பிஎன் ஆட்சியைத் தொடருவதற்குக் காரணங்களைத் தேடுகின்றது

najib“50 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் பொது மக்கள் பிஎன் -னுக்கு இன்னொரு கட்டளை வழங்க வேண்டும் என்பதற்குத் தகுந்த காரணம் ஏதுமில்லை. மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது.”

நஜிப் தமது புத்தாண்டுச் செய்தியில் தெளிவான கட்டளையைக் கோருகிறார்

சக மலேசியன்: அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் அரசாங்கத்தை அதிகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்புவதற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை நஜிப் தமது புத்தாண்டுச் செய்தியில் மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

2008 தேர்தலில் பிஎன் ஐந்து மாநிலங்களில் தோல்வி கண்டது. என்றாலும் அதனுடைய திறமைக் குறைவைச் சரி செய்யவும் பேராசையையும் அத்துமீறல்களையும் தடுக்கவும் கூட்டரசு அரசாங்கத்தை நிர்வகிக்கும் அதிகாரம் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் முழுத் தவணைக் காலம் முடிந்துள்ளது. பிஎன் ஆற்றலை மெய்பிப்பதற்கு என்ன விஷயங்கள் உள்ளன ?

கடந்த 20 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியை நிலைக்குத்தச் செய்து விட்ட அத்துமீறல்கள் நஜிப் அரசாங்கத்தின் கீழ் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கி விட்டன. இப்போது அவை நாட்டின்  உயிர் வாழ்வுக்கே உலை வைக்கின்றன.

அன்றாடம் அதன் அதிகார அத்துமீறல்கள், ஊழல்கள், மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. தீய வழியில் விரைவாக பணத்தைத் தேடி அதனை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதிலேயே குறியாக இருக்கும் பிஎன் தலைவர்கள் இப்போது நாட்டை ஆட்சி புரிவதாகத் தோன்றுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் என் வாக்கு பிஎன் தலைவர்களுக்கு இல்லை.

சின்ன அரக்கன்: மலேசியா ஆய்வுகளில் 10, 20 அல்லது 50க்குள் இருக்கலாம். அவை வெறும் எண்களே.  நாட்டின் எதிர்காலத்துக்கு அவை உத்தரவாதமளிக்கவில்லை.

அரசாங்கத் தலைவர்களுடைய நேர்மை, வெளிப்படை, பொறுப்பு ஆகியவை மட்டுமே நாட்டை எப்போதும் உயர்ந்த நிலையில் வைத்திருக்கும்.

அந்தப் பண்புகள் அரசாங்கத் தலைவர்களிடம் இல்லை. பிஎன் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் துணிந்து செயல்படுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு முதுகெலும்பு இல்லை. பிஎன் மீது எனக்கு நம்பிக்கை போய் விட்டது.

நான் ஏன் பிஎன் -னுக்கு இன்னொரு கட்டளை வழங்க வேண்டும் ?.

மலேசிய மக்கள்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே என்னுடைய வாக்கும் என் குடும்பத்தினரின் வாக்குகளும் உங்களுக்கு இல்லை. அவை மில்லியன் வாக்குகளில் ஒன்றாக இருக்கலாம். என்றாலும் அது உங்களுக்கு கிடையாது.

மாற்றத்தின் விளிம்பில் நாம் இப்போது நிற்கிறோம். நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதனை நிச்சயம் செய்வோம். மாற்றத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பார்வையாளன்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உருவாக்கிய ஊழல் முறையால் மலேசியா 2001க்கும் 2010க்கும் இடையில் 871 பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாக சுயேச்சை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஊழல் பிஎன் -னுக்கு 2018ம் ஆண்டு வரை ஆட்சி புரிய கட்டளை வழங்கப்பட்டால் அதே அளவு தொகையும் நாட்டிலிருந்து வெளியேறும்.

இதனை அறிந்தும் ஒரு முட்டாள் தான் நஜிப் பேச்சுக்கு மயங்கி பிஎன் -னுக்கு வாக்களிப்பான்.

கெட்டிக்கார வாக்காளன்: 50 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் பொது மக்கள் பிஎன் -னுக்கு இன்னொரு கட்டளை வழங்க வேண்டும் என்பதற்குத் தகுந்த காரணம் ஏதுமில்லை. மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது.

ராக்யாட் மலேசியா: மாற்றம் நாட்டை நாசப்படுத்தி விடாது. மற்ற நாடுகள் ஆளும் கட்சியை எந்தப் பிரச்னையும் இல்லாமல் மாற்றி விடுகின்றன. தோல்வி காண்பதைக் கண்டு ஏன் பிஎன்/அம்னோ அஞ்சுகின்றது.

எதிர்க்கட்சிகள் பல முறை தோல்வி கண்டுள்ளன. அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. சுயநலப் போக்குடையவர்களே தோல்வி ஏற்க மறுத்து நாட்டை நாசப்படுத்துவர்.

அனாக் ஜேபி: மலேசிய வரலாற்றில் பிரதமர் ஒருவருடைய தனிப்பட்ட நேர்மை குறித்து இது வரை சர்ச்சை எழுந்ததே இல்லை. ஆனால் இப்போது நஜிப் சர்ச்சைக்குரியவராகி இருக்கிறார்.

நாட்டை ஆளுவதற்கும் வழி நடத்துவதற்கும் நஜிப்ப்புக்கு தார்மீக அதிகாரமே இல்லை. அவர் பதவி விலகுவது தான் சரியான வழி.

அமோக்கர்: நான் பிஎன் -னுக்கு வாக்களித்து சூதாட விரும்பவில்லை. அதற்கு இரண்டே வார்த்தைகள் நஜிப் அவர்களே- ஷாரிஸாட் ஜலில்.

 

TAGS: