சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு 4 மாடி கட்டிடங்கள் மூன்று கட்டிக்கொடுக்கப்படும் என கடந்த ஆண்டு காப்பாரில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது பிரதமர் நஜிப் வாக்குறுதியளித்தார். எனினும், அதற்கான முழுமையான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கா. உதயசூரியன்.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு 4 மாடி கட்டிடங்கள் மூன்று கட்டிக்கொடுக்கப்படும் என பத்திரிக்கை வழி தொடர்ச்சியாக செய்திகள் வந்தாலும், இறுதியாக கிடைத்த தகவலின்படி, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு ஒரு 3 மாடி கட்டிடம் மட்டுமே கிடைக்கும் என தெரிவந்துள்ளதாக கூறிய உதயசூரியன், 4 மாடி கட்டிடங்கள் மூன்றுக்கும், ஒரு 3 மாடி கட்டிடத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
இது நம்மை ஏமாற்றும் வேலை. காலங்காலமாக இதுபோன்ற வெற்று வாக்குறுதிகளை வழங்கி நம்மையும், நமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பகடக் காயாக பயன்படுத்தி அரசியல் நடத்திவருகிறார்கள்.
தமிழ்ப் பள்ளிகளை வைத்துக்கொண்டு கேவலமான அரசியல் நடத்துவதை இவர்கள் முதலில் நிறுத்திக் கொள்ளவேண்டும் என உதயசூரியன் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பிரதமர் தமிழ்ப்பள்ளிக்கு அறிவித்த 4 மாடி கட்டிடங்கள் மூன்றும், இன்னும் ஏன் கட்டிக்கொடுப்படவில்லை? எப்போது கட்டிக் கொடுக்கப்போகிறீர்கள்? என்பதை இந்நாட்டின் குடிமக்களாகிய நாம் கேட்கவேண்டும்.
இதனை நாம் தட்டிக் கேட்காவிட்டால் இன்னும் இழிவான நிலைக்கே தள்ளப்படுவோம் என உதயசூரியன் கூறினார்.
அவரது முழு உரையையும் காணொளி வடிவில் இங்கே காணலாம்.