நஜிப், ரோஸ்மாவுக்கு அனுப்பப்பட்ட சப்பினாவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் குதப்புணர்ச்சி II வழக்கில் சாட்சியமளிக்க மாட்டார்கள்.

அன்வார் இப்ராஹிம் மீதான விசாரணையில் பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக சாட்சியமளிப்பதற்கு அனுப்பப்பட்ட சப்பினாவை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா  இன்று  தள்ளுபடி செய்ததே அதற்குக் காரணம் ஆகும்.

அந்த சப்பினாவை தள்ளுபடி செய்யுமாறு நஜிப்பும் ரோஸ்மாவும் செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட முகமட் ஜபிடின், அவர்கள் இருவரும் அந்த வழக்கில் முக்கியமான பொருத்தமான சாட்சிகள் இல்லை என்று கூறினார்.

“ஆகவே நான் அவர்களுடைய விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கிறேன். விசாரணை தொடர வேண்டும் என உத்தரவிடுகிறேன்”, என்றார் முகமட் ஜபிடின்.