டிஏபி தேர்தல் குளறுபடியில் சொந்தமாகவே கோல் போட்டுக் கொண்டது

dap“கட்சித் தேர்தல்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் நடைபெறுவதில்லை. மிக முக்கியமான அந்த நிகழ்வு எப்படி மோசமாக நடத்தப்பட்டது ?”

டிஏபி தேர்தல் முடிவுகளில் தவறு ஜைரில் தேர்வு செய்யப்பட்டார்

கோசோங் கபே: அது எப்படி நிகழ்ந்திருக்க முடியும் என நாம் சிந்திக்கும் வேளையில் அதிகம் தெரியாத ஒருவருக்கு எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான வாக்குகள் கிடைத்தது அனுபவம் வாய்ந்தவர்களை ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்ய வைத்திருக்க வேண்டும்.

நாம் எப்போது எண்ணிக்கைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விடுகிறோம். இது அனைவருக்கும் நல்ல பாடமாகும். நேர்மை, வெளிப்படை, பொறுப்பு ஆகிய தனது கோட்பாடுகளை வலியுறுத்தும் டிஏபி அந்தத் தவறை ஒப்புக் கொண்டது குறித்து பெருமைப்படலாம்.

உங்கள் அடிச்சுவட்டில்: நேர்மைக்கும் வெளிப்படைத் தன்மைக்கும் அந்த தகவல் வெளியிடப்பட்டது கட்சிக்கு நல்லது என்றாலும் ஒரு வேலையச் செய்வதற்குச் சரியான மனிதர்களை நியமிப்பது பற்றி அந்தக் கட்சி சிந்திக்க வேண்டும்.

கட்சித் தேர்தல்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் நடைபெறுவதில்லை. மிக முக்கியமான அந்த நிகழ்வு எப்படி மோசமாக நடத்தப்பட்டது ?

கண்காணிப்போ, மேற்பார்வையோ இல்லை என்று தான் நான் எண்ணுகிறேன். அந்தத் தவறு காரணமாக மலாய் வேட்பாளர் ஒருவர் பலியாகி விட்டார் என்பது ஒரு விஷயமே அல்ல.

என்றாலும் அந்தப் பாதிப்பு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கிற்கு ஏற்பட்டிருந்தால் விசாரணை உடனடியாக முழுமையாக நிகழ்ந்திருக்கும்.

வீரா: அரசியலில் வலிமை இல்லாத புது முகம் ஒருவர் ஐந்தாவது இடம் கிடைத்த போதே டிஏபி தேர்தல் குழு  ஏதோ குளறுபடி இருப்பதாக சந்தேகப்பட்டு பதிவுகளை சரி பார்த்திருக்க வேண்டும்.

அது சாதாரணத் தவறு என்றாலும் கடுமையானதாகும். உண்மையை மறைக்காமல் வெளிப்படையாக நடந்து கொள்ள கட்சி முடிவு செய்ததை நான் பாராட்டுகிறேன்.

இனி பிஎன் உறுப்புக் கட்சிகளிடமிருந்தும் அவற்றின் அனுதாபிகளிடமிருந்தும் கண்டனங்களை எதிர்பார்க்கலாம்.

ஜைரில் கிர் ஜொஹாரி உண்மையான மலாய்க்காரர் அல்ல எனக் கூட அவர்கள் சொல்லலாம்.

எஸ்கேடி: டிஏபி மத்திய நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மலாய்க்காரர் ஒருவரை வைப்பதற்கு லிம் குவான் எங் வகுத்த சதித் திட்டம் அது என்று கூட பிஎன் கூலிகள் சொல்லப் போகின்றனர்.

ஏபிபிஎன்: அந்தத் தவறைக் கண்டு பிடித்து சரி செய்ய ஏன் மூன்று வாரங்கள் பிடித்தது ? இங்கு ஏதோ குழப்பமாக உள்ளது. டிஏபி திறமையானது அல்ல எனச் சொல்ல வேண்டாம். உண்மை வெளியிடப்பட்டதாக நான் எண்ணவில்லை. யாரோ ஒருவர் எதனையோ மறைக்க முயலுகிறார். உண்மை வெளி வரும் முன்னர் டிஏபி-யே அதனைச் சொல்லி விடுவது நல்லது.

லிம் சொங் லியோங்: மலாய்க்காரர் ஒருவரை கட்சிப் பேராளர்கள் தேர்வு செய்துள்ளது என்பது மீது டிஏபி  ‘நிம்மதி’ அடையக் கூடாது. ஒவ்வொருவரும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டுமே தவிர இன அடிப்படையில் அல்ல. அது தான் ஜனநாயகம்.

பூச்சோங் மாலி: அந்தத் தவறு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. என்றாலும் வெளிப்படைப் போக்கையும் நேர்மையையும் நிலை நாட்டியது பாராட்டப்பட வேண்டும்.

SiPekTuLan-BN-Liao: டிஏபி தேர்தல் அலுவலகம் அந்தக் குளறுபடிக்கான காரணத்தைக் கண்டறிந்து எந்தத் தவறும் நிகழாத தேர்தல் முறையை அமலாக்க வேண்டும்.

கண்டபிரிகியான்: தனது தவறை ஒப்புக் கொண்டு தூய்மைப்படுத்திய டிஏபி-க்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் அம்னோ/பிஎன் அதனைப் பெரிதாக்கும்.

டிஏபி தவறைத் திருத்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதால் மக்கள் அதனை மன்னித்து பாராட்டக் கூடும்.

அடையாளம் இல்லாதவன்_3ec6: டிஏபி தவறு செய்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதற்காக அதனை நான் பாராட்டுகிறேன்.

 

TAGS: