பணம் செலுத்தப்பட்டதை நிரூபியுங்கள் அல்லது பிஎன் விளம்பரத்தை நிறுத்துங்கள் என டிஏபி கேடிஎம்-மிடம் சொல்கிறது

BNபிஎன் கம்யூட்டர் விளம்பரத்துக்கு பணம் கொடுக்கப்பட்டதை KTMB என்ற மலாயன் ரயில்வே நிறுவனம் மெய்பிக்க வேண்டும் இல்லையென்றால் அந்த இயக்கத்தை அது நிறுத்த வேண்டும் என சிலாங்கூர் டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது.

“Sayangi BN விளம்பரத்துக்கு பிஎன் சிலாங்கூர் KTMB-க்கு செலுத்திய மொத்தப் பணத்தையும் விளம்பர காலம், சம்பந்தப்பட்ட மொத்த ரயில் பெட்டிகள், விளம்பரத்துக்குக் கழிவுத் தொகை ஏதும் கொடுக்கப்பட்டதா போன்ற  மற்ற விவரங்களையும் KTMB தெரிவிக்க வேண்டும்.”

“KTMB அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமாகும். தங்கள் அரசியல் பிரச்சாரத்திற்கு ஆளும் கட்சிகள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.”

“அந்த விளம்பரங்களுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை என்றால் KTMB அந்த விளம்பரத்தை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என டிஏபி சிலாங்கூர் பொருளாளர் ஹன்னா இயோ ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.BN1

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒடுகின்ற கம்யூட்டர் ரயில்களில் கடந்த மாதத்திலிருந்து பிஎன் சிலாங்கூர் வீடியோக்கள் ஒளிபரப்பப்படுவதாக நேற்று செய்தி வெளியானது.

அது பணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என KTMB தலைவர் முகமட் ஜின் முகமட் கூறினார். அவர் பிஎன் சிலாங்கூர் செயலாளரும் ஆவார்.

கடந்த ஏப்ரல் மாதம் சிலாங்கூரில் உள்ள தனது எல்லா ரயில் நிலையங்களிலும் பிஎன் கொடிகளைப் பறக்க விடுவதற்கும் KTMB அனுமதித்தது.

அடுத்த தேர்தலில் சிலாங்கூரை எதிர்க்கட்சிகளிடமிருந்து கைப்பற்றப் போவதாக பிஎன் அடிக்கடி கூறி வருகின்றது.

பிஎன் சிலாங்கூருக்கு சந்தை விகிதங்களுக்கு ஏற்ப KTMB கட்டணம் விதித்ததா என்பதை அறிந்து கொள்ளவும் தாம் விரும்புவதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான இயோ தெரிவித்தார்.

“இது போன்ற அரசியல் விளம்பரங்களுக்கு கட்டண விகிதங்கள் கோரி டிஏபி சிலாங்கூர் KTMB-க்குக் கடிதம் எழுதும் என்றும் KTMB பாரபட்சம் காட்டாமல் பிஎன் சிலாங்கூருக்கு வழங்கிய அதே தரத்தைப் பின்பற்றும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என இயோ மேலும் சொன்னார்.

 

TAGS: