மேன்மை தங்கிய சுல்தான், இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு; ஆனால்….

sultan“பெரும்பான்மை முஸ்லிம் உலகம் அதனை ஆட்சேபிக்கவில்லை. சபாவிலும் சரவாக்கிலும் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.”

குவான் எங்-கின் ‘அல்லாஹ்’ வேண்டுகோள் மீது சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி

யென்னொ: நான் சிலாங்கூர் சுல்தானை மதிக்கிறேன். அவர் நன்கு கற்றறிந்தவர்.  ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட முறையீடு இன்னும் தேங்கியிருப்பது நிச்சயம் அவருக்குத் தெரியும். தாம் கூட்டரசு அரசமைப்புக்கு மேலானவர் அல்ல என்பதும் சுல்தானுக்கு நிச்சயம் தெரியும்.

ஆகவே அது போன்ற ஆணை மலேசியாவில் பின்பற்றப்படுகின்ற அரசமைப்புக்கு உட்பட்ட அரசர் ஆட்சிக்கு பொருத்தமானதாகத் தெரியவில்லை.

அடையாளம் இல்லாதவன்_ABG: இஸ்லாம் மிகவும் தவறாகப் பயன்படுத்துகின்ற சமயம் ஆகும். அதனைச்செய்கின்றவர்களும் முஸ்லிம்களே. பிரார்த்தனை செய்யும் போது முஸ்லிம் அல்லாதவர் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை இறைவனைப் போற்றும் வகையில் பயன்படுத்துகின்றனர். சீக்கியர்கள், இந்துக்கள், மற்ற முஸ்லிம் அல்லாத சமயங்கள் பிரார்த்தனையில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.

மத்திய கிழக்கில் முஸ்லிம் அல்லாதவர் அந்த சொல்லைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவிலும் பிரச்னை இல்லை.

நாட்டின் அரசமைப்பு வரையறுத்துள்ள, குறித்துள்ள பொறுப்புக்கு அப்பால் சுல்தான் போகக் கூடாது. ‘அரச குடும்பத்தினர் பார்க்கப்பட வேண்டுமே தவிர கேட்கப்படக் கூடாது’ எனச் சொல்வதிற்கும் காரணம் உண்டு.

சுவர்க் கண்ணாடி: சுல்தான் அனைவருக்குமா அல்லது முஸ்லிம்களுக்கு மட்டுமா ? சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்துக்கும் அவர்தான் சுல்தான் என நினைத்திருந்தேன். அந்த ஆணை வழி அவர் தமது இறையாண்மையைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு வேளை அவரது செல்வாக்கு கூட குறைந்திருக்கலாம்.

மலேசியா எழுச்சி பெற வேண்டும்: பெரும்பான்மை முஸ்லிம் உலகம் அதனை ஆட்சேபிக்கவில்லை. சபாவிலும் சரவாக்கிலும் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இஸ்லாமியப் போதனைகளுடன் அது சம்பந்தப்படாத வரையில் நமது மலேசிய முஸ்லிம் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் ஆட்சேபம் இருக்காது என நான் எண்னுகிறேன்.

சீ ஹோ சியூ: மலாய் மொழியில் இறைவனைக் குறிப்பதற்கு துஹான் என்ற சொல் பயன்படுத்தப்படுவதை இளம்  வயதிலிருந்து நான் அறிவேன். அதே வேளையில் திருக்குர் ஆனில் இறைவனைக் குறிக்க முஸ்லிம்கள் அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

‘இறைவனை’ குறிக்க ‘அல்லாஹ்’ சொல்லும் பயன்படுத்தப்பட்டாலும் இஸ்லாத்துக்கு மரியாதை கொடுப்பதற்கு அடையாளமாக ‘அல்லாஹ்’ சொல்லை முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாக நாம் கருத வேண்டும்.

பைபிளில் இறைவனைக் குறிக்க கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் தீய நோக்கம் இருப்பதாக நான் எண்ணுகிறேன். முஸ்லிம்களை குழப்புவதே நோக்கம் என நான் கருதுகிறேன்.

கிறிஸ்துவர்கள் மற்றவர்களை கீழறுப்புச் செய்வதற்குப் பதில் மற்ற சமயங்கள் மீது மரியாதை காட்ட வேண்டும்.

ஒய்எப்: சீ ஹோ, முகமது நபி பிறப்பதற்கு முன்பே அரபு கிறிஸ்துவர்கள் அந்த சொல்லைப் பயன்படுத்தி  வந்துள்ளனர்.

தீய நோக்கம் என நீங்கள் சொல்வது மிகவும் அபத்தமானது. அரபு மொழியில் எழுதப்பட்ட பைபிளைப் போய் பாருங்கள். நீங்கள் அந்த வார்த்தையைக் காணலாம்.

உள்ளூர் மொழிகளுக்கும் அது பொருந்தும். காரணம் அவை அரபு மொழியிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்கியுள்ளன. ஒரு வேளை நமது உள்ளூர் மொழியில் ரோமன் எழுத்துக்களில் எழுதப்பட்ட முதலாவது சமயப் புத்தகமாகக் கூட பைபிள் இருக்கலாம்.

ஆகவே கிறிஸ்துவர்களை நீங்கள் குற்றம் சாட்டுவது அபத்தமானது. உண்மை நிலவரங்களை அறியாமல் பேச வேண்டாம். எதுவும் அறியாத பலர் அந்த விஷயம் மீது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். எங்களுக்கு இன்னொருவர் தேவை இல்லை.

முகமட் அப்துல் மாலிக்: இறைவனுக்கு பல பெயர்கள் உண்டு. மலேசியாவில் ஒரு வேளை சீக்கிய சமயத்தைத்தவிர வேறு எந்த சமயமும் பயன்படுத்தாத வேளையில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும் ?

‘அல்லாஹ்’ என்ற சொல்லை சீக்கியர்கள் பயன்படுத்துவதற்கு முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவித்ததாக நான்கேள்விப்படவே இல்லை. கிறிஸ்துவர்கள் அல்லது அவர்களது ஆயர்கள் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்துவது மீது இப்போது ஏன் திடீரென அக்கறை பிறந்துள்ளது ?

முஸ்லிம்களை கிறிஸ்துவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் எனக் கூறப்படுவது முஸ்லிம்களை துண்டி விடும் நோக்கத்தைக் கொண்டது தானே ?  உலகில் ஏற்கனவே பல சமயப் பூசல்கள் நிறைந்துள்ளன. ஒர் அம்சத்தை நிரூபிக்க இன்னொரு பூசல் தேவையா ?

மனோ: துவாங்கு, ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ என்ற என் இந்து பாடலை நான் பாடக் கூடாது என நீங்கள் சொல்ல வருகின்றீர்களா ? அதில் இறைவன் சிவபெருமானைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஈஸ்வரா அல்லாஹ்’ என்ற சொல் அந்தப் பாடலில் இறைவனைக் குறிக்கிறது.

ஆகவே இப்போது என்ன சொல்வது ?

நீலகிரி: முஸ்லிம் அல்லாதவர் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குச் சிலாங்கூர் சுல்தான் தடை விதித்துள்ளார். சிலாங்கூர் மாநில கீதத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் பாடக் கூடாது என்பது அதன் அர்த்தமா ?

அல்லது மாநில கீதத்தில் மூன்றாவது வரியான  “Allah lanjutkan usia Tuanku” என்ற வரியைத் தவிர மற்றவற்றைப் பாட முஸ்லிம் அல்லாதவர் அனுமதிக்கப்படுகின்றனரா ?

குழப்பத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் ? மாநில கீதம் பல தசாப்தங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட போது அது சரியாக இருந்ததா ?

ஜீன் பியாரே: மலேசியாகினி சந்தாதாரர்கள் 300க்கும் மேற்பட்ட கருத்துக்களை வழங்கியுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் சுல்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது மீது ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TAGS: