ஊழியர் சேம நிதி, ஒய்வூதிய நிதி ஆகியவை FGV பங்குகளில் 75 மில்லியன் ரிங்ட்டை இழந்துள்ளன

rpf1FGV எனப்படும் Felda Global Ventures Holdings நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதின் மூலம் இபிஎப் என்ற ஊழியர் சேம நிதிக்கும் KWAP என்ற ஒய்வூதிய நிதி நிறுவனத்துக்கும் மொத்தம் 75 மில்லியன் ரிங்கிட் ‘காகித’ இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிகேஆர் கூறிக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து FGV பங்குகளை வாங்க வேண்டாம் என சந்தை ஆய்வாளர்கள் பரிந்துரை செய்த போதிலும் ஓய்வூதிய நிதிகளான அவை இரண்டும் அந்தப் பங்குகளை வாங்கியதே அதற்குக் காரணம் என்று பிகேஆர் கட்சியின் வர்த்தக, முதலீட்டுப் பிரிவின் தலைவர் வோங் சென் கூறினார்.

ஊழியர் சேம நிதியும், ஒய்வூதிய நிதியும் பங்குகளை வாங்கிய நடவடிக்கை மிகவும் முரணானதாகும். ஒய்வூதிய நிதிகள் அவ்வாறு வாங்கியிருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

 

TAGS: