டிஏபி தேர்தலில் ‘தவறு’ நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதை கெரக்கான் சாடுகிறது

dapடிஏபி மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலில் தவறு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதை கெரக்கான் சாடியுள்ளது. பொது மக்கள் குறை கூறியதைத் தொடர்ந்து மலாய் உறுப்பினர் ஒருவர் மத்திய நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஒரு தந்திரம் அது என அது கூறிக் கொண்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டிஏபி கட்சித் தேர்தல் முடிவுகள் என அண்மையில் அறிவிக்கப்பட்டது “கேலிக்கூத்து, மலேசிய அரசியல் வரலாற்றில் பெரிய நகைச்சுவை” என கெரக்கான் துணைத் தலைவர் சாங் கோ யூன் தெரிவித்தார்.

“குழுவுக்கு மலாய்க்காரர் ஒருவர் தேர்வு செய்யப்படாதது குறித்து பொது மக்களிடையே எழுந்துள்ள ஆத்திரத்தைத் தணிப்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டது என அர்த்தமா ?”

“முடிவுகள் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளதை அது காட்டவில்லையா ? பொது மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். முன்னுதாரணம் இல்லாத அந்த முடிவு குறித்து அவர்கள் வியப்படைந்துள்ளனர்.”dap1

“அந்தக் குளறுபடிய டிஏபி விளக்க வேண்டும்,” என சாங் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய் வேட்பாளர்களில் யாரும் தேர்வு செய்யப்படாதது பற்றி கெரக்கான் தலைவர்களும் மற்ற பிஎன் தலைவர்களும் பெரும் சர்ச்சையை கிளப்பினர்.

டிஏபி தான் கூறிக் கொள்வதைப் போல பல இனக் கட்சி அல்ல என்றும் அவர்கள் கூறிக் கொண்டனர்.

தேர்தல் முடிவுகளில் தவறு நிகழ்ந்து விட்டதாக நேற்றிரவு டிஏபி அறிவித்தது. அதனைச் சரி செய்த பின்னர் பினாங்கு முதலமைச்சருடைய அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி மத்திய நிர்வாகக் குழுவில் ஒர் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

dap2டிஏபி அறிவிப்பைத் தொடர்ந்து அதன் பரம எதிரியும் முன்னாள் பினாங்கு நிர்வாகமுமான கெரக்கான் டிஏபி-யைக் குறை கூறியது.

2008 பொதுத் தேர்தலில் கெரக்கான் டிஏபி-யிடம் பினாங்கை இழந்தது.

அந்தத் தவறை உள் ஆய்வுகள் கண்டு பிடித்து அதனை வெளி ஆய்வாளர்கள் உறுதி செய்த பின்னர் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட முடிவுகளை அறிவிக்க தாங்கள் முடிவு செய்ததாக டிஏபி சொல்லியிருப்பது அதில் வெளிப்படையான போக்கு இல்லை என்பதைக் காட்டுவதாகவும் சாங் சொன்னார்.

“மாற்றப்பட்ட கட்சித் தேர்தல் முடிவுகள் டிஏபி தேர்தல் முறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது. அது, டிஏபி பின்பற்றுகின்ற திறமை, பொறுப்பு, வெளிப்படை என்ற கோட்பாட்டை குப்பைக்குள் தள்ளியுள்ளது.”

“கட்சியில் திறமை, பொறுப்பு, வெளிப்படை ஏதுமில்லை என்பதை அந்த கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தி விட்டன,” என்றும் சாங் தெரிவித்தார்.