நமக்கென்று ஓர் அமைப்பும் நமக்கென்று ஒரு நாடும் உருவாகினால்தான் இவ்வுலகில் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழமுடியும் என்கிறார் தமிழகத்தில் இயங்கும் தமிழர் களம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன்.
செம்பருத்திக்கு இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழகத்திலும் சரி உலகமெங்கிலும் சரி தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்ற நிலை வரும்போது தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது வெகுதொலைவில் இல்லை.
அதற்கு, உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு தமிழர்களிடையேயும் தமிழன் தமிழச்சி என்ற உணர்வு வரவேண்டும்; அப்படி ஒரு உணர்வு வந்துவிட்டால் தமிழனை வீழ்த்த இந்த உலகில் எவனும் இல்லை என்றார் அரிமாவளவன்.
வெறும் 48 பேரை மக்கள் தொகையாக கொண்ட பிட்காரின் தீவும், வெறும் 700 பேரை மக்கள் தொகையாக கொண்ட வத்திக்கானும், ஐநா மன்றத்தில் உறுப்பிய நாடுகளாக உள்ளது. ஆனால் 12 கோடி தமிழர்களுக்கு ஐ.நா மன்றத்திலும், உலகளவிலும் குரல்கொடுக்க ஒரு நாடு இல்லை.
ஒரு அங்குல நிலம் கூட இல்லாமல் இருந்த யூதர்கள் இன்று தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கி அதனை உலகில் வலிமையான நாடாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் உலகெங்குமுள்ள 12 கோடி தமிழர்களும் அடிமைகளாக நசுக்கப்படுகிறார்கள் என அவர் கூறினார்.
செம்பருத்தி இணையத்தளத்திற்கு தமிழர் களம் அரிமாவளவன் அவர்கள் வழங்கிய முழுமையான நேர்காணலை காணொளி வடிவில் காணலாம்.
CLICK HERE : VIDEO | 13.01 MINS