டாக்ஸி அனுமதி ஏகபோக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் பின்னர் டாக்ஸி சேவை மேம்பாடு காணும்

taxi“டாக்ஸி ஒட்டிகளுக்கு நேரடி அனுமதிகளை வழங்குவது மிகவும் சாதாரணமான யோசனை. அதனைச் செய்வது என்ன அவ்வளவு சிரமமா ? அந்த டாக்ஸி ஒட்டுநர்கள் பிஎன் ஆட்சி புரியும் இந்த ஆண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தனர்?”

‘நாங்கள் டாக்ஸி அனுமதிகள் கேட்டோம். ஆனால் அவர்கள் டயர்களைக் கொடுத்தார்கள்’

லாங்ஜாபார்: அதனைச் செய்வது மிக எளிது என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார். நான் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. பிஎன் -னுக்கு அது மிகவும் சிரமமான காரியமாகும். ஏனெனில் அது இவ்வளவு ஆண்டுகளாக செல்வாக்கு மிக்கவர்களுக்குக் குறிப்பாக அம்னோவில் உள்ளவர்களுக்கு டாக்ஸி அனுமதிகள் கொடுக்கப்பட்டு வந்தன.

அவர்கள் பல தசாப்தங்களாக டாக்ஸி ஓட்டுநர்களின் ரத்தத்தை அவர்கள் உறிஞ்சி வந்துள்ளனர். அவர்கள்  தார்மீகத்துக்கு முரணான வழியில் வருமானத்தை சார்ந்துள்ளனர். அவர்கள் அதனை எளிதாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஆகவே அது பிஎன் -னுக்கு மிகவும் சிரமமானது.

ஒரே கேலிக்கூத்து: அந்தச் சேவகர்கள் ஏன் நாள் ஒன்றுக்கு ஒரு டாக்ஸி ஒட்டுநரிடமிருந்து 40 ரிங்கிட் வசூலிக்க வேண்டும் ? ஒரு சேவகரிடம் 100 டாக்ஸிகள் இருந்தால் அவர் நாள் ஒன்றுக்கு 4000 ரிங்கிட் அல்லது ஒரு மாதம் 120,000 ரிங்கிட் சம்பாதிப்பார். எல்லாம் டாக்ஸி ஒட்டுநர்களை கசக்கிப் பிழிந்து பெறப்படுவதாகும்.

அது மட்டுமல்ல, அந்த ‘menteri samseng’ அனுமதிகளை ஒவ்வொன்றும் 6,000 ரிங்கிட்டுக்கு விற்கிறார்.  உண்மையில் அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் ஏழை மக்களை சூறையாடுகின்றனர்.

உங்கள் அடிச்சுவட்டில்: இது நல்ல விஷயம். நாங்கள் டாக்ஸி அனுமதிகள் கேட்டோம். ஆனால் அவர்கள் டயர்களைக் கொடுத்தார்கள். பிஎன்/அம்னோ எதனைச் செய்தாலும் மக்களை ஏமாற்றுவது தான். அதுவும் தற்காலிக நிவாரணமாகத் தான் இருக்கும். அது நீண்ட காலத் தீர்வாக இருக்காது.

தேர்தலுக்கு முன்பு அதே சூழ்நிலை தான். தேர்தலுக்குப் பின்னர் அந்தத் தற்காலிக அனுமதிகள் கூட வர மாட்டா.

அவை எரி பொருள் உதவித் தொகைகள் பற்றி பேசுகின்றனர். ஏபி அனுமதி என்ற அங்கீகரிக்கப்பட்ட அனுமதிகள் மித மிஞ்சிய கார் வரிகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. குறைந்த பட்ச சம்பளம் ( 900 ரிங்கிட்) பற்றிச் சொல்கின்றன. ஆனால் அந்நியர்கள் இந்த நாட்டில் குவிக்கப்படுவது பற்றி எதுவும் பேசுவதில்லை.

சீனி, அரிசி, கோதுமை மாவு உதவித் தொகைகள் பற்றி அவை நமக்குச் சொல்கின்றன. ஆனால் அம்னோ/பிஎன் சேவகர்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஏகபோக உரிமைகளைப் பற்றி ஒரு போதும் சொல்வதே இல்லை.

சிலாங்கூருக்கு லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் தேவை என அவை நம்மிடம் கூறும். ஆனால் அதன் செலவுகளைச் சொல்ல மாட்டா. லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் ஏன் அவசியம் என அவை விளக்கும். ஆனால் அதனால் உடல் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக் கூடிய நீண்ட கால விளைவுகளை அவை  சொல்வதே இல்லை.

ஒரே மலேசியா உதவித் தொகை, கைத் தொலைபேசி உதவித் தொகைகள், ஒரே மலேசியா மக்கள் கடைகள் பற்றி அவை சொல்லும். ஆனால் அதனால் அரசாங்க நிதிக்கும் பண வீக்கத்துக்கும் முறையான பொருளாதார இயக்கத்துக்கும் ஏற்படக்கூடிய நீண்ட காலப் பாதிப்பை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டா.

பெல்டாவை பங்குப் பட்டியலில் சேர்ப்பதால் குடியேற்றக்காரர்களுக்கு எவ்வளவு நன்மை தரும் என அவை தம்பட்டம் அடித்துக் கொள்ளும். ஆனால் அது சேவகர்களுக்கும் பேரம் பேசுகின்றவர்களுக்கும் அவை பயன் தரும் எனச் சொல்ல மாட்டா.

அம்னோ/பிஎன் உண்மையில் சீர்திருத்தங்களைச் செய்தால் பன்றிகள்  கூட ஆகாயத்தில் பறக்கும்.

என்எச் கோங்: டாக்ஸி ஒட்டிகளுக்கு நேரடி அனுமதிகளை வழங்குவது மிகவும் சாதாரணமான யோசனை.  அதனைச் செய்வது என்ன அவ்வளவு சிரமமா ? அந்த டாக்ஸி ஒட்டுநர்கள் பிஎன் ஆட்சி புரியும் இந்த ஆண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தனர் ? இறைவன் தலையிட்டு அருள் புரிவான் எனக் காத்துக் கொண்டிருந்தார்களா ?

 

TAGS: