அனைத்து பிஎன் வேட்பாளர்களும் பரிசுத்தமானவர்கள் – முயற்சி செய்து பாருங்கள் தெங்கு அட்னான் அவர்களே

adnan“லிங்காமேட் ஊழலில் தெங்கு அட்னான் ஆற்றிய பங்கு மீது சட்ட அமலாக்க அதிகாரிகள் அவரை விடுவித்தனரா என்பதற்கு அவர் முதலில் பதில் அளிக்க வேண்டும்”

தலைமைச் செயலாளர்: பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் ஊழலிலிருந்தும் குற்றச் செயல்களிலிருந்தும் விடுபட்டவர்கள்

தோலு: பிஎன் தலைமைத்துவத்தில் ஏதாவது ஒரு வகையில் ஊழல் அல்லது அதிகார அத்துமீறலில் சம்பந்தப்படாத ஒருவர் கூட இல்லை என நான் நம்புகிறேன்.

13வது பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் ஊழலிலிருந்தும் குற்றச் செயல்களிலிருந்தும்  விடுபட்டவர்கள் என பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் அறிவித்துள்ளதே பிஎன் ஆட்சி நடத்தியுள்ள ஈவிரக்கமற்ற, நேர்மையற்ற, கிரிமினல் நடவடிக்கைகளை மறைப்பதற்குச் சொல்லப்பட்ட வெட்கமே இல்லாத பொய்களை எடுத்துரைக்கிறது.

லிங்காமேட் ஊழலில் தெங்கு அட்னான் ஆற்றிய பங்கு மீது போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் போன்ற சட்ட அமலாக்க அமைப்புக்கள் அவரை  விடுவித்தனரா என்பதற்கு அவர் முதலில் பதில் அளிக்க வேண்டும்.

ஆனால் அந்த அமைப்புக்கள் தங்கள் அரசியல் எஜமானர்களை விசாரித்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவதற்குப் பதில் அவர்களுடைய ‘பாதுகாவலர்களாக’ செயல்படுவது எல்லாருக்கும் தெரியும்.

சின்ன அரக்கன்: தெங்கு அட்னான், 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 505 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் முழுப் பட்டியலை நீங்கள் எங்களுக்குக் காட்ட முடியுமா ?

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் போலீசும் உண்மையில் அனைத்து 727 வேட்பாளர்களையும் ‘தூய்மையாக’ ஆய்வு செய்தனரா என்பதை நாங்கள் அறிந்து கொள்ள அல்லது பிஎன் -னில் உள்ள தங்கள் அரசியல் எஜமானர்கள் வழங்கிய அங்கீகார ரப்பர் முத்திரையைக் குத்துமாறு “ஆணையிடப்பட்டனரா” என்பதை அறிந்து கொள்ள அது உதவும்.

ஐ மஸ்ட்: 13வது பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் ஊழலிலிருந்தும் குற்றச் செயல்களிலிருந்தும் விடுபட்டவர்கள் என்ற பிரகடனத்தை மக்கள் நம்ப வேண்டுமா ?

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் குறித்தும் வணிகரான தீபக் ஜெய்கிஷன்  பிரதமர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உடனடியாக சந்தேகங்கள் எழுகின்றன.

இம்ராஸ் இக்பால்: அனைத்து பிஎன் வேட்பாளர்களும் -பரிசுத்தமானவர்கள். முயற்சி செய்து பாருங்கள் தெங்கு அட்னான் அவர்களே. நீங்கள் வெளியிடும் குப்பைகளை நுகருவதற்கு இந்த நாட்டில் உள்ள அனைவரும் முட்டாள்கள் அல்ல.

அடையாளம் இல்லாதவன்#85701391: அம்னோ/பிஎன் -னில் இது ஆர்வத்தைத் தூண்டும் மாற்றம். தெங்கு அட்னான் சொல்வது உண்மை என்றால் ‘தூய்மையான’ மனிதர்கள் ‘வெற்றி பெறும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள்’ என அர்த்தம்.

எனவே அந்த பரிசுத்தமான வேட்பாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட குடும்ப சொத்துக்கள் பற்றி வேட்பாளர் நியமன நாளுக்கு முன்னர் அறிவிப்பார்களா ?

அவ்வாறு செய்வது அம்னோ/பிஎன் இறுதியில் மாற்றமடைகின்றது என்பதற்குத் தக்க சான்று ஆகும். அதன் வழி தற்போதைய ‘ஊழல்’ தலைவர்களுக்குப் பதில் புதிய ‘களங்கமில்லாத’ தலைவர்களைத் தயார் செய்ய முடியும்.

லிம் சொங் லியோங்: அது உண்மையில் பெரிய பொய். தனது வேட்பாளர்கள் ஊழலிலிருந்து விடுபட்டவர்கள் என அம்னோ மட்டுமே பிரகடனம் செய்ய முடியும்.

உலகில் எந்தக் கட்சியும் அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாது. காரணம் வேட்பாளர்களுடைய உண்மை நிலையை யாரும் அறிய முடியாது. அவர் யாரை ஏமாற்ற முயலுகின்றார் ?

TAGS: