போலீஸ் காவலில் இறப்பு: குற்றவாளிகளுக்கும் உரிமைகள் உண்டு

Detainee Naga-diesஉங்கள் கருத்து: ‘குற்றவாளியோ இல்லையோ, லாக்-அப்பில் மரணம் நிகழ்வதை ஏற்பதற்கில்லை; ஒரு உயிர் பறிபோயுள்ளது. போலீஸ் உடை தரித்துவிட்டால் குற்றவாளிகளைத் தீர்த்துக்கட்டும் உரிமையும் வந்துவிடுகிறதா?’

‘லாக்-அப்பில் தரையில் விழுந்தவர் செத்தார் என்பதைக் குடும்பத்தாரால் நம்ப முடியவில்லை’

நியாயவாதி: இதோ, இன்னொரு அநீதி. மூன்று நாள் போலீஸ் காவலில் இருந்தவர் கீழே விழுந்தாராம்;செத்துப்போனாராம்.

இது கொலை அல்லாமல் வேறு என்ன? இது சமூக அநீதி அல்ல என்றால் வேறு எதுதான் சமூக அநீதி? இது வன்கொடுமை இல்லையா? போலீஸ் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

நம்ப முடியவில்லை: தரையில் விழுந்ததால் ஒருவர் செத்துப்போவாரா?காதில் பூ சுற்றப்பார்கிறார்களா?

பெயரிலி: #82651881: போலீசாரே கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதனால், நேர்ந்த சாவாக இருக்கலாம். போலீஸ் காவலில் இருந்த பலர் இறந்து போயுள்ளனர். ஏதோ, சரியில்லை.

எஸ்.பி. மன்னன்: நான் ஒரு இந்திய மலேசியன்.போலீசார் அப்பாவிகளைப் பிடித்து அடைத்து வைப்பதில்லை. கடுங் குற்றம் புரிந்தவர்களே தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

வீடுபுகுந்து கொள்ளையிடுதல், பாலியல் வன்முறை, கொலை என்று குற்றங்கள் பல வகைப்படும். இக்குற்றம் புரிவோரை அதிகாரிகள் சமுதாயத்தைவிட்டு அகற்றி வைக்கத்தான் வேண்டும்.

ஒரு தடவை என் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்தார்கள். நாங்கள்  பாடுபாட்டு சேர்த்துவைத்ததைக் கொள்ளையிட்டுச் சென்றனர். என் மனைவியின் நகைகளை அள்ளிச்சென்றனர். என் 84-வயது தாயாரைக்கூட விட்டு வைக்கவில்லை.

கட்டிப்போட்டு அடித்தார்கள்.  அவரது தங்க மோதிரங்களையும் வளையல்களையும் எடுத்துக்கொண்ட பின்னர்தான் அவிழ்த்து விட்டார்கள். எல்லாருமே சிறு வயது இந்திய பையன்கள்.  போதைமருந்து உட்கொண்டிருத அவர்களிடம் கருணை மருந்துக்கும் கிடையாது.

நாகராஜன் குடும்பத்தை நினைத்தால் வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால், குற்றவாளிகளின் செயல்களும்  கொடூரமாகிக்கொண்டல்லவா வருகின்றன.

எத்தனையோ பேர் இங்கு கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.இந்தப் பாவிகள் உங்கள் வீட்டிலும் புகுந்து கொள்ளையடித்தால் அப்போது தெரியும்  உங்களுக்கு அதன் வலியும் வேதனையும்.

தெராதாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ-க்கு என்ன, தேர்தல் அருகி வருகிறது. இதைவைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்.

ஜீன் பியர்: ஆம். போலீஸ் புத்திகெட்டவர்கள் அல்லர். ஒருவர் குற்றம் செய்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும். சட்டப்படி அவரைத் தண்டிக்க வேண்டும்.

ஜேம்ஸ் டீன்: கடும் குற்றம் புரிந்தவராக இருந்தாலும் அவருக்கு நியாயமான விசாரணையை மறுக்கக்கூடாது.மன்னன், திறமையற்ற போலீசுக்கு  வக்காலத்து வாங்காதீர்.

கருப்பு நைட்: ஒரு காலத்தில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த இந்திய மலேசிய சமூகம் இப்போது பிழைப்புக்குக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

தோட்டப்புறங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களை, அரசாங்கக் கொள்கைகளாலும் மஇகாவாலும் அனாதரவாக விடப்பட்டவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

ஆதரவின்றியும் உதவியின்றியும் விடப்பட்ட இந்த ஏழை இந்தியர்கள் பிழைப்புக்கு என்னதான் செய்வார்கள்? குற்றச்செயல்கள் தான் அவர்களுக்குக் கைகொடுத்தது. வழிப்பறிக் கொள்ளையர்களாக, திருடர்களாக, போதைப் பித்தர்களாக, போதைப் பொருள் விற்பவர்களாக, கடத்தல்காரர்களாக, அதில் தங்களின் எல்லைக்குள் குறுக்கிடுவோரைத் தீர்த்துக்கட்டும் கொலைகாரர்களாகவும் மாறினார்கள்.

இந்தப் புதிய தொழிலில் அவர்கள் தனியே ஈடுபடவில்லை. உயர் இடத்தில் உள்ளவர்களின் உதவியும் மோசமான போலீஸ்காரர்களின் ஒத்துழைப்பும் அவர்களுக்கு உண்டு. தொழில் செய்யும்போது பிடிபட நேர்ந்தால் அவர்கள் வாய் திறக்க முடியாதபடி தீர்த்துக் கட்டப்படுகிறார்கள்.

கேஎஸ்என்: மன்னன் சொல்வது உண்மை. எனக்கும் அந்த அனுபவம் உண்டு. ஒரு அதிகாலை நேரம் பாராங் கத்திகளுடன் இந்திய இளைஞர்கள் சிலர் என் வீட்டுக்குள் புகுந்தார்கள். எனக்குக் காலிலும் கண்ணுக்கு அடியிலும் காயங்கள் பட்டன.

அந்த நேரத்தில் எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட பயம், பீதி அப்பப்பா வேறு யாருக்கும் அது நேர வேண்டாம்.

மில்லியன் கணக்கான வெளிநாட்டவர் மலேசியாவில்  வேலை தேடி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இங்கு நியாயமான வேலை தேடிக்கொள்ள முடியவில்லை என்று கூறுவதை ஏற்பது சிரமமாக உள்ளது.

இந்தியர்களும் மற்றவர்களும் வேறு வழி இல்லாமல்தான் கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்வது சரி அல்ல. பணம் தேட எளிய வழியை நாடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

ஆனால், கைது செய்யப்படுவோர் லாக்-அப்பில் இறந்து போவதை ஏற்பதற்கில்லை. அதனால், போலீசுக்குத்தான் கெட்ட பெயர்.

ஸ்டீவ் ஓ: போலீஸ் காவலில் வைக்கப்படும் எல்லாருமே குற்றவாளி அல்ல. குற்றவாளிகளுக்கு உரிமைகள் உண்டு.

சீனியர்: குற்றவாளியோ இல்லையோ? லாக்-அப் மரணத்தை ஏற்பதற்கில்லை. குற்றவாளியோ இல்லையோ, லாக்-அப்பில் மரணம் நிகழ்வதை ஏற்பதற்கில்லை; ஒரு உயிர் பறிபோயுள்ளது. போலீஸ் உடை தரித்துவிட்டால் குற்றவாளிகளைத் தீர்த்துக்கட்டும் உரிமையும் வந்துவிடுகிறதா?

பிறகு நீதிமன்றம் எதற்கு?

TAGS: