இசி: ஷாங்காய் வாக்காளர்களை பதிவு செய்வதை நிறுத்தும் ஆணை ஏதும் வெளியிடப்படவில்லை

ecவாக்காளர்களைப் பதிவு செய்வதை நிறுத்துமாறு ஷாங்காயில் உள்ள மலேசியத் தூதரகப் பொறுப்பதிகாரி அலுவலகத்துக்கு எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

நிர்வாகப் பிரச்னைகளினால் அந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என அது கருதுகிறது.

இசி-க்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றும் வெளியுறவு அமைச்சிடம் அது பற்றி வினவும் என்றும் அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் சொன்னதாக சின் சியூ டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

ஷாங்காயில் உள்ள மலேசியத் தூதரகப் பொறுப்பதிகாரி அலுவலகம் ஜுலை மாதம் தொடக்கம் வாக்காளர்களை பதிவு செய்வதை நிறுத்தி விட்டதாக அங்குள்ள பெர்சே 2.0 ஆதரவாளர் குழு ஒன்று கூறியிருந்தது.

மற்ற இடங்களில் உள்ள மலேசியத் தூதரகங்கள் வாக்காளர்களை பதிவு செய்யும் போது வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கு தங்களுக்கு ” உயர் அதிகார நிலையிலிருந்து உத்தரவுகள் வரவில்லை” என அந்த அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

அந்தச் செய்தியை வெளியிட்ட பின்னர் அது பற்றி கருத்துக்களைப் பெறுவதற்கு மலேசியாகினி இசி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை.

ஷாங்காயில் உள்ள தூதரகப் பொறுப்பதிகாரி அலுவலக நிர்வாகம் பற்றி தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் வான் அகமட் சொன்னார்.

“அந்த நிலைமைக்குப் பல சாத்தியங்கள் இருக்கலாம். இது போன்று ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. அது உண்மை என்றால் கூடிய விரைவில் நாங்கள் அதனை விசாரித்து தீர்வு காண்போம்,” என அவர் தெரிவித்தார்.

 

TAGS: