அல்லாஹ் சர்ச்சையில் அடுத்து என்ன? சீக்கிய சமயத்தையும் தடை செய்ய வேண்டியதுதானே?

sikh“மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இந்தி மொழிப் பாடல்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல் நிறைந்துள்ளது. ஆகவே இந்தி திரைப்படங்களை தடை செய்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.”

சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா ‘சட்ட விரோதமானது, செல்லாது’

மோஹிகான்: அந்த குருஜி (ஆன்மீக ஆசிரியர்) மிகவும் பயனுள்ள வகையில் தமது கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். நான் சீக்கியன் அல்ல என்றாலும் நான் சீக்கிய சமயத்தையும் அந்த மகத்தான சமயத்தின் புனித வேத நூலான குரு கிரந்த சாஹிப்பையும் மதிக்கிறேன்.

நான் கிறிஸ்துவன். என் வீட்டிலும் நான் படித்த மிஷன் பள்ளியிலும் எல்லா சமயங்களும் மதிக்கப்பட வேண்டும் என எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. தமது சமயம்தான் மற்ற சமயங்களைக் காட்டிலும் மேலானது என ஒருவர் நினைத்தால் அது அவருடைய அகங்காரத்தை காட்டுகிறது. அவருடைய கண்ணோட்டம் சமயத்துக்கு முரணானது.

இறைவன் நம்மை சமமாக படைத்துள்ளான். நாம் அனைவரும் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் இறைவனுடைய பிள்ளைகள்.

லயன்கிங்: பினாங்கு முப்தி ஹசான் அகமட் போன்ற மலேசியாவில் முஸ்லிம்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் குறுகிய புத்தியுள்ளவர்கள் தங்களை முட்டாளாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் கற்றது அது தானா ? உண்மையில் பரிதாபமாக உள்ளது. அவர்கள் சிந்தனை எவ்வளவு மேலோட்டமானது.

இந்தி மொழிப் பாடல்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல் நிறைந்துள்ளது. ஆகவே இந்தி திரைப்படங்களை தடை செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்

முதிர்ச்சி அடைந்து நியாயமாகப் பேசுங்கள். சீக்கிய வேத நூலிலும் ‘அல்லாஹ்’ என்ற சொல் காணப்படுகின்றது. ஆகவே அந்தச் சமயத்தையும் தடை செய்து விடலாமா?

அபாசிர்: இந்தியாவிலும் மலேசியா உட்பட உலகின் மற்ற பகுதிகளிலும் இந்துக்கள் பாடுகின்ற இறை வணக்க பாடல் ஒன்றில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் காணப்படுகின்றது.

அந்தப் பாடல் இந்துஸ்தானி திரைப்படங்களிலும் (மலேசியாவில் குறிப்பிட்ட இன வம்சாவளி மக்கள் அதனை விரும்பிப் பார்க்கின்றனர்) அடிக்கடி சேர்க்கப்படுகின்றது. பல ஆஸ்கார் விருதுகளை பெற்ற  Richard Attenborough-வின் ‘காந்தி’ திரைப்படத்திலும் அது இடம் பெற்றுள்ளது.

அந்தப் பாடல் இந்தியாவில் 160 மில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காயப்படுத்தவில்லை. ஆனால் இங்கு பிரதமர் நஜிப் ரசாக்கின் ஒரே மலேசியாவில் அம்னோ வைரஸ் கிருமியால் எல்லாம் மாசு படிந்துள்ளது.

உங்கள் அடிச்சுவட்டில்: அது அரசமைப்புக்கு முரணானது மட்டும் அல்ல. நீதிமன்ற அவமதிப்பும் ஆகும். காரணம் முறையீடு இன்னும் நீதிமன்றத்தில் தேங்கியுள்ளது. ஆகவே பினாங்கில் எந்த சட்ட அடிப்படையில் அந்த பாத்வா வெளியிடப்பட்டது.

நாடோடி: முஸ்லிம் அறிஞர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் ஹசானை போன்ற முட்டாள்கள் இஸ்லாத்துக்கு அவமானத்தையும் குழப்பத்தையும் கொண்டு வருகின்றனர்.மற்ற நாடுகளில் பல சமயங்களைச் சார்ந்தவர்கள் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். அதனை அந்த நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஆட்சேபிக்கவில்லை.

ஆகவே அம்னோ முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களைக் காட்டிலும் எப்படி மேலானவர்கள் ?

முதியவன்:  இந்தோனிசியா, அரபு நாடுகள் ஆகியவற்றைல் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் இங்குள்ள முஸ்லிம்கள் தங்கள் சமயத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருப்பதற்கு ‘அல்லாஹ்’ என்ற வார்த்தை மீது பாத்வா-வை வெளியிடும் அளவுக்கு பலவீனமானவர்களா ?

ஏஜே என்: நான் ஒரு முஸ்லிம். இந்த விவகாரம் உண்மையில் தர்ம சங்கடத்தைக் கொடுக்கின்றது. வழக்கம் போல மலாய்க்காரர்கள் யூதர்களைப் போன்று நடந்து கொள்கின்றனர். தாங்கள் சிறப்பானவர்கள் என்று அவர்கள் கருதுவதோடு  மலேசியாவில் உள்ள மற்ற இனங்களையும் சமயங்களையும் பாரபட்சமாக நடத்துகின்றனர்.

இம்ரான் பிராடுஸ் ஜெயின்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு சீக்கிய சமயம் எப்போது உருவானது ?

உபா இயான்: இம்ரான் பிராடுஸ் ஜெயின் அவர்களே, மலாய்க்காரர்கள் முஸ்லிம்களாக மாறுவதற்கு முன்னரே சீக்கிய சமயம் தோன்றி விட்டது. கிறிஸ்துவ சமயம் முன் பிறந்ததா அல்லது இஸ்லாம் முன் பிறந்ததா என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என எண்ணுகிறேன்.

நான் மறந்து விட்டேன். மலேசியாவில் வரலாறு கூட மாற்றி எழுதப்படலாம். மலேசியாவில் இருந்த இந்து மன்னராட்சிகள் பற்றி நமது இன்றைய வரலாற்றுப் புத்தகங்களில் எதுவுமே இல்லை என்பதைப் போல.

தெளிவனாவன்: இந்தியாவில் 500 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்களும் இந்துக்களும் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டிருந்த போது நடு நிலைப் பாதையாக சீக்கிய சமயம் உருவானது.

அதனால் இரண்டு பெரிய சமயங்களின் கலவையாக சீக்கிய சமயம் கருதப்படுகின்றது. சீக்கிய கோவில் குவிந்த கூரையைக் கொண்டுள்ளது. அதனால் அதனையும் தடை செய்து விடலாமா ?

ஜேம்ஸ் டீன்: எதிர்கால மலேசியத் தலைமுறையினருக்கு மகாதீர் விட்டுச் செல்லும் பரிசு அந்த அல்லாஹ் விவகாரம் ஆகும். பிஎன் அதனை ஒரு போதும் தீர்க்க முடியாது. அதனைத் தீர்க்கவும் பிஎன் விரும்பாது.

TAGS: