தான், தாம் தமது சொந்த கத்தோலிக்க சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல கிறிஸ்துவ சிறுபான்மையினரை பாதிக்கும் பிரச்னைகள் மீது தெளிவாகப் பேசுகின்ற மனிதர் என்பதையும் மீண்டும் நிலை நாட்டியுள்ளார்.

‘கிறிஸ்துவ சமூகம் மறக்கப்படவில்லை’ என்றும் ‘தாம் அனைவருக்கும் பிரதமர்’ என்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிறிஸ்துமஸ் உரையில் குறிப்பிட்டுள்ளது குறித்து கிறிஸ்துவ சமூகம் எவ்வளவு வெறுப்படைந்துள்ளது என்பதை அவரது அறிக்கை உணர்த்துகின்றது.

களத்தில் காணப்படும் நிலைமை நஜிப் எடுத்துள்ள நிலைக்கு முற்றாக மாறுபட்டுள்ளது. கிறிஸ்துவர்களுக்கு முன்னால் இது போன்ற தவறான அறிக்கைகளை நஜிப் வெளியிடுவது கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தின் அறிவாற்றலை அவமானப்படுத்துவதற்குச் சமமாகும்.

கெட்டிக்கார வாக்காளர்: நான் ஆயர் தான் சொல்வதை முற்றாக ஏற்றுக் கொள்கிறேன். தாமும் தமது நண்பர்களும் உருவாக்கி விட்ட ஊழல் மலிந்த புரவலர் சமூகத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பற்றி அறியாத மூன்றாம் உலக அரசியல் தலைவருக்கு பிரதமர் நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

எல்லா சமூகங்களும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதாகச் சொல்வதின் மூலம் அவர் தமது வாக்காளர்களை முட்டாள்கள் என்றும் ஏதும் அறியாதவர்கள் என்றும் எண்ணுகிறார்.

அவருடைய கருத்துக்களையும் ஆளும் கட்சி பின்பற்றுகின்ற கொள்கைகளையும் முழுமையாக நிராகரிப்பதே ஒரே வழியாகும்.

அனோன்: டாக்டர் பால் தான் சீ இங், உண்மையைப் பேசும் உங்கள் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். சமயத்தின் சகோதரர்கள் எனத் தங்களைக் கூறிக் கொண்டு அச்சம் காரணமாக கோழைகளாக இருக்கும் பலரைக் காட்டிலும் நீங்கள் மேலானவர்.

மஹாஷித்லா: ஆயர் அவர்களே, தேர்தலுக்கு முன்னதாக கிறிஸ்துவ வாக்குகளைப் பெறுவதற்கு முன்னைய இரண்டு பிரதமர்களும் பேசிய, இப்போது நஜிப்பும் பேசுகின்ற ‘வழக்கமான சொற்களை’ அம்பலப்படுத்திய உங்களை நான் பாராட்டுகின்றேன்.

அம்னோ நன்மைக்காக எடுத்துக்காட்டுக்கு மலாய் முஸ்லிம் வாக்குகளை கவருவதற்காக சமய விவகாரங்களை பெரிதாக்கி கிறிஸ்துவர்களைச் சாடுகின்ற சம்பவங்களை நாம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

அம்னோ புத்ராக்கள் புதிய பொருளாதாரக் கொள்கையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மலாய் கோடீஸ்வர வர்க்கம் ஒன்றை உருவக்கியுள்ள வேளையில் மலாய்க்காரர்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருப்பதற்கு சீனர்களே காரணம் என தொடர்ந்து பழி சுமத்தப்படுகின்றது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியர்கள் அவர்களுடைய சுயநலப் போக்குடைய தலைவர்களினால் முற்றாக புறக்கணிக்கப்பட்டனர். அதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது நாடற்றவர்களாக இருக்கின்றனர்.

ஆயர் சரியான நேரத்தில் நமக்கு நினைவுபடுத்தியுள்ளார். 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சீனப் புத்தாண்டின் போது நஜிப் சீனர்களிடம் என்ன சொல்வார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Durio Zibethinus: கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்து கொண்டதை அரசாங்கம் மீட்டுக் கொள்ளுமா இல்லையா என்பது நஜிப்-பின் உண்மையான போக்கிற்கு ஆதாரமாக விளங்கும்.

கிம் குவேக்: அம்னோ பிரதமர்களுடைய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய ஆயர் தான் -க்கு நன்றி.  நஜிப் மீது நம்பிக்கை போய் விட்டது. வரும் தேர்தலில் அத்தகைய வேடதாரிகளைத் தண்டிப்போம்.

ரூபி ஸ்டார்_4037: ஆயர் பால் கடந்த கால நிகழ்கால பிரதமர்கள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருந்து  வந்துள்ளார். அவர்கள் தனிப்பட்ட முறையில் பேசும் போது ஆறுதலான வார்த்தைகளைச் சொல்கின்றனர். மேடையிலிருந்து இறங்கியதும் எல்லா வாக்குறுதிகளையும் அவர்கள் மறந்து விடுகின்றனர்.

மனிதன்: நான் ஒரு protestant. ஆனால் ஆயர் டாக்டர் தான் முதுகெலும்பு உள்ள மனிதர்.

TAGS: